கிருஷ்ணா நதியின் கரைகளிலே அமைந்திருக்கும் நகரங்களில் மிகப் பெரிய நகரம் என்றால், அது விஜயவாடா. இந்தியாவின் 4வது பெரிய நதியான இந்த கிருஷ்ணா நதி காய்ந்து போய், சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருப்பதை நேற்று பார்த்தோம். அதுவும் பருவமழைக்குப்பின்! 11வது நாளான இன்று, கிருஷ்ணா நதியின் கரைகளிலே வளர்ந்த விஜயவாடாவில், “நதிகளை மீட்போம்” பேரணி நடக்கிறது.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

தயார்நிலையில் விஜயவாடா

vijaywada-3

vijaywada-4

மொழி-மத பேதமின்றி பேரணிக்கு ஆதரவு

மொழி, மதங்களைத் தாண்டி நாம் அனைவரும் மனிதர்கள். அதன் அடிப்படையில் ஒன்றுபட்டு, நதிகளை மீட்க ஒன்றிணையும் நம் பாரதத்தின் மக்கள். இந்நிகழ்ச்சி ntv, etv ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

vijaywada-5

vijaywada-6

vijaywada-31-small

vijaywada-13

vijaywada-14

vijaywada-15

vijaywada-26

vijaywada-24

vijaywada-22

vijaywada-28

vijaywada-42

பள்ளி மாணவர்கள் பேரணிக்கு ஆதரவு

vijaywada-7

vijaywada-8

vijaywada-10

vijaywada-25

vijaywada-23

சத்குரு, முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை

vijaywada-11

vijaywada-18

vijaywada-12

vijaywada-58

பல விருதுகள் பெற்ற மணல் ஓவியர் வேணுகோபால் அவர்கள்

vijaywada-20

vijaywada-21

vijaywada-59

மரங்களை அழித்ததால் தற்சமயத்தில் எல்லா இடத்திலும் வறட்சி என கங்கை நதி அழுவதாகவும், நாம் மரம் நட ஆரம்பித்ததும் மீண்டும் பழையது போல் தளைத்து தன் அன்பாலும், அரவணைப்பாலும் நம் நாட்டில் வளம் பெருக வழி செய்வாள் தாய் கங்கை நதி என்பது இந்த ஓவியத்தின் பொருள். இடையிடையே பல காட்சிகள் இருந்தாலும், 2 மட்டும் உங்கள் பார்வைக்கு…

பாடகி ஸ்மிதா அவர்கள் மற்றும் த்ரியோரி ராக்-ஃப்யூஷன் பாண்ட்

“நதிகளை மீட்போம்” பேரணிக்காக பாடகி ஸ்மிதா அவர்கள் பிரத்யேகமாக உருவாக்கி வெளியிட்ட “நதி நதி நதி” பாடலை அவர் பாட, அனைவரும் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர்.

Smita

Smita-2

“நதிகளை மீட்போம்” பேரணியை வலியுறுத்தி குழந்தைகள் சிறு நாடகம்

vijaywada-44

vijaywada-45

எங்கு சென்றாலும், தண்ணீர் கிடைக்குமோ, கிடைக்காதோ என்று பயந்து பாட்டிலில் தண்ணீர் சுமக்கும் நிலை வராமல் இருக்க, நம் ஆறுகளில் என்றென்றும் தண்ணீர் மிகுந்து ஓட, இப்போதே “நதிகளை இணைப்போம்” பேரணிக்கு ஆதரவு தெரிவியுங்கள். 80009 80009 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று வேண்டி வலியுறுத்தும் குழந்தைகள் – தீபிகா மற்றும் அஃப்ரா.

