‘ஈஷா சம்ஸ்கிருதி’ பள்ளி குழந்தைகளுக்கு ஒரு அர்ப்பணிப்பாக அமையப்பெற்றுள்ளது. புறஉலகம் சார்ந்த அறிவையும் தங்களுக்குள் உள்ள இயல்பான அறிவையும் குழந்தைகள் பெறுவதற்கு உகந்த ஒரு சூழலை குழந்தைகளுக்கு ஈஷா சம்ஸ்கிருதி வழங்குகிறது. ஈஷா சம்ஸ்கிருதியின் பாடத்திட்டம் ஆங்கிலம், கணிதம் மற்றும் பிற குறிப்பிட்ட பள்ளி பாடங்களோடு, யோக அறிவியலின் தனித்துவம் மிக்க பயிற்சி, களரிப்பயட்டு, இந்திய சாஸ்திரிய இசை, பரதநாட்டியம், சமஸ்கிருதம் ஆகிய பாரம்பரிய இந்தியக் கல்விமுறை அம்சங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. இதனால் குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சமநிலை பெறுகிறது.

6 வயது முதல் 8 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஈஷா சம்ஸ்கிருதியில் தங்கள் கல்வியைத் துவங்கி, தங்கள் 18 வயது வரை பயிற்சிகளை மேற்கொள்வார்கள். இக்கல்விமுறை, வெறும் தகவல்களை குழந்தைகளின் மேல் திணிப்பதற்குப் பதிலாக அவர்களின் இயல்பான திறமைகளை வெளிக் கொணர்வதாக இருக்கும். தகுந்த சூழ்நிலைகளை குழந்தைகளுக்கு உருவாக்கித் தருவதன் மூலம் அவர்கள் ஆழமான அனுபவங்களைப் பெறுவதோடு, வாழ்க்கை குறித்த உள்நிலை புரிதலையும் பெறுகிறார்கள். இந்தக் கல்விமுறை மூலம், குழந்தைகள் உண்மையிலேயே வலிமையான, உறுதியான, எழுச்சிமிக்க, அர்ப்பணிப்புமிக்க மனிதர்களாக உருவாக்கப்படுவார்கள்.

For further information
Telephone +91- 0422 2515480, +91-9442616138 
Email isha.samskriti@ishafoundation.org