உலகில் விதவிதமான யோகப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டாலும், அதில் ஈஷா யோகா மிகவும் தனித்து நிற்கும் ஒரு தொன்மையான வழிமுறை. இதில் கற்றுக்கொடுக்கப்படும் யோகப் பயிற்சிகள் உடல், மனரீதியாக ஏற்படுத்தும் மாற்றங்களோ ஏராளம். இதைப் பற்றிய ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டு விட்டன. என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஈஷா யோகப் பயிற்சிகள் உடல், மனநிலையில் என்ன மாற்றம் ஏற்படுத்துகிறது?

மன அழுத்தத்திலிருந்து நாள்பட்ட நோய்களான நீரிழிவு, இருதய நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் வரை ஒவ்வொன்றிலுமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் அல்லது விடுதலை பெறவுமான எளிமையான வழிகளை மக்கள் எப்போதும் நாடி வருகின்றனர். சில தடுப்பு முறைகள் பல நூற்றாண்டுகளாகவே நம்மிடையே நிலவி வருகின்றன. பண்டைய யோக முறைகளை அடிப்படையாகக் கொண்டும், நவீன காலத்திற்கேற்றவாறு மாற்றியும் அமைக்கப்பட்ட ஈஷா யோகப் பயிற்சிகள் இன்றைய சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் சில உடற்குறைகளுக்குச் சிறந்த தீர்வாக இருக்கிறது.

ஈஷா யோகப் பயிற்சி பெற்ற பிறகு, பல வருடங்களாக நாள்பட்ட நோயில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பலர், நோயிலிருந்து விடுதலை அடைந்திருக்கின்றனர். இதைப் பற்றி மேலும் விவரங்கள் அறிந்து தொகுப்பதற்காக, ஓர் ஆய்வுக்குழு, கடந்த 6 வருடங்களில் வகுப்பு முடித்தவர்களிடம் ஆய்வு நடத்தியது. அப்போது, 500-க்கும் மேற்பட்டோர், தங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சி அளவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், பொதுவாகக் காணப்படும் உடல் பிரச்சினைக்குத் தாங்கள் எடுத்துக் கொண்ட மருந்துகளின் தேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விடையளித்தனர். அப்போது கண்டறியப்பட்ட சில முடிவுகள் இங்கே அட்டவணைகளாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

benefits of isha yoga, shambavi, yoga, sadhguru, meditation, kriya

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மனச் சோர்வால் பாதிக்கப்பட்டவர்களில் 95% பேர், ஈஷா யோகப் பயிற்சிக்குப் பிறகு, நோய் அறிகுறிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்தனர். 75% பேர் முதுகுவலிக்கான அறிகுறிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்தனர். தைராய்டுக்காக மருந்து உட்கொண்டு வந்தவர்களில் 49% பேர், மருந்தைக் குறைத்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

“கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் ஈஷா யோகப் பயிற்சி செய்து வருகிறேன். என் எடை 10 கிலோவிற்கும் மேல் குறைந்துவிட்டது. எனக்கிருந்த ஒவ்வாமை நின்றுவிட்டது. நாள் முழுக்க மிகவும் விழிப்புணர்வாகவும், சக்தியாகவும், செய்யும் வேலையில் மனம் ஒன்றியும் ஈடுபட முடிகிறது. தற்போது மன அழுத்தம் என்பதே இல்லை. என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து உண்மையில் என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்.

சூசன், 42 வயது, திட்டமேலாளர்

benefits of isha yoga, shambavi, yoga, sadhguru, meditation, kriya
ஆய்வு குறித்து:

ஈஷா யோகப் பயிற்சி செய்து வருபவர்களுக்கு உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஓர் ஆய்வு 2010-ம் வருடம் ஜனவரி முதல் மார்ச் வரை நடத்தப்பட்டது. இணைய தளம் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் 1-லிருந்து 6 வருடங்களாக ஈஷா யோகா பயிற்சி செய்து வருபவர்கள். மேலும் 18-லிருந்து 80 வயதுள்ள இவர்களில் 65% பேர் பெண்கள், 35% பேர் ஆண்கள்.

மேலும் தொடர்புக்கு: 0422- 2515300

http://www.ishayoga.org/