About
Wisdom
FILTERS:
SORT BY:
இன்னொருவரை தண்டிக்கும் முயற்சியில், நீங்கள் உங்களைத்தான் தண்டித்துக் கொள்கிறீர்கள்.
உங்களுக்கு என்ன திறமைகள் இருப்பினும், அவற்றை எல்லைவரை பயன்படுத்தி, சற்றே எல்லைதாண்டியும் எடுத்துச்செல்ல வேண்டும்.
யோகாவின் அதிமுக்கியமான அம்சம் இதுவே: அனைத்துயிர்களின் அரவணைத்திருக்கும் தன்மை மற்றும் பிரம்மாண்டத்தை உணரும் முழுமையான அனுபவம். மண் காப்போம்.
நீங்கள் கோபமாக, வருத்தமாக, எரிச்சலாக, அல்லது வெறுப்பாக இருந்தீர்களானால் முற்றிலுமாக தவறவிடும் சாத்தியங்களை உங்களுக்குத் திறக்கும் வாசல்தான் அன்பு.
உங்கள் ஆளுமைத்தன்மை எனும் ஓட்டினை உடைத்தால், உயிர் இருப்பதைப் போல, கடவுள் இருப்பதைப் போல, நீங்களும் வெறும் இருப்பாக இருப்பீர்கள்.
ஏமாற்றமடைவது கெடுதலான விஷயமல்ல, உங்கள் மாயைகள் உடைந்து நொறிங்கினால், நீங்கள் நிஜத்திற்கு நெருக்கமாகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் அடிப்படையில் உயிர்த்தன்மையே. உயிர்த்தன்மை உங்களுக்குள் பிரம்மாண்டமாக நிகழ்ந்தால், அதுதான் மிக உயர்ந்த வெற்றி.
நீங்கள் அருளுக்கு பாத்திரமாக இல்லாவிட்டால், உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, நீங்கள் அழகான வாழ்க்கை வாழமாட்டீர்கள். இது என்னுடைய சாபமில்லை - இதுதான் வாழ்க்கை வேலைசெய்யும் விதம்.
தியானலிங்கம் உயிருள்ள குருவைப் போன்றது. ஒரு குருவின் முக்கிய பணி, உங்களுக்கு போதனைகளும் வழிகாட்டுதலும் வழங்குவல்ல, உங்கள் உயிர்சக்திக்கு தீப்பற்ற வைப்பதே.
தர்க்க அறிவை எப்போது பயன்படுத்துவது, எப்போது பயன்படுத்தக்கூடாது என்று உங்களுக்குத் தெரியவேண்டும். தர்க்கரீதியாக ஆராய்ந்தால் வாழ்க்கையின் அழகான விஷயங்கள் அனைத்தும் முட்டாள்தனமாகத் தெரியும்.
குழந்தைகளை நீங்கள் 'வளர்த்திட' வேண்டியதில்லை. அவர்கள் வளர்வதற்கான இடம், அன்பு மற்றும் உதவியை வழங்கினால் போதும். ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு தனித்துவமான சாத்தியத்திற்கான திறமை இருக்கிறது.