உலகம் முழுவதும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடுகிறார்கள். இந்தக் கட்டுரையில், கீமோதெரபியை பற்றியும், இந்த சிகிச்சையை ஒருவர் குறைந்த பாதிப்புடன் பெற்றுக்கொள்வதைப் பற்றியும் சத்குரு அவர்கள் சொல்கிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: கடந்த மாதம் எனக்கு புற்றுநோயின் இரண்டாம் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சைகளை என் உடல் ஏற்றுக்கொள்ளும் விதத்தைப் பொறுத்துத்தான் நான் இதிலிருந்து மீண்டுவருவது இருக்கிறது என மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஏற்றுக் கொள்வது என்றால் என்ன என்று எனக்குள் குழப்பமாய் இருக்கிறது. என் நரம்புகளுக்குள் பாயும் மருந்துகளை நான் அப்படியே மௌனமாக ஏற்றுக்கொள்வதா? இல்லை, இந்த நோயை எதிர்த்து போரிடுவதா? இதனை நான் எப்படி அணுகுவது?

சத்குரு:

டாக்டர் உங்களிடம் சொன்னார், "நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது." ஆம், நீங்கள் இதைப் ஏற்றுக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது. "நான் இதனை எதிர்த்து போரிட வேண்டுமா?" நீங்கள் காணாத எதிரியை எதிர்த்து போரிடுவது எப்படி? புற்றுநோய் என்பது வேறொருவர் அல்ல. நீங்கள்தான் புற்றுநோயாய் இருக்கிறீர்கள். உங்களில் ஒரு பகுதி உங்களுக்கு எதிரியாக மாறி இருக்கிறது. அதனுடன் உங்களால் போரிட இயலாது.

ஏதோ ஒருவிதத்தில், எல்லா மனிதர்களும் தங்களுக்கு எதிராக ஏதோவொன்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கோபப்பட்டால், நீங்களே உங்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள், அல்லவா?

"அப்படியானால், நான் என்ன செய்ய?" ஏதோ ஒருவிதத்தில், எல்லா மனிதர்களும் தங்களுக்கு எதிராக ஏதோவொன்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் கோபப்பட்டால், நீங்களே உங்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள், அல்லவா?

அதனால், ஏதோவொரு வழியில் பெரும்பாலான மக்களுக்கு ஒவ்வொருவிதமான புற்றுநோய் இருக்கிறது. அது உடலளவில் வெளிப்படும்போதுதான் அது ஒரு மருத்துவ பிரச்சனையாக மாறுகிறது. அதுவரை அது உங்கள் பிரச்சனை மட்டுமே. இப்போது பல காரணங்கள் விளைவாக அது உடலளவிலும் ஒரு பிரச்சனையாக மாறிப்போனது. இந்த நிலையில் புற்றுநோயுடன் சண்டை போடுவது சரியான வழியல்ல. ஏதோ ஒன்றிற்காக போரிடுவதற்கும், ஏதோ ஒன்றை எதிர்த்து போரிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் அது எப்படியிருந்தாலும், போரிடுவதைத் தவிர்ப்பது சிறந்தது.

ஒரு செடியை நட்டு வளர்த்து அதிலிருந்து நறுமணம் கமழும் மலர்கள் பெறுவதற்கு, நீங்கள் நினைக்கலாம், நிலத்துடன் போராடி அதைப் பெற வேண்டுமென்று. அல்லது நிலத்துடன் அன்புடன் உறவாடி அந்த மணம் கமழும் மலர்களைப் பெறமுடியும் என்றும் நீங்கள் நினைக்கலாம்.ஆனால் இதில் இரண்டாம் வழியே புத்திசாலித்தனமானது. ஏனெனில் இந்த வழியில் உங்கள் அனுபவம் இனிமையான ஒன்றாக இருக்கும். பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்பது தெரியாது, அந்தச் செடி பூக்கலாம் அல்லது வளரும்போதே, அந்தச் செடியை மாடுகள் உணவாக்கிக் கொள்ளவும் கூடும். முடிவு எப்படியிருந்தாலும், நீங்கள் செய்யும் ஒரு செயலை மிகுந்த ஈடுபாட்டுடன், இனிமையாக செய்தால், பிறகு அந்தச் செயலில் எது நடந்தாலும் உங்களுக்கு அது ஒரு பெரிய விஷயமாக இருக்காது.

