About
Wisdom
FILTERS:
SORT BY:
நம்பிக்கைகள் அனைத்தும் ஏதோவொரு கட்டத்தில் உடைந்துபோகும். நிஜம் மட்டுமே தன்னை தக்கவைத்துக் கொள்ளும்.
உங்கள் பெருமை, அகங்காரம் மற்றும் சுய-முக்கியத்துவத்தை கீழே வைத்தால், நீங்கள் அருளுக்கு பாத்திரமாவீர்கள்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், இந்த உலகின் ஏதோவொரு அம்சத்திற்கு நீங்கள் ஆற்றும் பங்களிப்பு. இதை நினைவில் கொள்வது உங்களை ஊக்கத்துடன் வைத்திருக்கும்.
நீங்கள் ஒன்றுமில்லாமல் உலகிற்கு வருகிறீர்கள், வெறும் கையுடனேயே திரும்பிச் செல்கிறீர்கள். வாழ்க்கையின் செல்வம், அதன் அனுபவங்கள் உங்களை எந்த அளவு மேம்படுத்த அனுமதிக்கிறீர்கள் என்பதில் உள்ளது.
ஆன்மீக செயல்முறை என்றால் நெருப்பாக எரிவது, பேரானந்தத்தில் திளைப்பது. அமைதி, இறுதியில் நீங்கள் 'சாந்தி' அடையும்போது வரும்.
தனக்கு உள்ளும் புறமும் அசைவின்மையைத் தொடாத ஒருவர், நிச்சயம் வாழ்வின் அசைவில் தொலைந்துபோவார்.
நீங்கள் விழிப்புணர்வாக பதில்கொடுக்கும் நிலையில் இருந்தால், எவ்வித இன்னலும் உங்களுக்கு தடையாக இருக்காது.