ஷாம்பவி உணர்த்திய காரணம் இல்லா ஆனந்தம்!
நான் உணர்ந்த அனுபவங்களை வார்த்தையில் சொல்வதென்பது இயலாதது. ஒரு விஷயம் நான் சொல்வதானால், நான் அதுவரை அறிந்திராத தூய்மையான ஆனந்தத்தை உணர்ந்தேன். அது வாழ்வை வாழ்வதற்கான இன்னொரு பரிமாணம்.
 
ஷாம்பவி உணர்த்திய காரணம் இல்லா ஆனந்தம்!, Shambavi unarthiya karanam illa anandam
 

எல்லாம் தனக்கு கிடைத்துவிட்டதாக நினைத்த ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்!

பாம் லிலாக்:

(உண்மைத் தேடுதலில் உள்ளவர், தியான அன்பர், யோகா ஆசிரியர்)


palm lilak akka, ஷாம்பவி உணர்த்திய காரணம் இல்லா ஆனந்தம்!, Shambavi unarthiya karanam illa anandam

ஒரு சிறந்த நிர்வாக ஆலோசனை நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்தில் சிறப்பானதொரு சமூக அந்தஸ்த்துள்ள வாழ்க்கையைப் பெற்றுள்ளதோடு, அலமாரிகள் நிறைய பிராண்டட் காலணிகள், வாஷிங்டன் DC நகரில் ஒரு வசதியான வீட்டுக்கும் ஒரு BMW காருக்கும் சொந்தக்காரர் அந்த பெண்மணி! சென்ட்ரல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நாள் காலையில் அவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போது, அவர் மந்தமான நிலையில் உடல்கோளாறுகளுடன் இருப்பதாக உணர்ந்தார்; தனது கன்னத்தில் இருந்த ஒரு காயத்தையும் கண்டார். முந்தைய நாள் இரவில் அவர் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்ட அந்த காயத்தைப் பார்த்து, அவர் தனக்குள் கேட்டார், “இந்த முட்டாள்தனத்தை நிறுத்து. நீ யார்? உன்னுடைய வாழ்க்கையை இப்படியொரு நரகத்தை நோக்கி கொண்டுசெல்கிறாய்?

நான்தான் அந்த பெண்மணி. மூன்று வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கை இப்போது இருப்பதிலிருந்து முற்றிலும் தலைகீழாய் இருந்தது. இந்த வாழ்க்கை மாறுவதற்கு என்ன தேவை?, குறிப்பாக நீங்கள் ஒரு துறையை மற்றும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை விட்டு வெளியேறுவதானால் முதலில் ஒருவருக்கு துணிச்சல் தேவை, நான் செய்ததைப் போல! பொறுமையும் கூட அதற்குத் தேவை. ஆனால், உண்மையாக இதற்கு தெரிந்துகொள்ள வேண்டுமென்ற தேடுதலும் வாழ்வை முழுமையாய் உணர்வதற்கான ஒரு திறந்த மனப்பான்மையும் விருப்பமும் தேவைப்படுகிறது. இத்தகையதொரு சவாலான முயற்சியை கையிலெடுத்தபோது, எனக்கு ஒரு குரு தேவைப்பட்டார். நான் இப்போது சத்குருவை அறிமுகம் செய்யலாமா?

சத்குருவிற்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்!

அனைத்துமே தற்காலிக வடிகாலாகவே இருந்தன; எதுவும் நிரந்தர தீர்வாக அமையவில்லை. நான் சத்குருவைப் பற்றி தெரிந்துகொள்ளும் அந்த முதல்நாள் வரை...

ஒரு யோகி, ஞானி மற்றும் நான் சந்தித்தவர்களில் மிக ஆனந்தமான ஒரு மனிதர். மனித சமூகத்தின் நல்வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு. அனைத்து வயதுப் பிரிவினருக்கும், பலதரப்பட்ட ஆர்வத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்ற பல்வேறு விதமான யோகா நிகழ்ச்சிகளை ஈஷா வழங்குகிறது.

அடிப்படையான யோகா மற்றும் தியானங்களைக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஷாம்பவி மஹாமுத்ரா மற்றும் ஈஷா கிரியா ஆகிய நிகழ்ச்சிகள் அறிமுக நிகழ்ச்சிகளாக வழங்கப்படுகின்றன. தங்கள் வியாபாரம் மற்றும் தொழிலில் வளர்ச்சி காண தீவிர விருப்பமுள்ளவர்களுக்கு ‘இன்சைட்’ எனப்படும் நிகழ்ச்சி சிறந்த வழிகாட்டுதலாய் அமைகிறது. பலவிதமான ஈஷா யோகா நிகழ்ச்சிகள் வழங்கப்படுவது என்பதற்கு இவை இரண்டும் உதாரணங்கள்.

