மாபெரும் யோகா நிகழ்ச்சிகள்

ஒரே நேரத்தில் 14,000 பேர்வரை கலந்துகொள்ளும் “ஆனந்த அலை” எனும் மாபெரும் அளவிலான யோகா நிகழ்ச்சியையும் சத்குரு வழங்கியுள்ளார். சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கான தீட்சை இதன்மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது!

தென்னிந்தியா முழுக்க ஓர் ஆன்மீக புரட்சியாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை தொட்டுள்ளது “ஆனந்த அலை”! வாழ்வை பரிமாற்றம் அடையச்செய்யும் சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் யோகப் பயிற்சிக்கான தீட்சை, சத்குரு அவர்களால் நேரடியாக நிகழ்த்தப்படும் மெகா வகுப்புகள் மூலம் ஒரே நேரத்தில் 14000 வரை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் ஆழம் மிக்க ஞானக்கருத்துகளை சத்குரு பதிலாக வழங்குகிறார்.