"நீடூழி வாழ்க! வாழ்க பல்லாண்டு! பெரு வாழ்வு வாழ்க!" ஒருவரை வாழ்த்துவதென்றால் இப்படிச் சொல்லி வாழ்த்துகிறோம். நீண்ட நாள் வாழ்வதென்பது அனைவரும் விரும்புவதே. ஆனால் இந்த வீடியோவில், காலத்தைப் பற்றி சத்குரு சொல்லும் விளக்கத்தின்படி பார்த்தால், நீண்ட வாழ்க்கை உண்மையில் எதைப் பொருத்தது என்பது தெளிவாகிறது. அதோடு, எட்டு வகையான சமாதிநிலைகளைப் பற்றிய விளக்கமும் கிடைக்கிறது!