"அப்படியென்றால் நான் வாழ்வதும் சாவதும் ஒரு பொருட்டில்லையா?" அது ஒரு பொருட்டுதான். அதற்குத்தான், எது எப்படி வேலை செய்யுமோ, நீங்கள் அதனை அப்படிச் செய்ய வேண்டும். நீங்கள் துணிச்சலான மனிதர் எனும் ஒரே காரணத்திற்காக சண்டையிட்டு சாவதினால் யாருக்கு என்ன லாபம்? நீங்கள் விரும்பும்படி நடக்கிறதோ இல்லையோ, மிகவும் முக்கியமாக நீங்கள் சரியானவற்றையே செய்ய வேண்டும். எனவே மரணம் உங்கள் எதிரில் வருவது என்பது மிகச் சிறந்ததொரு சாத்தியம். ஏனெனில் அது, நீங்கள் அழிவுடையவர் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறது. இது சாதாரண விஷயமில்லை. பெரும்பாலானவர்கள் தாங்கள் அழியக்கூடியவர்கள் என்பதையே மறந்து போய்விடுகின்றனர். மரணம் என்பது பிறருக்கு மட்டுமே நடக்கும் விஷயம் என கருதுகின்றனர். இல்லை, இல்லை. மரணம் என்பது உங்களுக்கும் நடக்கும், எனக்கும் நடக்கும். அது எந்தவிதத்தில் நடைபெறும் என்பது வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் அது எப்படியும் உங்களுக்கும் எனக்கும் நடந்தே தீரும்.

மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிப்பதோடு சரி. ஆனால் யோகப் பயிற்சிகள், ஆரோக்கியமான செல்களை வளர்ப்பதன் மீது கவனம் செலுத்துகிறது. இன் மூலம், புற்றுநோய் வரும் முன்பே அது வராமல் தடுக்கமுடிகிறது.

அதனால், புற்றுநோயை கையாள யோகப் பயிற்சிகள் உங்களுக்கு உறுதுணையாய் இருக்கும். ஆனால் முதலில், அலோபதி மருத்துவம் செய்து கொள்ளுங்கள். அது மிகுந்த வீரியத்துடன் உடலிற்குள் உட்புகுந்து நடத்தப்படும் சிகிச்சைமுறை. எனவே ரிஸ்க் எடுக்காமல் அலோபதி மருத்துவம் செய்து கொள்வது நல்லது. மருந்துகள் புற்றுநோய் செல்களை அழிப்பதோடு சரி. ஆனால் யோகப் பயிற்சிகள், ஆரோக்கியமான செல்களை வளர்ப்பதன் மீது கவனம் செலுத்துகிறது. இன் மூலம், புற்றுநோய் வரும் முன்பே அது வராமல் தடுக்கமுடிகிறது. யோக முறைகளில் நம்மால் பல விஷயங்களைச் செய்ய முடியும். ஆனால், புற்றுநோய் என்று வரும்போது, அது தன்னுடன் அதிக அபாயங்களையும் கூட்டிக்கொண்டு வருகிறது. அவற்றை சரிசெய்வதற்கு நம் கைகளில் இருக்கும் நேரமும் மிகக் குறைவு. அதனால், நாம் பொதுவாக ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. எனவே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த விஷயம், மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு அதன்பிறகு மற்ற அனைத்தையும் முயற்சிப்பதுதான். அப்போது அந்த நோய் மீண்டும் மீண்டும் உங்களை தாக்காதவாறு பார்த்துக்கொள்ளலாம்.