இந்த மனிதர் நீளமான தாடியுடன் வேடிக்கையான மேலங்கியுடன் காணப்படுகிறார் என நீங்கள் ஒருவேளை நினைக்கக்கூடும். அவர் வழக்கமான ஒரு யோகா ஆசிரியராக நிச்சயம் இல்லை. மேற்கத்திய நாடுகளில் யோகா என்றால் வேகமாக செயல்படுவது, கலோரிகளை எரிப்பது போன்ற மாறுபட்ட புரிதலைக்கொண்டுள்ளோம்.

சத்குரு வழங்கும் யோகாவில் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுமில்லை மற்றும் அனைத்தும் உள்நிலை பரிமாற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. பாரத கலாச்சாரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ள யோக அறிவியலின் அடிப்படையில் இங்கு பயிற்சிகள் அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாம் ‘குரு’ என்ற வார்த்தையை ஒருவேளை உபயோகிக்காமல் இருக்கலாம். அந்த வார்த்தை நம்மில் பலருக்கும் அச்சுறுத்துவதாய் தோன்றுகிறது. ஆனால் பயப்படத் தேவையில்லை. நீங்கள் ஒரு மாரத்தான் ஓட்டப்போட்டியில் ஓட விரும்பினால், நீங்கள் ஒரு பயிற்சியாளரை நியமிப்பதற்கு அச்சம்கொள்வீர்களா? அதுபோலவே, நீங்கள் உங்கள் வாழ்வில் நிரந்தர மாற்றங்களை தீர்வாக ஆக்க விரும்பினால், யோகாவை ஒரு வாகனமாக உபயோகிக்க விரும்பினால், அப்போது உங்களுக்கு அனுபவம் வாய்ந்த ஒரு குரு தேவைப்படுகிறார்.

எனது இந்திய பயிற்றுநர்!

நான் உணர்ந்த அனுபவங்களை வார்த்தையில் சொல்வதென்பது இயலாதது. ஒரு விஷயம் நான் சொல்வதானால், நான் அதுவரை அறிந்திராத தூய்மையான ஆனந்தத்தை உணர்ந்தேன். அது வாழ்வை வாழ்வதற்கான இன்னொரு பரிமாணம்.

நம்புங்கள்! இந்த ‘குரு’ என்பதைப் பற்றியெல்லாம் நான் எப்போதும் நம்பிக்கைகொண்டதில்லை! நான் சுயமாக எழுந்துநின்றேன்; எனது சொந்த கால்களில் வாழ்வை சந்தித்தேன். அதெல்லாம் சரிதான், ஆனால் அதே நேரத்தில் எனது 40 வயதை தாண்டிய வேளையில் எனது சொந்த கால்கள் எனக்கு எந்த வகையிலும் துணைநிற்கவில்லை. உண்மை என்னவென்றால் நான் உறுதியான அடித்தளத்தை அமைக்க நேரம் எடுத்துக்கொண்டதில்லை. எனது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் எனது கட்டுப்பாட்டை மீறிப் போனது. மன அழுத்தத்தை சமாளிக்கும் எனது திறனும் கேள்விக்குறியானது. வெளிப்படையாகச் சொல்வதானால் ரெட் ஒயின் மற்றும் சிகரெட் ஆகிய இரு நண்பர்களே என்னுடன் உதவியாய் இருந்து வந்தனர்.

கவனித்துப் பார்க்கையில், நான் நிலையாக இல்லை என்பதைக் கூட எப்போதும் அறிந்துகொள்ளவில்லை. மன அழுத்தம் என்பது இயல்பானது என்று நான் நினைத்தேன். பயம்-அச்சம் என்பதெல்லாம் அன்றாட வாழ்வின் அம்சங்கள் என்றும், நான் அதனை உள்வாங்கித்தான் ஆகவேண்டும் என்றும் நினைத்திருந்தேன். நான் சில தன்னம்பிக்கை புத்தகங்களைப் படித்தேன்; ரெய்க்கி மற்றும் உடற்பயிற்சிக்கென பவர் யோகா மற்றும் எனது அன்றாட ஜாதக பலன்களைப் படித்து தீர்வை தேடுவது போன்றவற்றை முயற்சித்தேன். அனைத்துமே தற்காலிக வடிகாலாகவே இருந்தன; எதுவும் நிரந்தர தீர்வாக அமையவில்லை. நான் சத்குருவைப் பற்றி தெரிந்துகொள்ளும் அந்த முதல்நாள் வரை...

