யோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டையின் முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் பதிவுகளை இங்கே காணலாம்.

பிப்ரவரி 22, 2017 11:10pm

வாருங்கள் தெய்வீகத்தின் அருள்மழையில் நனைந்திடுவோம்

பிரம்மாண்டமான யோகி இவர். மகத்தான மனிதர் இவர். ஆதியோகிக்கு இங்கு நாம் செய்துள்ளது நமது நன்றியின் சிறிய வெளிப்பாடுதான். அவர் நமக்கு அளித்ததை ஒப்பிடும்போது உருவத்திலும் அளவிலும் நாம் அவருக்கு திரும்ப அளித்திருப்பது மிகச் சிறிதே. மகத்தான இந்த ஆதியோகி வழங்கிய சாத்தியங்களை உயிரோட்டமாய் வைத்திருப்பதும், பிறருக்கு அளிப்பதுமே அவருக்கு நாம் அளிக்கும் உண்மையான அர்ப்பணிப்பாய் இருக்கமுடியும். அதற்கு சத்குரு அவர்கள் இங்கு உருவாக்கியிருக்கும் இந்த சாத்தியம் மகத்தான வாய்ப்பாக உலகிற்கு மஹாசிவராத்திரி தினத்தன்று விரியவிருக்கிறது. இன்று யோகேஷ்வரர் பிரதிஷ்டையில் இவர்களுக்கு காணக்கிடைத்தது நாளை மறுநாள் உங்களுக்கும் கிடைக்கும். வாருங்கள் தெய்வீகத்தின் அருள்மழையில் நனைந்திடுவோம்.

yogeshwar-day3-28

yogeshwar-day3-27

பிப்ரவரி 22, 2017 11:05pm

ஆதியோகியின் முன் சத்குருவின் அருளாசி

"ஆதியோகியை இப்படியொரு பரிமாணத்தை பார்த்த முதல் மக்கள் நீங்கள். அவருடைய அளவினாலோ, அழகினாலோ இவர் முக்கியத்துவம் பெறவில்லை. அவர் வெளிப்படுத்தக்கூடிய சக்தியினால் அவர் முக்கியத்துவமானவராய் இருக்கிறார். ஆன்மீக செயல்முறைகள் திறந்திருக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டதில்லை. இப்போது ஆதியோகியின் மூலம் நாம் அப்படியொரு சாத்தியத்தை திறக்கிறோம்.

அடுத்த 12 வருடங்கள் ஆன்மீகத்திற்கு பொற்காலமாக இருக்கவிருக்கிறது. மருத்துவ அறிவியலுக்கு எவரும் எந்தத் தடையும் சொல்வதில்லை. ஏனெனில் மக்கள் அதன் பலனை உணர்ந்திருக்கிறார்கள். தன் நன்மைக்காகத் தான் மருத்துவர் இதைச் செய்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறார். அதே விதமாய் ஆன்மீக செயல்பாடும் தனது நன்மைக்காகத்தான் நிகழ்கிறது என்பதை மக்கள் உணர்வார்கள்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஆசிகள் இதுதான் - நீங்கள் அனைவரும் முழுவீச்சில் முழு உயிராய், பேரற்புதமாய் வாழவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசிகள். உயிரோட்டமாய் வாழ்வதே வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை பேரற்புதமாய் இருக்கட்டும்," என்று ஆசி கூறி விடைபெற்றிருக்கிறார்.

பிப்ரவரி 22, 2017 10:30pm

112 அடி உயர ஆதியோகி முன்

யோகேஷ்வர லிங்கத்தை ஆதியோகி இருக்கும் மண்டபத்தில் நிறுத்திட வந்த சத்குரு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்து முன்னே வந்துக் கூட்டத்தைப் பார்த்து ஆதியோகியை கண்டு "இந்த பிரம்மாண்டம் நிகழ்ந்து விட்டது," என்பது போல கைகளை விரித்துக்காட்டி சிரித்தார்.