“நதிகளை மீட்போம்” தலைப்பில் மாநில அளவில் நடந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள்

உடன் இருப்பது, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து “நதிகளை மீட்போம்” எனும் தலைப்பில் கட்டுரைப்போட்டி நடத்திய கேம்லின் நிறுவனத்தின் தேசிய பிரமோஷனல் மேனேஜர் திரு.ராஜ்குமார் அவர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

chief-guest-dias

vijaywada-43

“இந்தியாவின் தண்ணீர் மனிதன்” டாக்டர்.இராஜேந்திர சிங் அவர்கள் பேச்சு

other-guest

  • நதிகளை மீட்பதற்கு நாம் தாண்ட வேண்டிய பெரும் இடையூறு – நாம்தான்.
  • நம் ஆரோக்கியம், நதிகளின் ஆரோக்கியத்தைச் சார்ந்திருக்கிறது. நமக்கு ஆரோக்கியம் வேண்டுமெனில், நதிகள் நன்னிலையில் இருக்க வேண்டும்.
  • சத்குரு நடத்தும் இந்தப் பேரணி, நம் எண்ணங்களையும், உணர்வுகளையும் நதிகளோடு இணைப்பதற்காக.
  • நதிகளை அழித்தது நாம்தான்.நாம் மட்டும்தான். அதனால் அவற்றை மீட்பதற்கு நாம் முழு பொறுப்பு ஏற்கவேண்டும்
  • அதை மீட்பதற்கு, நம் எண்ணத்தையும், உணர்வையும் அதனோடு இணைக்க வேண்டும். நதிகள் நன்றாக இருந்தால், நாமும் நன்றாக இருப்போம்.
  • நதிகளை இணைப்பது அநாவசியம். நதிகளை மீட்பதுதான் அத்தியாவசியம். அதனால்தான் இப்பேரணிக்கு என் முழு ஆதரவை வழங்குகிறேன்.
  • நதிகளை மீட்டு நம் வருங்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்க சத்குரு உறுதியுடன் இதை மேற்கொண்டிருக்கிறார். இதில் நான் முழுமையாக அவருடன் சேர்ந்து செயல்படுவேன்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சு

vijaywada-49

vijaywada-48

vijaywada-47

நீர்வளத்துறை அமைச்சர் தேவினேனி உமா மஹேஷ்வர் ராவ் அவர்கள்:

நதிகளை மீட்க இந்த மாபெரும் வேள்வியை துவக்கியதற்காக சத்குரு அவர்களை தலைவணங்குகிறேன். இதற்காக சத்குரு முன்மொழியும் அனைத்தையும், முதல்வர் அவர்கள் செய்ய முன்வந்திருக்கிறார்கள். அதனால் முதல்வர் அவர்களின் தலைமையில், நாங்கள் முழு பொறுப்பேற்று இந்தப் பேரணி பிரம்மாண்டமாக வெற்றிபெற நிச்சயம் வேலை செய்வோம்.

நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாஸ் அவர்கள்:

நம் நாட்டின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் இவ்வளவு பெரிய முன்னெடுப்பை செய்திருக்கும் சத்குரு அவர்களுக்கு என் நன்றிகள். இதற்கு நாம் அனைவரும் ஒத்துழைத்து இதை வெற்றிபெற செய்யவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் கம்பம்பட்டி ஹரிபாபு அவர்கள்:

நதிகள் இயற்கை நமக்கு வழங்கிய வரம். அவற்றை இழந்திடாமல், மீட்பது நம் கடமை. இந்த முயற்சியில் நாம் எல்லோருமே பங்கெடுக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் கேசினேனி ஸ்ரீனிவாஸ் அவர்கள்:

சத்குரு அவர்கள் ஒரு பெரும் உத்வேகமாக இருக்கிறார். பலரின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரின் இந்த மாபெரும் முயற்சி வெற்றியடைய, நாம் எல்லோருமே ஒத்துழைக்க வேண்டும்.

