ஈஷாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மஹாசிவராத்திரிக்கு அடுத்தபடியாக குரு பௌர்ணமி திருவிழாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அனைவரும் அறிவோம்.

தட்சிணாயன காலம் துவங்குவதைக் கொண்டாடும் விதமாக குரு பௌர்ணமி கொண்டாட்டம் உள்ளது. தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியாக நாளைய தினம் (ஜூலை 27) அமைகிறது.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஒரு நீண்ட சந்திர கிரகணம் இன்னும் கூடுதல் கவனத்தை இந்நாளுக்கு வழங்கியுள்ளது. குரு பௌர்ணமி மற்றும் குருவின் மடியில் நிகழ்ச்சிகளுக்கு ஈஷா யோகா மையம் பரபரப்பும் ஆனந்தமும் கலந்தபடி தயாராகி வருவதைப் பார்க்கமுடிகிறது.

ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவரும் குரு பௌர்ணமி விழா, இந்த வருடமும் அதே உயிரோட்டதுடனும் உற்சாகத்துடனும் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குரு பௌர்ணமி, நன்மை உருவம் மற்றும் குருவின் மடியில் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்ததினங்களில் வருவதால், ஈஷா யோகா மையம் களைகட்டியுள்ளதைப் பார்க்கிறோம். பல தன்னார்வத் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் குரு பௌர்ணமியை அனைவரும் உணர தொண்டாற்றி வருகின்றனர்.

குரு பௌர்னமி விழா

குரு பௌர்ணமி தினத்தன்று குருவுக்கு தங்களது நன்றியை தெரிவிக்கும் விதமாக பல வகையான அர்ப்பணிப்புகள் செய்து, அவரின் அருள்பெற வேண்டுவர். காலங்காலமாக நமது பாரம்பரியத்தில் குரு பௌர்ணமி விழாவுக்கென்று ஒரு தனிச் சிறப்பு உண்டு. 15,000 ஆண்டுகளுக்கும் மேலாக நமது கலாச்சாரத்தில் இது பின்னி பிணைந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த நூறு வருடங்களில் இல்லாத மிக நீண்ட சந்திர கிரகணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் வேளையில் குருவுடனான தங்களது பந்தத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈஷா யோகா மையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.

தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து திருவிழாவிற்கு வருகைதரும் அன்பர்களை வரவேற்று, அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை தன்னார்வத் தொண்டர்கள் செய்துவருகின்றனர். நாளை காலைமுதல் சூரியகுண்டம் மண்டபத்தின் முன்புறத்தில் வருபவர்களை வரவேற்று அவர்களுக்கான அடையாள ஸ்டிக்கர் வழங்குவதற்காக தன்னார்வத் தொண்டர்கள் பலர் பல்வேறு குழுக்களாக தயார்நிலையில் உள்ளனர்.

குருவின் மடியில்

குரு பௌர்ணமிக்கு அடுத்த இரு தினங்கள் குருவின் மடியில் நிகழ்ச்சி நிகழவுள்ளது. ஒருவர் தனது ஸ்தூல உடலைத் தாண்டி இன்னொன்றை உணர குருவின் துணை அவசியம். அதை அடிப்படையாகக் கொண்டே குருவின் மடியில் நிகழ்ச்சி ஈஷாவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வில் ஒளியேற்றிய குருவுடன் சங்கமிக்க ஒரு அற்புதமான வழி இது! 2009 ஆம் ஆண்டு முதல் நடந்துவரும் இந்நிகழ்ச்சியில் நீண்ட நேரம் சத்குருவுடன் அமரும் அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

தன்னார்வத் தொண்டர்களின் அயராத உழைப்பு மற்றும் பொறுப்புடன் அவர்களின் கையாளும் திறன் ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கும். இம்முறையும் அதை கண்கூடாக காணமுடிகிறது.

குரு என்றால் 'இருளை அகற்றுபவர்' என்று பொருள். இந்த குரு பௌர்ணமி தினத்தன்று குருவருள் பெற்று இடர் நீங்கி இன்பம் திளைக்கட்டும்.

நாளை ஜூலை 27, ஆதியோகி முன்னிலையில், சத்குருவுடன் குரு பௌர்ணமி கொண்டாட்டத்தில் இணையுங்கள்! ஈஷா யோகா மையத்தில் நேரடியாகவோ அல்லது நேரடி இணைய ஒளிபரப்பு மூலமாகவோ கலந்துகொள்ளுங்கள்!

நேரடி ஒளிபரப்பில் இணைந்திடுங்கள்

சத்குரு App... இப்போது தமிழில்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்... இலவசமாக