இந்தியாவைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் நதிகளை மீட்பதற்கான திட்ட வரைவினை செயலாக்கத்திற்கு கொண்டுவருவதென்பது இயலாத காரியமாகும். அந்த வகையில், நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு மக்களின் பேராதரவும் ஒத்துழைப்பும் அமோகமாக இருந்ததோடு, திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தை உடனடியாக வலியுறுத்துவதற்கும் அது துணைநின்றது.

மகாராஷ்டிர முதல்வரிடம் வாகாரி நதி புத்துயிராக்க  திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 1ஆம் தேதி வன் மஹோத்ச்வத்தில் சத்குரு வழங்கினார்.

 

நதிகளை மீட்போம் பேரணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நதிகளை மீட்போம் இயக்கத்தின் செயல்திட்டங்களை அடுத்தகட்ட நிலைகளுக்கு கொண்டுசெல்வது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கும் வகையில், ஓர் உயர்மட்ட குழுவானது மத்திய அரசின் NITI Aayog அமைப்பின் கீழ் பிரதமர் அலுவலகத்தால் அமைக்கப்பட்டது. ஓர் 6 மாத காலம் முன்னதாக ஜுன் 6ல், நிதி ஆயோக் ஈஷா அறக்கட்டளையை குறிப்பிட்டு, ஒரு தேசிய அளவிலான கொள்கையை முறையாக பிரகடனப்படுத்தியது. மேலும், இந்தியாவின் 29 மாநிலங்களுக்கும் நதிகளை மீட்பதற்கான கொள்கைகளை பரிந்துரைக்கும் விதமாக ஒரு குழுவினை அனுப்பியது.

ஜூலை:

மகாராஷ்டிரா அரசாங்கத்திடம் செயல்திட்ட அறிக்கை வழங்கப்பட்டது.

3வது தேசிய நதிகளை மீட்போம் உயர்மட்டக் குழு சந்திப்பு

ஜூலை 22, 2018, பெங்களூரு: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.அரிஜித் பசாயத், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி; திருமதி.கிரண் மஜும்தார் ஷா, நிர்வாகி மற்றும் இயக்குனர்-பையோகான்; திரு.ரவி சிங், World Wide Fund for Nature – India நிறுவனத்தின் பொதுச்செயலாளர் மற்றும் நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மேலாண்மை அதிகாரியாக இருந்து ஒய்வுபெற்ற திரு.சசி சேகர் ஐஏஎஸ்; மற்றும் விவசாயத் துறையில் சிறுபான்மை விவசாயிகளின் சங்கத்தில் நிர்வாகியாக இருந்து ஓய்வுபெற்ற திரு.பர்வேஷ் ஷர்மா-ஐஏஎஸ், டாடா ஸ்டீல் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளர்களில் ஒன்றாக முன்னேறச் செய்த அனுபவமிக்க திரு.B.முத்துராமன் அவர்கள், ISROவின் முன்னாள் தலைவர் திரு.A.S.கிரண்குமார் அவர்கள் ஆகிய தலைசிறந்த ஆளுமைகள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆகஸ்ட்:

நதிகளை மீட்போம் இயக்கத்தின் முதல் முன்னோடி திட்டத்திற்கான பச்சைக்கொடி

2018 ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று, மகாராஷ்டிர அரசாங்கம் நதி வீரர்களால் உருவாக்கப்பட்ட விரிவான செயல்திட்ட அறிக்கையை அங்கீகரித்து அனுமதியை வழங்கியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

செப்டம்பர்:

2018 செப்டம்பர் மாதத்தில் நதிகளை மீட்போம் இயக்கம் ஓராண்டு நிறைவு

2017 செப்டம்பரில் துவங்கிய நதிகளை மீட்போம் இயக்கம் ஓராண்டு காலத்தில் பல்வேறு மைல்கற்களைத் தாண்டி, உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழலுக்கான இயக்கமாக உருவெடுத்துள்ளது.

September Collage

 

அக்டோபர்:

நாடு முழுக்க நதி வீரர்களின் பயணம்

கர்நாடகா: அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை கர்நாடகாவில் 3 மாவட்டங்களில் காவிரி நதி புத்துயிராக்க திட்டத்திற்கான ஒரு அடிப்படையான கணக்கெடுப்பு ஒன்று கர்நாடக குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

Karnataka

இந்த கர்நாடக பயணத்தின்போது, வனச்சரக அதிகாரிகள், வனக்காவலர்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து கர்நாடக வனப்பகுதிகளான மைசூர், குடகு மற்றும் சம்ரஜனகரா ஆகிய மாவட்டங்களில் நதிகளை மீட்போம் குழுவினர் தற்போதைய நிலவரங்கள் குறித்து அறிந்துகொண்டு, அங்கு காடுகள் உருவாக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் 6 மாநிலங்களில் நதிகளை மீட்போம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை தவிர்த்து, நதிகளை மீட்போம் குழுவினர் அசாம், பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணித்து முதற்கட்ட செயல்பாடுகள் மற்றும் நதிகளை தேர்வு செய்வதற்கான தகவல் சேகரிப்பு ஆகியவை ஆகியவற்றை மேற்கொண்டனர்

AssamPunjabChhattisgarh & Gujarat

நவம்பர்:

ஜெனிவா அமைதி வாரத்தில் நதிகளை மீட்போம் இயக்கம்.

Geneva

டிசம்பர் :

நான்காவது தேசிய உயர்மட்ட குழு சந்திப்பு – புதிய இலக்குகள் நிர்ணயம்

இந்திய நதிகளை மீட்பதற்கும், இந்தியாவை ஒரு தன்னிறைவுபெற்ற வளமிக்க நாடாக மாற்றுவதற்காகவும் அடுத்தகட்ட கலந்துரையாடல்களை நோக்கி டெல்லியில் நதிகளை மீட்போம் இயக்கத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் Confederation of Indian Industry (CII) என்ற அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

சிறப்பான சென்ற வருடம் & மகத்தான புது வருடம் 2019

காவிரி நதிக் கரையோரங்களில் 25 கோடி மரங்கள் நடுவதற்கான முன்னோடி திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.

வேளாண் காடுகள் மற்றும் வேளாண் தோட்டம், மண்வள மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை மற்றும் சமூக நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற வழிமுறைகள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 3 முதல் 7 மடங்கு வரை அதிகரிப்பதற்கான குறிக்கோளுடன் மகாராஷ்டிராவில் முன்னோடித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மேலும் கூடுதலான நிலப்பரப்புகளில் செயல்படுத்தப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படு.

ஆசிரியர் குறிப்பு: 2019ல் நாம் பெரிய அளவில் களப்பணிகளில் இறங்கி பணியாற்ற உள்ளோம். எங்களுடன் இணைந்து இந்த மாபெரும் முன்னெடுப்பில் நீங்களும் பங்காற்றலாம். முழுநேர தன்னார்வ தொண்டராக பதிவு செய்வதற்கு RallyforRivers.org