சத்குரு அவர்கள் பேச்சு

vijaywada-35

vijaywada-50

vijaywada-53

Sadhguru-on-stage

  • எனது சிறு வயது முதலே மலைகள், ஆறுகள் என இயற்கையோடு நான் ஒன்றி வாழ்ந்திருக்கிறேன். இயற்கையை என்னுள் ஒரு அங்கமாகவே உணர்ந்திருக்கிறேன்.
  • காவிரி நதியை, பல உயிர்களைக் காக்கும் ஒரு பிரம்மாண்டமான உயிர் என்றே நான் பார்த்திருக்கிறேனே தவிர்த்து, வெறும் ஒரு நீர்நிலையாக அல்ல.
  • நம் பெரிய பிரச்சினை ஞாபகமறதி. 70 ஆண்டுகளுக்கு முன் 3 ஆண்டுக்கு ஒருமுறை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டோம். இப்போது மீண்டும் அதேநிலைக்கு சென்றுகொண்டிருக்கிறோம்.
  • 1943 வங்காள பஞ்சத்தில் 33 லட்சம் மனிதர்கள் இறந்தனர், வெறும் 2.5 மாதங்களில். இது அணுகுண்டு வெடித்ததால் அல்ல. உண்ண உணவின்றி, நகர தெம்பின்றி, அமர்ந்த இடத்திலேயே அவர்கள் இறந்து விழுந்தார்கள். அதே திசையில் நாம் திரும்பவும் செல்லக்கூடாது.
  • பழங்கால ஏடுகளில் கௌடில்யா, யுவான் சென் ஆகியவர்களின் குறிப்பில், இந்தியர்களின் சிந்தனைத்திறன் இத்தனை கூர்மையாக இருக்கக் காரணம், அவர்கள் பழங்களை அதிகமாக உட்கொள்வதுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆனால் இன்று நம் உணவில் வெறும் 4% தான் பழம், அதுவும் நீங்கள் பணக்காரராக இருப்பின். ஏழை என்றால், வாழைப்பழம் மட்டுமே உண்ண முடிகிறது அதுவும் வாரம் ஒருமுறை. இதை நாம் மாற்றியே ஆகவேண்டும்.
  • முதல்வர் 50% நிலங்களில் பழமரம் வளர்க்கப் போவதாகச் சொல்கிறார். அதுமட்டும் போதாது. நீங்களும் உங்கள் உணவில் 30% பழங்களாக மாற்றிக் கொள்ளவேண்டும். இதனால் உங்கள் மருத்துவ செலவும் குறைந்துவிடும்.
  • கிராமங்களின் 1 கி.மீ வட்டாரத்தில் 1 ஏக்கர் நிலம் கிடைத்தால், அங்கு 5 வகையான பழத்தோட்டம் நாங்களே அமைத்து பராமரிப்போம். அதில் 15 வயதிற்குக் குறைவான குழந்தைகள் மரத்தில் இருந்து பழம் பறித்து உண்ண முடியும் – இலவசமாக. இது அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும்.
  • நாம் எது செய்வதாக இருந்தாலும் அதில் பலன் என்ன கிடைக்கும் என்றே பார்க்கிறோம். அதனால் நதிகளை மீட்க நாம் எடுக்கும் படிகள் இயற்கை, மனிதன் என எல்லோருக்கும் நன்மை வழங்கக்கூடியதாக, பொருளாதார வாய்ப்பு இருக்கும்விதமாக உருவாக்கி வருகிறோம்.
  • இங்கு இந்த மேடையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
  • அடுத்த 20 நாட்கள், தேவைப்பட்டால், அடுத்தவரின் கால்களில் விழுவதற்கும் தயங்காமல் 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லுங்கள். நம் நதிகள் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். பழைய அழகோடு, நிரம்பிய தண்ணீரோடு அவை ஓடவேண்டும்.

முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் பேச்சு

vijaywada-56

  • இன்று நாம் மேற்கொண்டிருக்கும் இக்காரியம் மிகப் புனிதமானது. மகத்தானது.
  • இதை முன்னின்று நடத்தும் சத்குரு அவர்கள், பல லட்சம் மக்களின் மீது நல்லதொரு தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் ஒரு மாமனிதர்.
  • இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நிச்சயம் நம்மைப் பாதுகாப்பாள். நம் நதிகளை நாம் பாதுகாத்தே ஆகவேண்டும்.
  • நம் நதிகளைக் காப்பதற்கு என்னென்ன தேவையோ, அது அனைத்தையும் நான் நிச்சயம் செய்வேன்.
  • சத்குரு சொல்வதுபோல், நம் மாநிலத்தில் உள்ள 2000 கோடி ஏக்கர் விவசாய நிலத்தில், 50%, அதாவது 1000 கோடி ஏக்கர் நிலத்தில் பழ மரங்கள் நடுவதற்கு ஆவன செய்வேன். மீதமுள்ள 1000 கோடி ஏக்கரில் நுண்ணிய நீர்பாசன முறைகளைக் கடைபிடிப்போம்.
  • தேவை நீர் சேமிப்பு மட்டுமல்ல, நீர் நிர்வாகமும்தான்.
  • நதிகளை இணைக்கும் திட்டம் வேண்டும் என்பதை முன்னெடுத்து செயல்படுத்தியதில் நான் முன்னோடி. ஆனால் அது தற்காலிக தீர்வுதான் என்பதை ஒத்துக் கொள்கிறேன். இப்போது சத்குரு அவர்கள் மற்றும் திரு.இராஜேந்திர பிரசாத் அவர்களின் வழிகாட்டுதலில் நதிகளை மீட்கத் தேவையானதை நிச்சயம் செய்வேன். அது 25-30 ஆண்டுத் திட்டம் என்பதால் தற்காலிக தீர்வுக்கு என்ன வழி என்பதையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
  • முறையாக “நதிகளை மீட்போம்” திட்டப் பரிந்துரை அறிவிக்கப்படும்போது, அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக நம் ஆந்திர மாநிலம் நிச்சயம் இருக்கும். அதற்கு சத்குரு அவர்களின் உதவியும் எங்களுக்கு வேண்டும்

இதை சொல்லிவிட்டு, நதிகளை மீட்க அவரும் மக்களும் உறுதிமொழி எடுத்தனர்.

முதல்வர், மக்கள் எல்லோரும் நதிகளைக் காக்க உறுதிமொழி எடுக்கின்றனர்

OathAtAP

vijaywada-59-1

vijaywada-60

நதிகளைக் காக்கவும் அவற்றை மீட்கவும் முதல்வர் திரு. சந்திரபாபுநாயுடு அவர்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்பதற்கு சான்று: தன் பேச்சை முடித்துக் கொள்ளும் தருணத்தில் மக்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, “இப்பொழுது என்னுடன் சேர்ந்து நீங்களும் இந்த உறுதிமொழி எடுக்கவேண்டும். நான் என் பெயரை சொல்லும்போது மட்டும், அதற்கு பதிலாக உங்கள் பெயரைச் சொல்லி இந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். பின் உறுதிமொழியை அவர் சொல்லச் சொல்ல மக்களும் அவர் பின்னே அதை ஒப்பித்தனர். அந்த உறுதிமொழி, “<பெயர்> ஆகிய நான், இங்கு வாழும் ஒவ்வொரு உயிருக்கும், எல்லா உயிரினத்திற்கும் நீர்நிலைகள் மிக முக்கியம் என்பதை உணர்ந்து, நதிகளைக் காத்து, நம் மாநிலம் வறட்சியற்ற மாநிலமாக ஆக செயல்படுவேன்” என்பது.

பேரணிக்கு முழு ஆதரவு

vijaywada-57

vijaywada-58-1

vijaywada-41

விடைபெற்றுக் கிளம்பும் சத்குரு

vijaywada-62

முதல்வர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் கண்டு, ஆந்திர மாநிலம் மிகவும் பசுமையாக, வற்றாத நதிகள் ஓடும் இடமாக, வருங்கால சந்ததியினருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இடமாக முன்னேறும் என்ற நிம்மதியான உணர்வோடு, சத்குரு அவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நோக்கி பயணத்தை ஆரம்பிக்கிறார். நாளை மாலை ஹைதராபாத்தில் பேரணி.

