Main Centers
International Centers
India
USA
Wisdom
FILTERS:
SORT BY:
இளமையாக இருப்பதென்றால் ஒருபோதும் இறுகிய உயிராக இல்லாதிருப்பது - அனைத்து சாத்தியங்களுக்கும் திறந்திருக்கும் உயிராக இருக்கிறீர்கள். பரிணமிக்கவும், கற்றுக்கொள்ளவும், உயிருக்கு எப்போதும் திறந்த நிலையில் இருக்கவும் நீங்கள் விருப்பத்துடன் இருக்கிறீர்கள்.
யோகா என்றால் சங்கமம். அதை நீங்கள் ஒழுக்கத்தின் மூலமாக உணர்கிறீர்களா அல்லது கவலையின்றி இருப்பதன் மூலமாக உணர்கிறீர்களா என்பது உங்கள் விருப்பம்.
தியானம் என்றால் வெளிசூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நீங்கள் விரும்பும் எந்தவொரு அனுபவத்தையும் உங்களுக்குள் உருவாக்கும் திறனுடன் இருப்பது. இங்கே உட்கார்ந்துகொண்டே உங்களது ரசாயனத்தை நீங்கள் பேரின்பமானதாக மாற்றிக்கொள்ள முடியும்.
ஒருவருக்கொருவர் ஊட்டமளிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் மட்டுமே மக்களால் நலமாக கூடிவாழ முடியும், ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் உருவாக்கினால் அது சாத்தியமாகாது.
தினமும் இல்லாவிட்டாலும் மாதம் ஒருமுறையாவது நீங்கள் இன்னும் சிறப்பான மனிதராக மாறிக்கொண்டு இருக்கிறீர்களா என்று கணக்கிடுங்கள்.
தியானலிங்கம், தெய்வீகத்தின் உச்சபட்ச வெளிப்பாடு - வேறெதுவும் வேறெவரும் தொடமுடியாத பரிமாணங்களில் உங்களைத் தொடும் ஒரு உயிர்வாழும் குரு.
உங்கள் உடலும் மனமும் உயிர்சக்தியும் உரிய விதத்தில் தயார் செய்யப்பட்டிருந்தால், முறையாக திட்டமிட்டு விரதமிருப்பது மிகுந்த பலனளிக்க முடியும்.