புற்றுநோயை அண்ட விடாது மஞ்சள்!
புற்றுநோயை அண்ட விடாது மஞ்சள்!
டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:
தமிழ்நாடு தனக்கே உரிய பெருமைமிக்க அடையாளங்களாய் தேனினும் இனிய தெள்ளு தமிழ், வானுயர்ந்த கோபுரங்கள், நாட்டியம் போன்ற கலைகளையும், வள்ளுவன், பாரதி, பெருந்தலைவர் போன்ற ஆளுமைகளையும் கொண்டுள்ளது. அதுபோல், பயிர்களில், மண்ணுக்கடியில் வளரும் மஞ்சள் நம் தமிழ் மண்ணின் `எக்ஸ்லூசிவ்` அடையாளமே! ஏனெனில், மனித நாகரிகம் தோன்றிய காலம் துவங்கி இன்றைய தேதி வரை இந்த பன்முகப் பயிரின் தாயகம் தமிழகம்தான் என்றால் மிகையில்லை.
உலகின் மஞ்சள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 90% என்றால், அதில் 50% சதம் தமிழகமே. ஆலப்புழா, ராஜ்பூர், நிஜாமாபாத் என பல ரகங்கள் இருந்தாலும், உலக அளவில் நம் ஈரோடு, சேலத்தின் வகைகளான பெரிய நாடான், சின்ன நாடானுக்குத்தான் மவுசு கூடுதலாம்.
மஞ்சள் என்றால் மங்களம் என்பதும், ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதும் நமக்கு யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனினும், மஞ்சள் குறித்த `க்ளோசப் பார்வை`இங்கே...
கேன்ஸரே போ.. போ...
அனுதின உணவில் சாம்பாராய், காய், கறி பெரட்டலாய் மஞ்சளை பயன்படுத்தாத வீடு இந்த தேசத்திலேயே கிடையாது.
“சாம்பார் தின்கறத பெருமை பேசுறது அவசியமா டாக்டர் இப்போ?!” என அங்கலாய்க்கத் தோன்றுகிறதா?
வெள்ளைக்கார மருத்துவர்கள் 90களின் மத்தியில் சிந்திக்க துவங்கினர். “அட, நம்ம நாட்டுல இந்த குடல் புற்றுநோய் அதிகமாக இருக்குதே, ஆனால் இந்தியாவிலோ இது மிக சொற்பமா இருப்பதற்கு காரணம் என்ன?” என்று...
மிகத் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு... இந்தியர்களின் சைவ உணவு பழக்கமே, அவர்களின் கேன்ஸர் காப்பு என்பதை அறிவித்தனர். அதிலும் மஞ்சள் கலந்த பருப்பு, சாம்பாரை அடிக்கடி பயன்படுத்துவதை தலைமை சிறப்பாய் சுட்டுகின்றனர்.
Subscribe
மேலும், அசைவ உணவுகளிலும் கூட மஞ்சள் கலந்த மசாலாவை தடவி சமைப்பதன் மூலம், அசைவ உணவின் கேன்ஸர் காரணியான HCA (Heterocyclic Amine) 40% வரை குறைக்கப்படுகிறதாம். கேன்சர் தடுப்புக்கு மட்டுமல்ல; மார்பு, கர்ப்பப் பை, குடல் புற்றை குணப்படுத்தும் மருந்தாகவும் மஞ்சளை உபயோகிக்கும் வழிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
குர்குமின் எனும் போர் வீரன்
கடந்த 20 வருடங்களாய் மருத்துவ உலகின் கவனத்தை ஈர்த்திருப்பது “குர்குமின்” எனும் மூலப் பொருள். இது மஞ்சளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் செயல்திறன்மிக்க மூலக்கூறாக (active ingredient) அடையாளம் காட்டப்படுகிறது. மஞ்சள் பொடிக்கு நிறமளிக்கும் இந்த குர்குமின், மிகத் தீவிரமான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்திய மூலிகைகளில் ஒன்று.
நவீன வாழ்க்கை முறை நோய்களான...
