வெள்ளைப் பூசணி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

தானிய மாவு - 1/2 கப்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோதுமை ரவா - 1/4 கப்

வெள்ளைப்பூசணி - 1/2  கப் (துருவியது)

இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்

தயிர் - 2 டேபுள் ஸ்பூன்

ஓமம் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

துருவிய வெள்ளைப் பூசணிக்காயில் கோதுமை மாவு, கோதுமை ரவா, தானிய மாவு (வரகு, தினை, சாமை, குதிரைவாலி நான்கையும் கலந்து அரைத்தது) இஞ்சி விழுது, தயிர், ஓமம், சீரகம், உப்பு அனைத்தையும் சேர்த்து பிசைய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி தட்டும் பதத்திற்கு பிசைந்து, தேய்த்து, தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் பூசணி சப்பாத்தி தயார். பூசணிக்கு பதிலாக கேரட், பீட்ரூட், பாலக் மற்றும் வெந்தயக்கீரை, முள்ளங்கி, சுரைக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றைக்கூட சேர்த்து இந்த சப்பாத்தி செய்யலாம்.