மக்களும் ஆரவாரமாய் பலத்த கைத்தட்டலுடன் இதனை வரவேற்றனர். மகிழ்ச்சி அலையில் மக்கள்!

பிப்ரவரி 22, 2017 10:10pm

மீண்டும் ஆதியோகி ஆலயத்தில் சத்குருவுடன் இணைந்தோம்

மகத்தான குருவின் முன்னிலையில் குருபூஜை. குருவானவர் குருபூஜை செய்ய அனைவரும் அவர் உடன் இணைந்தோம். தொடர்ந்து குருபூஜை ஒலித்துக் கொண்டிருக்க, மேடையில் வைக்கப்பட்டிருந்த லிங்கம் லாவகமாய் வண்டிக்கு இடம் பெயர்க்கப்பட்டது.

ஒரு சிலருக்கு மட்டுமே காணக்கிடைத்த்து இந்தக் காட்சி. பிற பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆதியோகி முன் அமர்ந்திருக்க, மாட்டு வண்டியில் ஆதியோகி வைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த பீடத்தின் மீது லிங்கம் ஏறியது. வண்டியை ஓட்டியவரும் குருவே. சம்ஸ்கிருதி குழந்தைகள், "குருபாதுகா ஸ்தோத்ரம்" தொடர்ந்து உச்சரிக்க லிங்கத்தினை அதற்குரிய இடத்தில் பொருத்தும் பணியில் சத்குரு அவர்களும் சில பிரம்மச்சாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

பிப்ரவரி 22, 2017 3:30pm

கைலாஷ் தீர்த்தம்

najwa-akka

இன்று காலை என் உடல் முழுக்க வலி இருந்தது. என்னால் வகுப்பு நடக்கும் இடத்திற்கே போக இயலவில்லை. ஆனால், காலை சத்குரு உள்ளே நுழைந்தவுடன் உடலில் உள்ள எல்லா வலியும் போய்விட்டது. என் எல்லைகள் உடைந்தது. இங்கே இருப்பது எனக்கு என் வீட்டில் இருப்பதைப் போல இருக்கிறது. நான் சத்குருவுக்கு மிகவும். நன்றி சொல்ல விரும்புகிறேன்.

நேற்று நான் கைலாஷ் தீர்த்தை வாங்கி அருந்தினேன். அதன்பின் அதன் அதிர்வை என் உடலில் உணர முடிந்தது. தீர்த்தகுண்டத்தில் குளித்தது போல மிகவும் புத்துணர்வாக உணர்ந்தேன்," என்கிறார் கலிஃபோர்னியாவை சேர்ந்த Speech - Language pathologist நஜ்வா காத்தர்.

பிப்ரவரி 22, 2017 1:40pm

ஆதியோகியின் முன் சந்திப்போம்...

"இன்று மாலை யோகேஷ்வர லிங்கத்தினை ஆதியோகியின் முன் ஸ்தாபிக்கப் போகிறோம்... இதுவரை நாம் மஹாசிவராத்திரிக்கு ரிகர்சல் செய்ததில்லை. ஆனால் இன்று மாலை நாம் செய்யும் சில அம்சங்கள் மஹாசிவராத்திரிக்கு முன்னோட்டமாக இருக்கும். அதனால், உங்கள் அனைவருக்கும் 2 மஹாசிவராத்திரிகள் உண்டு," என்று மேடையைவிட்டு கீழிறங்கி இருக்கிறார்.

ஆதியோகிக்கு மாலை அணிவித்து, அந்த அழகுச் சிலைக்கு மேலும் அழகு கூட்டவிருக்கிறார்.

இரவில், ஆதியோகியின் முன்னிருந்து சந்திப்போம்.

பிப்ரவரி 22, 2017 12:30pm

களரி பயிற்சி செய்து மெய்சிலிர்க்க வைத்த ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்

yogeshwar-day3-11

yogeshwar-day3-12

yogeshwar-day3-10

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

yogeshwar-day3-8

yogeshwar-day3-7

பிப்ரவரி 22, 2017 12:15pm

yogeshwar-day3-9

பிப்ரவரி 22, 2017 12:15pm

Question: சத்குரு நாங்கள் எப்போது உங்களைப் போல் ஆவது, இதுபோன்ற பிரதிஷ்டைகளை செய்வது?