- எலும்புத் தேய்மானம்
- இருதய நோய்/இரத்தக் கொதிப்பு
- அலர்ஜி/ஆஸ்துமா
- சர்க்கரை நோய்
- கேன்ஸர்
- வயோதிகர்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு, புத்தி சுகவீனம் (Alzheimer’s Disease)
இவற்றைப் பொருத்து நம் மொத்த மக்கள் தொகையையே சிம்பிளாக இரண்டாக பிரித்துவிடலாம்.
- மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
- பாதிக்கப்பட காத்திருப்போர். ஆமாங்க, WAITING LIST
வேடிக்கைதான் என்றாலும், இதை வாசிக்கும் நீங்கள் பெரும்பாலும் இந்த 2ல் ஒன்றின் கீழ் அடங்குகிறீர்கள் என்பதுதான் உண்மை. இது நவீனம் நமக்குத் தந்த அற்புத பரிசு. இந்த நாட்பட்ட நோய்கள் அனைத்திற்கும், உங்கள் செல்களின் அளவில் ஏற்படும் பாதிப்புகளில் இரு அடிப்படை ஒற்றுமைகள் உள்ளன.
- கட்டுப்பாடு இல்லாத ஆக்சிஜெனேற்ற அழுத்தம் (Oxidative Stress)
- உங்கள் சொந்த செல்களுக்கு எதிராகவே செயல்படத் துவங்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் (Chronic Inflammation)
உங்கள் உடலிலுள்ள ஆரோக்கியமான செல்களை சிதைத்து, அழித்து, நோய் வளர உங்கள் உடலிலேயே ஏற்படும் இந்த இரு மாற்றங்களும்தான் காரணம்!
மஞ்சளின் குர்குமின், இந்த ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீரமைப்பதிலும் மிகச் சிறந்த போர் வீரனைப்போல் செயல்படுவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
எனவே, மேற்கண்ட நோய்கள் இருப்பவர்கள் தங்கள் ரெகுலர் மருந்துகளுடன் இதை எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், நோய் வராமல் ஆரோக்கியம் காக்க நினைப்பவர்கள் என அனைவருமே அவசியம் சிறுநெல்லிக்காய் அளவு மஞ்சள் பொடியை, நீருடன் குழைத்து வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்த பலன்களை கொடுக்கும்.
மேலும், சமையலில் செயற்கை நிறமிகளைத் தவிர்த்து மஞ்சள் பொடியை பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
கேன்சர் பற்றி சத்குரு
சத்குரு:
கேன்சர் என்பது உள்ளபடி வெளியில் இருந்து தொற்றும் நோய் அல்ல; அது, உங்கள் உடலே உங்களுக்கு எதிராய் செயல்படும் தன்மை. உடலின் குறிப்பிட்ட சில செல்களின் தவறான வளர்ச்சி உங்களுக்கு எதிராய் திரும்பி விடுகின்றன. சரியான முறையில் சீராக உடலின் உள்கட்டமைப்பை சுத்திகரிப்பது கேன்சர் வராமல் தடுக்கும் ஒரு சிறந்த உபாயம்.
வெறும் வயிற்றில் மஞ்சள் உட்கொள்வது உடல் மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழி. உங்களுக்கு கேன்சர் வந்தபின் இது செயல்படாமல் போகலாம், ஆனால், ஆரோக்கியமாய் இருக்கும்போது தினமும் காலையில் எழுந்ததும் ஒரு சிறு நெல்லிக்காய் அளவு மஞ்சள் மற்றும் வேம்பு உருண்டைகளை உட்கொள்வது, கேன்சர் ஏற்படுத்தக்கூடிய செல்களை உடலில் இருந்து நீக்க வல்லது.
அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம்... பன்முகம் கொண்ட மஞ்சள் மகிமைகள் குறித்து அடுத்த பதிவில் காண்போம்.
குறிப்பு: மஞ்சள் பொடியாகவும், வெறும் வயிற்றில் உண்பதற்கு ஏற்ற மாத்திரையாகவும் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கின்றது.
சென்னை (044) 42128847; 94425 90099
கோவை 83000 55555; (0422) 4218852
சேலம் 94425 48852; (0427) 2333232