நான் சத்குருவின் புத்தகங்கள் படித்தேன் மற்றும் அவரது வீடியோக்களைப் பார்க்கத் துவங்கினேன். ஐநா சபையில் அவரது பேச்சு மற்றும் உலக பொருளாதார மாநாட்டில் அவரது உரை போன்ற சிறப்பான நடவடிக்கைகள் என்னை வெகுவாக ஈர்த்தன. அவர் கூறும் செய்திகள் அனைத்தும் நேரடியாகவும் தெளிவாகவும் அமைந்தன. அது எனக்கு ஏற்புடையதாக இருந்தது. அவரது ஒவ்வொரு வார்த்தையாலும் நான் மேலும் மேலும் உத்வேகம்கொண்டேன். எனக்குள் தொடரும் எதிர்மறை எண்ணங்களை கடந்துசெல்வதற்கு யாரேனும் அல்லது ஏதாவது ஒன்று எனக்கு உதவுமா என்பதே எனது தேடலாக இருந்தது.

சத்குரு வழங்கும் ஷாம்பவி மஹாமுத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவெடுத்து அதனை முயற்சித்து பார்த்தேன். அந்த 21 நிமிட பயிற்சி எனது அன்றாட செயல் அட்டவணையில் எளிதாகப் பொருந்தியது. டென்னஸியில் உள்ள ஆசிரமத்தில் சத்குருவுடன் ஒரு 4 நாட்கள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன். நான் உணர்ந்த அனுபவங்களை வார்த்தையில் சொல்வதென்பது இயலாதது. ஒரு விஷயம் நான் சொல்வதானால், நான் அதுவரை அறிந்திராத தூய்மையான ஆனந்தத்தை உணர்ந்தேன். அது வாழ்வை வாழ்வதற்கான இன்னொரு பரிமாணம். நான் அதை இன்னும் அதிகமாக உணர நினைத்தேன்.

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்!

நல்ல உற்சாகமிக்க சக்தி ததும்பும் நிலையில் நானாகவே தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். போதைப் பழக்கங்களுக்கு அடிமையான நிலை முற்றிலும் மாறிவிட்டது. என்னைச் சுற்றி நிகழும் செயல்களின் தாக்கத்தால் மிகக்குறைந்த அளவே பாதிக்கப்படுகிறேன் மற்றும் பூரண அமைதியை உணர்கிறேன்.

ஷாம்பவி பயிற்சி முடித்து ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தபிறகு, என்னுடைய வாழ்க்கை நிஜமாகவே பரிமாற்றம் அடைந்துள்ளது என்பதை என்னால் இப்போது உறுதியாகச் சொல்லமுடியும்.

எனது தினசரி யோகப் பயிற்சிகள், தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவை எனது உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் உள்நிலை சக்தி ஆகியவற்றின் சமநிலைக்கு உதவுகிறது. நல்ல உற்சாகமிக்க சக்தி ததும்பும் நிலையில் நானாகவே தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்துவிடுகிறேன். போதைப் பழக்கங்களுக்கு அடிமையான நிலை முற்றிலும் மாறிவிட்டது. என்னைச் சுற்றி நிகழும் செயல்களின் தாக்கத்தால் மிகக்குறைந்த அளவே பாதிக்கப்படுகிறேன் மற்றும் பூரண அமைதியை உணர்கிறேன். நானே நம்ப கடினமான விஷயம் என்னவென்றால், வாழ்வை பயம் மற்றும் சந்தேகங்களுடன் அணுகிக்கொண்டிருந்த நான், தற்போது தூய ஆனந்தத்தை உணர்கிறேன்.

ஆனந்தம் என்றால் என்ன? உங்கள் இருப்பின் ஆழமான அம்சத்தின் ஒரு உன்னத வெளிப்பாடு அது! ச்சீஸ் பீட்ஸா சாப்பிடும்போது ஒருவர் உணரும் ஒரு மகிழ்ச்சி அல்ல அது; அந்த மகிழ்ச்சி தற்காலிகமானது. உண்மையான ஆனந்தம் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப வந்து போகும் ஒரு விஷயமல்ல.

உண்மையான ஆனந்தம் என்பது கதிரவன் அஸ்தமிக்கும் அழகில் நீங்கள் தன்னை மறந்து அழும் ஒரு தன்மையாக உங்களை முழுமையாக ஆட்கொள்ளக் கூடியது. அதை தேடி அலைய தேவையில்லை; அது உங்களுடைய ஒரு பகுதி. அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது, ஆனால் பெரும்பாலான நேரங்களில் நாம் அதனை காண இயலவில்லை. ஒரு குரு உங்களால் காண இயலாததை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார். வாழ்வை பிரச்சனைகளின் தொகுப்பாக பார்பதை விடுத்து, நம்மைச் சுற்றியிருக்கும் ஆனந்தத்தை பார்ப்பதற்கான புதிய ஜோடி கண்களை பெறுவோம்! இதற்கான நேரம் இன்னும் இருக்கிறது, வாருங்கள்!!

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1