சத்குரு:

"இங்கு என்ன நடந்ததோ அதை உள்வாங்கிக் கொள்ள, அது உங்கள் மனதில் முக்கிய அம்சமாக இருப்பது அவசியம். நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல என்றைக்கு டிக்கெட் புக் செய்திருக்கிறீர்களோ அதிலிருந்து 90 நாட்களுக்கு அதனை தள்ளிப்போடுங்கள். அதிலிருந்து மற்றொரு முறை 90 நாட்களுக்கு தள்ளிப் போடுங்கள்," என்று நகைச்சுவையாய் கூற அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது.

Yogeshwar-day3-23

"நீங்கள் வீட்டைவிட வேண்டும், குடும்பத்தைவிட வேண்டும் என்றில்லை. உங்கள் மனதில் இதற்கு முதலிடம் கொடுக்காவிட்டால் இது அமையப்பெறாது. நீங்கள் யாரென்று உங்களைச் சொல்லிக் கொள்கிறீர்களோ அதனை விலக்கி வைக்காவிட்டால் இப்படியொரு சாத்தியம் நம்மைத் தொடாது.

இது எத்தனை நாட்களுக்குள் நடக்கும் என்று எனக்கு தெரியாது. எனக்கு 3 ஜென்மங்கள் பிடித்தன.

இங்குள்ளவர்கள் அனைவரும் உங்களை எப்படி தன்னிலை மாற்றம் அடைந்தவராய் ஆக்கிக் கொள்வது, அதனை பிறருக்கு எப்படி வழங்குவது என்று பார்ப்பது, இன்று உலகில் அத்தியாவசிய தேவையாய் இருக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கும் முகங்களை பாருங்கள். அத்தனை சோகமாய், மனிதனாய் வாழத் தகுதி அற்றதாய் அவை இருக்கின்றன. நாம் ஒரு சாத்தியத்தை உருவாக்கினால் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்வார்கள். அதனால் தன்னிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தை நாம் வழங்குவது மிக மிக அவசியமாய் இருக்கிறது.

இந்த சமயத்தில் முதல்முதலாய் தங்கள் குழந்தைகளை ஈஷா சம்ஸ்கிருதியில் சேர்த்த பெற்றோருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தக் குழந்தைகள் உலகில் சூட்சுமமான மாற்றங்களை ஏற்படுத்துவார்கள்," என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பலத்த கரகோஷம் எழுந்தது.

பிப்ரவரி 22, 2017 11:55am

சத்குரு கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார்...

Yogeshwar-day3-22

Question: நேற்று பிரதிஷ்டையில் ஒரு ஆணும் பெண்ணும் பங்கேற்றார்கள், அவர்களது கைகள் லிங்கத்துடன் தொடர்பில் இருந்தது. எதனால் என்று விளக்க முடியுமா?

சத்குரு:

அவர்களை ஆண், பெண் என்று நான் பார்க்கவில்லை. நான் அக்கறை கொண்டிருந்ததெல்லாம் ஈடா, பிங்களா என்ற தன்மையைப் பற்றித்தான். ஒரு ஆண் இதுபோன்ற செயல்முறையில் ஈடுபடும்போது, அது சற்றே ஆண்தன்மை பக்கம் சரியும் சாத்தியம் இருக்கிறது. அதனை சரிகட்டவே இந்த பெண்தன்மை.