எங்களை வழியனுப்ப வந்த மழை

vijayawada-63

இப்பயணத்தில் ஒவ்வொரு ஊரிலும் எங்களை வரவேற்று வழியனுப்புகிறது மழை! இதோ விஜயவாடாவிலிருந்து கிளம்பி ஹைதராபாத் செல்கிறோம். வழியில் மழை! சத்குரு பகிர்ந்தது போல் ஆந்திராவில் நெடுஞ்சாலைகள் பிரமாதமாகப் பராமரிக்கப் பட்டிருக்கின்றன. சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் மீடியனில் மலர்செடிகள் பூத்து அழகாய் காட்சியளிக்கின்றன. நெடுஞ்சாலையை ஒட்டி நாங்கள் பார்க்கும் தூரம் வரை பசுமையாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட காய்ந்துவிட்ட ஆந்திர மாநிலத்தின் முன்னேரு நதி

vijayawada-65

vijayawada-86

நந்திகாமாவில் 2800 கல்லூரி மாணவர்களை சந்தித்த சத்குரு

ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்திகாமா எனும் ஊரில், கே.வி.ஆர் கல்லூரியில் 2800 மாணவர்களை சந்தித்து இப்பேரணி பற்றி சத்குரு விளக்கினார். சத்குருவுடன் சேர்ந்து அவர்களும் நதி ஸ்துதி பாடினர்.

vijayawada-66

vijayawada-67

vijayawada-68

vijayawada-69

vijayawada-70

vijayawada-72

vijayawada-73

vijayawada-74

vijayawada-75

vijayawada-77

vijayawada-79

“மதிய வேளை… ஆந்திர உணவு… அடடா!” – சத்குரு !!!

காலையில் இருந்து உண்ணாமல், தெலுங்கானாவின் சூர்யபேட்டை சத்குரு வந்தடைந்தார். இங்கு அவருக்காக ஆந்திர உணவு தயாராகி இருக்கிறது. அதை சுவைக்கப் போவதாக, தெலுங்கில் கூறி சிரிக்கும் சத்குரு! வீடியோவில்: “சிந்த்தா பச்சடி, கொங்குரா, ஆவக்காய், சாதம், நெய்… எச்சில் ஊறுகிறது. காலையில் இருந்து உண்ணவும் இல்லை. ஆந்திர சாப்பாடு… இல்லையா..? சாப்பிட்டு எத்தனை நாளாச்சு…”

தெலுங்கானாவின் சூர்யபேட்டில் கல்லூரி மாணவிகள் பேரணிக்கு ஆதரவு!

vijayawada-81

vijayawada-82

vijayawada-83

vijayawada-99

சூர்யபேட் எனும் ஊரில் உள்ள காயத்ரி கல்லூரி மாணவிகள், “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டையுடன் அணிவகுத்து நின்று இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பள்ளி மாணவர்கள்

தெலுங்கானாவில் சத்குரு வரும் பாதையில் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று “நதிகளை மீட்போம்” பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பள்ளி மாணவ-மாணவியர்.

vijayawada-98

vijayawada-103

vijayawada-104

காய்ந்து காணப்படும் தெலுங்கானாவின் மூசி நதி

vijayawada-96

vijayawada-97

ஹைதராபாத்தில் வரவேற்பு

சத்குரு ஹைதரபாத்தை வந்தடைந்தார். அங்கு அவரை வரவேற்கும் அதிகாரிகள்.

vijayawada-88

vijayawada-90

vijayawada-92

vijayawada-93

vijayawada-94

ஹைதராபாத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

vijayawada-97-small

vijayawada-96-1

vijayawada-102

ஹதராபாத் வந்ததும் மாலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. சந்திப்பிற்குப்பின், பத்திரிக்கையாளர்களும் இப்பேரணிக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். நாளை மாலை 6 மணிக்கு ஹைதராபாத்தின் கச்சிபௌலி ஸ்டேடியத்தில் பேரணி. நாளை மீண்டும் சந்திப்போம்.

விஜயவாடா பேரணி - தொகுப்பு

விஜயவாடா பேரணி - முழு வீடியோ