யோகா தின கொண்டாட்டங்கள் - வீரேந்திர சேவாக் பங்கேற்பு
யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட வீரேந்திர சேவாக், சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈஷா பங்கேற்பு, மதுரையில் உலக யோகா தினம் & சுற்றுச் சூழல் தினக் கொண்டாட்டங்கள், உகாண்டாவில் உதயமாகவிருக்கும் ‘சத்குரு ஸ்கூல்’ உட்பட பல முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு உங்களுக்காக!
 
யோகா தின கொண்டாட்டங்கள் - வீரேந்திர சேவாக் பங்கேற்பு, Yoga dina kondattangal virender sehwag pangerpu
 
உலக யோகா தினத்தை முன்னிட்டு நடந்துவரும் இலவச உபயோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அவர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும், தொடர்ந்து யோகா செய்வதும் தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் உலக யோகா தினம் & சுற்றுச் சூழல் தினக் கொண்டாட்டங்கள்!

மதுரையில் உலக யோகா தினம் & சுற்றுச் சூழல் தினக் கொண்டாட்டங்கள்!, Maduraiyil ulaga yoga dinam matrum sutrusoozhal dina kondattangal

மதுரையில் உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஜூன் 1 முதல் உபயோகா வகுப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகள் ஜூன் 20 வரை தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை கற்றுத்தரப்படும். இடம்: ஈஷா யோகா மையம், பீ.பீ.குளம் (தியானலிங்கா பார்மஸி 2வது தளம், செல்:9443707250) மற்றும் ஈஷா யோகா மையம், மஞ்சணகார தெரு (சுகந்தி பில்டிங், மஹால் 7வது தெரு, செல்:8300059000)

மேலும், மதுரையிலுள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தங்கள் பள்ளி வளாகங்களிலேயே வகுப்புகள் வழங்கப்படுகின்றன.

உலக சுற்றுச் சூழல் தினத்தை (ஜூன் 5) கொண்டாடும் வகையில், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் சார்பில் ஜூன் 3ஆம் தேதியன்று மதுரையை அடுத்த அலங்காநல்லூரிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரம் நடுவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்களும் பள்ளி ஆசிரியப் பெருமக்களும் மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நட்டு விழாவைக் கொண்டாடினர்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈஷா!

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈஷா!, Chennai puthaga kankatchiyil isha

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈஷா!, Chennai puthaga kankatchiyil isha

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஈஷா!, Chennai puthaga kankatchiyil isha

சென்னை தீவுத்திடலில் நிகழ்ந்துவரும் பிரம்மாண்ட புத்தகக் கண்காட்சியில் ஈஷா வெளியீடுகள் (புத்தகங்கள் மற்றும் DVDs) 4 ஸ்டால்களில் விற்பனைக்கு உள்ளன. ஒவ்வொரு வருடமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நிகழ்த்தும் இந்த புத்தகக் கண்காட்சி, இம்முறை ஜூன் 1 முதல் ஜூன் 13 வரை நிகழ்கிறது. புத்தகக் கண்காட்சியில் ஈஷா புத்தகங்களுக்கு 10% சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது!

இடம்: சென்னை தீவுத்திடல்
ஸ்டால் எண்கள்: 488, 489, 568, 569
தொடர்புக்கு: 94890 45034 / 90036 59199

சிஸ்கோ பணியாளர்கள் ஈஷா வித்யாவிற்காக தன்னார்வத் தொண்டு!

சிஸ்கோ பணியாளர்கள் ஈஷா வித்யாவிற்காக தன்னார்வத் தொண்டு!, Cisco paniyalargal isha vidhyavil thannarvathondu

சிஸ்கோ பணியாளர்கள் ஈஷா வித்யாவிற்காக தன்னார்வத் தொண்டு!, Cisco paniyalargal isha vidhyavil thannarvathondu

80 சிஸ்கோ ( Cisco, Bangalore ) நிறுவன பணியாளர்கள் கடந்த மே 27ஆம் தேதியன்று ஈஷா வித்யா பள்ளி மாணவர்களுக்காக கற்றல் உபகரணங்களை உருவாக்கும் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டனர். இவர்கள் ஈஷா வித்யாவிற்கு 4வது முறையாக இதுபோன்ற தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு பாடப் புத்தகத்திலுள்ள கருத்துக்களை செய்முறை விளக்கங்களுடன் சிறப்பாகப் புரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. உண்மையில் இந்த உபகரணங்கள் கல்வி சார்ந்த பொம்மைகள் (edu-toys) போன்றவை ஆகும். இந்த உபகரணங்கள் உருவாக்கத்தில் பெரிதும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்ட சிஸ்கோ நிறுவன ஊழியர்களுக்கு நமது நன்றிகள்!

உகாண்டாவில் உதயமாகவிருக்கும் சத்குரு ஸ்கூல்!

முதல்முறையாக உகாண்டாவில் இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு ஜூன் 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் நிகழவுள்ளது. அதோடு “சத்குரு ஸ்கூல்” துவக்க விழாவும் வெகுசிறப்பாக நிகழவுள்ளது. மேலும் உகாண்டா, கென்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் ‘ஞானியுடன் கலந்துரையாடல்’ எனும் சத்குருவுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பாண்டிச்சேரி கவர்னருடன் ஈஷா குழுவினர் சந்திப்பு

பாண்டிச்சேரியில் உலக யோகா தினக் கொண்டாட்டங்களுக்காக ஈஷாவின் பல்வேறு செயல்பாடுகள் நிகழவுள்ள நிலையில், பாண்டிச்சேரி ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள திருமதி.கிரண்பேடி அவர்களை ஈஷா குழுவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஹத யோகா பங்கேற்பாளர்களுக்கு வாய்த்த சத்குரு தரிசனம்!

உலக யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாக நிகழ்ந்த 8 நாட்கள் ஹத யோகா வகுப்பை நிறைவு செய்த பங்கேற்பாளர்களுக்கு, நிறைவு நாளான ஜூன் 2ஆம் தேதியில் சந்திரகுண்டத்தின் முன் சத்குரு தரிசனமும் கிடைத்தது. இவர்களோடு பொதுமக்களும் ஈஷா ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் தரிசன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சத்குருவின் அருள்பெற்றுச் சென்றனர்.

  0 Comments
 
Login / to join the conversation1