பிப்ரவரி 22, 2017 11:45am

தியானலிங்கத்திற்கு ஆபரணம்

"தியானலிங்கத்தைவிட யோகேஷ்வரரை மக்கள் இன்னும் சிறப்பாய் உணர்வார்கள். தியானலிங்கம் மிக மிக சூட்சுமமானவர். அவரிடம் முழு உலகையுமே போதையில் ஆழ்த்தக்கூடிய சமாச்சாரம் இருக்கிறது. தியானலிங்கத்திற்கு ஒரு ஆபரணமாய் அவரைச் சுற்றி இவற்றை எல்லாம் நாம் உருவாக்குகிறோம்," என்றார் சத்குரு.

யோகாவின் களஞ்சியம்

இன்று அறிவை சேகரிப்பதை பணம் சேகரிப்பதை விட உயர்ந்தது என்று நினைக்கிறார்கள். நான் அப்படி பார்க்கவில்லை. இந்த யோகேஷ்வர லிங்கத்திற்கு இரண்டு பரிமாணங்கள் இருக்கும். எதையும் பொருட்படுத்தாத பரவசநிலை மற்றும் கச்சிதமான ஒழுக்கம்.

தியானலிங்கத்தை விட இவர் சற்று வெளிப்படையாக இருப்பார் (more overt than Dhyanalinga). நான் தியானலிங்கத்துடன் இவரை ஒப்பிடவில்லை. வெகு சிலரே தியானலிங்கத்தில் வெடித்திடும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். பெரும்பாலானோருக்கு அங்கே அப்படி ஒரு அனுபவம் ஏற்படாது. நான் தியானலிங்கத்தை குறைத்துக் கூறவில்லை. உலகம் முழுவதற்கும் அளிப்பதற்கு தேவையான அளவு போதை அவரிடம் இருக்கிறது. ஆனால், யோகேஷ்வரர் தனித்தன்மையுடன் இருக்கிறார். இவர் யோகாவுக்காக மட்டும் உருவாக்கப்பட்டவர். வெடித்திடும் அனுபவத்தை அளிப்பவர். யோக அறிவியலின் களஞ்சியமாக இருப்பார்.

பிப்ரவரி 22, 2017 11:30am

நம் கைகளால் யோகேஷ்வரரை தொடலாம்

yogeshwar-day3-1

"ஒரு பார்வையோ, ஒரு தொடுதலோ உங்களை உச்சகட்ட பரவசத்திற்கு இட்டுச்செல்ல முடியும். இந்த ஒரு பரிமாணம் யோகேஷ்வர லிங்கத்தில் இருக்கிறது. அவரை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நீங்கள் தொட்டால், அவரால் இந்த நிலைக்கு உங்களை அழைத்துச் செல்ல முடியும். யோகேஷ்வர லிங்கம் அனைவரும் தொட்டு வணங்கும் விதத்தில் அமைக்கப்படும். அனைவரும் தொடலாம்," என்றார்.

பிப்ரவரி 22, 2017 11:00am

சத்குருவின் வீடியோ பதிவிலிருந்து

Evolve from prayer to presence

பிரார்த்தனை என்ற நிலையிலிருந்து அருளை உள்வாங்க திறந்தநிலைக்கு நீங்கள் உயர வேண்டும். பிழைப்பு வேண்டும் என்றால் அதற்கு ஆதியோகி தேவையில்லை. உங்களிடம் இரண்டு கைகளும் இரண்டு கால்களும் கொஞ்சம் வேலை செய்யும் மூளை செல்களும் இருந்தால்போதும். நீங்கள் பிழைப்பு நடத்திக் கொள்ளலாம்.

ஒரு மனிதனுக்கு பிழைப்பு ஒரு பிரச்சனையாக இருக்கக்கூடாது. இந்த பிரதிஷ்டைக்கு வந்திருக்கும் உங்களுக்கு இது ஒரு மூன்று நாள் நிகழ்வாக இருக்கக்கூடாது. இது உங்கள் வாழ்நாள் முழுக்க நடக்கவேண்டும். இதன் இருப்பை உங்களுக்குள் வேலை செய்ய நீங்கள் அனுமதித்தால் உங்களுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அது பிரம்மாண்டமாய் நிகழும்.

