சத்குரு: என் கூடவே இருப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்... சட்டம் அடித்ததுபோல் எதுவும் நேராக நிற்பது எனக்குப் பிடிக்காது. நான் எடுக்கும் வகுப்புகளில் கூட, என் நாற்காலி நுழைவாயிலுக்கு நேர் எதிரே இருக்காது. அது ஒரு விதமாக வைக்கப்பட்டிருக்கும். என் சிறுவயதிலும் அப்படித்தான். என் சைக்கிளை ‘ஸ்டேன்ட்’ உபயோகித்து நிறுத்தமாட்டேன். அதை சுவற்றில் சாய்த்தேதான் நிறுத்துவேன். மோட்டார்-சைக்கிளுக்கு மாறியபின், அதையும் கூட கைப்பிடியில் சாய்த்தவாறேதான் நிறுத்தி வைப்பேன். வேறு வழியில்லை என்றால்... அப்போதும் ‘ஸைட் ஸ்டேன்ட்’ பயன்படுத்துவேனே தவிர, ‘மெயின் ஸ்டேன்ட்’ உபயோகித்து என் வண்டியை நிறுத்தமாட்டேன். இது என் வழக்கம் மட்டுமல்ல, இதை ஒரு மதமாகவே கடைபிடித்தேன். யாராவது என் மோட்டர்-சைக்கிளை ‘மெயின் ஸ்டேன்ட்’ போட்டு நிறுத்தியிருப்பதைப் பார்த்தேன் என்றால், அதை அவமானமாக உணர்ந்து, உடனடியாக அதை மாற்றி நிறுத்திவிடுவேன்.