வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸ்
ஃபிங்கர் சிப்ஸ் என்றாலே உருளைக் கிழங்கில் பொரித்த சிப்ஸ் வகைதான் நம் நினைவிற்கு வரும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க...
 
 

ஈஷா ருசி

ஃபிங்கர் சிப்ஸ் என்றாலே உருளைக் கிழங்கில் பொரித்த சிப்ஸ் வகைதான் நம் நினைவிற்கு வரும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க...

வெஜிடபிள் ஃபிங்கர் சிப்ஸ்

தேவையான பொருட்கள்:

பச்சை பயிறு - 1 கப்
காய்கறி - 2 கப் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், கோஸ்)
குடைமிளகாய் - 1
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

  • பச்சை பயிரை இரண்டு மணிநேரம் ஊறவைத்து தண்ணீரை நன்கு வடித்துவிட்டு நைஸாக அரைத்து அதில் உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • காய்கறிகளை நறுக்கி வேக வைக்கவும்.
  • வெந்த காய்கறிகளுடன் பேக்கிங் சோடா, தயிர் சேர்த்து கிளறி அரைத்து வைத்துள்ள பச்சை பயிறு மாவில் கொட்டி கலக்கவும்.
  • இதை இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.
  • பின் அதை எடுத்து நீள நீளமாக கட் செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1