படைத்தவனும் படைத்தலும் ஒன்றாக நிகழும் அந்த அற்புதம் உங்களுக்குள் நிகழவேண்டும். படைத்தவனையும் படைத்தலையும் நீங்கள் எவ்வாறு இரண்டு வெவ்வேறு பொருளாக பிரிக்க இயலும்?

பிரார்த்தனை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், அந்த பரிமாணத்திலிருந்து நீங்கள் உயர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

பிப்ரவரி 22, 2017 10:40am

மேடையில் சத்குரு

yogeshwar-day3-5

yogeshwar-day3-6

முத்துசாமி தீட்சிதரின், "தியாகராஜ யோக வைபவம்..." என்ற பாடல் ஆனந்த பைரவியில் ஒலிக்க வைபவத்தின் இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்த்தி மேடையேறியிருக்கிறார் சத்குரு.

பிப்ரவரி 22, 2017 12:30pm

திரு. சந்தீப் நாராயண் அவர்களின் புத்துணர்வூட்டும் இசை நிகழ்ச்சி

yogeshwar-day3-4

பிப்ரவரி 22, 2017 12:30pm

மரங்களின் மடியில் காலை உணவு

பிப்ரவரி 22, 2017 10:30am

லிங்கம் திறக்கப்பட்டது

yogeshwar-day2-17

மிக முக்கியமான ஒரு இரவாக நேற்றிரவு இருக்கும் என்று நேற்று மாலை கூறிச் சென்றார் சத்குரு. இருட்டறையில், அக்னி ஒளியில் மேடையேறிய சத்குரு இங்குள்ள ஒவ்வொருவரின் உயிரிலும் தீமூட்டி விடைபெற்றபோது மணி நள்ளிரவை தாண்டியிருந்தது.

மேடைக்கு ஏறியவர் முதன்முதலில் தீபோல் வாழ்ந்த யோகி சத்குரு ஸ்ரீ பிரம்மா அவர்களின் திருப்படத்திற்கு மாலை அணிவித்தார். கருப்பு அங்கியில் ருத்ரனாய் காட்சி அளித்தார்.

yogeshwar-day3-21

லிங்கத்தை சுற்றி 5 அக்னி குண்டங்கள். அவை தொடர்ந்து ஒளிர்ந்திருக்க செய்யப்பட்டது. லிங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்த செம்பு பாத்திரங்களை ஒன்றன் மீது ஒன்றாக லிங்கத்தின் மீது கவிழ்த்தார். அதிலிருந்து திரவங்கள் லிங்கத்தின் மீது வழிந்தது. பாத்திரங்களை நீக்கியபின், லிங்கத்தினை சூழ்ந்திருந்த துணியினை தீயிட்டு திறந்தார். அவற்றுடன் இணைத்து வைத்திருந்த புனிதமான கயிற்றினை துண்டித்து தன் காலில் ஒன்று ஒரு துறவியின் கையில் ஒன்று, இன்னொரு சாதகரின் கைகளில் மற்றொன்றாய் இணைத்தார். லிங்கத்தினை முதல்முறையாக பார்த்த அனுபவம் இங்கு மக்களுக்கு மிக மிக தீவிரமான ஒரு அனுபவமாக வாய்த்தது.

மக்கள் அனுபவதித்தில், இரவு முழுவதும் கண்களிலும் உயிரிலும் உறக்கத்திலும் யோகேஷ்வரர் நிரம்பியிருந்திருப்பார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. பிரதிஷ்டை என்பது என்ன என்று கேள்விகளுக்கு பதிலாய் உயிர் அனுபவத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் சத்குரு.

காலையிலிருந்து எங்கு பார்த்தாலும் தீவிரமாய் சாதனாவில் ஈடுபட்டிருக்கும் மக்களை பார்க்க முடிகிறது. பத்து மணிக்கு அறையில் கூடியிருக்கிறார்கள். அவரை காண கண்கள் காத்திருக்கின்றன.

20170221_RVK_0088-e

20170221_RVK_0069-e

yogeshwar-day3-23

yogeshwar-day4-26