ஈஷா யோகா வகுப்பினாலும், அதில் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளினாலும் தங்கள் உடல்நிலையிலும் மனதளவிலும் எத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதற்கு சிலரின் பகிர்தல்கள் இங்கே...

செல்வா, டிசைன் இன்ஜினியர், பெங்களூரு:

நான் மனதளவில் மிகவும் சோர்ந்து போயிருந்த ஒரு நேரத்தில், ஈஷாவின் இன்னர் இன்ஜினியரிங் வகுப்பில் கலந்து கொண்டேன். வகுப்பு ஆசிரியர் சொல்வது ஏதாவது என்னால் ஒத்துக்கொள்ள முடியாததாக இருந்தால் ஆசிரியரிடம் அங்கேயே வாக்குவாதம் செய்வேன். ஆனாலும் வகுப்பு முடிந்தபிறகு விடாமல் பயிற்சி செய்வேன் என உறுதி எடுத்துக்கொண்டேன். அவ்வப்போது வகுப்புகளில் தன்னார்வத் தொண்டு செய்து வந்தேன். மெதுவாக என்னைச் சுற்றியிருந்த மனிதர்களுக்கும், சூழ்நிலைக்கும் நான் பதில் கொடுக்கும் விதம் வெகுவாக மாறியது.

ஒருமுறை மிகவும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய இனிமேல் உன்னுடன் பேசமாட்டேன் என்று என் தந்தையிடம் சூளுரைத்திருந்தேன். அடிக்கடி என் சகோதரியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன். ஆனால் இப்போது அவளிடம் பொறுமையுடன் பேச ஆரம்பித்திருக்கிறேன். சில மாதங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்து வந்ததிலேயே என் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகளில் மிகவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சைனஸிலிருந்தும் விடுபட்டதால் ஆழ்ந்த உறக்கமும் கிடைத்துள்ளது. தினமும் 30 நிமிடம் செய்யும் பயிற்சியே என்னை எப்போதும் புத்துணர்வோடு இருக்க வைக்கிறது. உள்நிலையிலேயும் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. அதை என்னால் வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. ஈஷா என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு. சத்குருவிற்கும் அவர் அளிக்கும் மகத்தான வாய்ப்பிற்கும் எப்போதும் தலை வணங்குவேன்.

சதாசிவம், ஈரோடு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனக்கு 2003ல் மாரடைப்பு வந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை தேவை என்றார்கள். அப்போது ஈஷா யோகா மையத்தின் புத்துணர்வு மையத்தில் யோக மார்கா என்னும் சிகிச்சை கலந்த யோகா வகுப்பு செய்தேன். பிறகு என் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை முற்றிலுமாகத் தவிர்க்க முடிந்தது. தினமும் பயிற்சி செய்து வருகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.

ஷ்ரவந்த், ஹைதராபாத்:

நான் சிறுவயதிலிருந்தே ஆஸ்துமாவினால் அவதிப்பட்டு வந்தேன். ஒவ்வொரு வாரமும் மூச்சிரைப்பு வந்துவிடும். அப்போது இன்ஹேலர் பயன்படுத்துவேன். ஈஷா யோகா வகுப்பு 2009ம் வருடம் செய்தேன். வகுப்பிற்குப் பிறகு மூச்சிரைப்பின் கடுமை குறைந்துவிட்டது. தற்போது அது வருடத்திற்கு ஓரிரு முறை என்று குறைந்துவிட்டது. என்னுடைய நோய் எதிர்ப்புத் தன்மையும் அதிகமாகிவிட்டது.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org