வெல்லக் கொழுக்கட்டை செய்யும் விதம்!
நம் பாரம்பரிய பதார்த்தங்களில் கொழுக்கட்டைக்கு தனி இடமுண்டு! அதில் வெல்லம் சேர்த்து செய்யும்போது ருசியும் ஆரோக்கியமும் இன்னும் கூடுமல்லவா?! இதோ இங்கே ரெசிபி உங்களுக்காக!
 
 

வெல்லக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:
புட்டு மாவு - 1 கப்
தேங்காய் துருவல் - 1கப்
வெல்லம் - அரைகப்
சுக்கு பொடி - சிறிதளவு

செய்முறை:
புட்டு மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து, வெல்லத்தை நன்கு பொடி செய்து சேர்த்து, கொதித்ததண்ணீர் ஊற்றி நன்கு கையில் ஒட்டாத அளவிற்கு பிசையவும். அதை சிறு சிறு நீள உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். தேவையானால் அதன் மேல் கொஞ்சம் தேங்காய் துருவல் தூவி பரிமாறலாம். வெல்லம் இல்லாமல் உப்பு போட்டு, உப்பு கொழுக்கட்டையும் செய்யலாம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1