சத்தான ‘முட்டியா’ ரெசிபி!
‘முட்டியா’ அதிகம் கேள்விப்படாத பெயராக இருந்தாலும், சாப்பிட ரொம்ப Tastyயான ரெசிபி… கூடவே சத்தும்! செய்து பாருங்கள்!
 
 

ஈஷா ருசி

‘முட்டியா’ அதிகம் கேள்விப்படாத பெயராக இருந்தாலும், சாப்பிட ரொம்ப Tastyயான ரெசிபி... கூடவே சத்தும்! செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 100 கிராம் 
கோதுமை மாவு - 1 கப் 
கோதுமை ரவா - 2 டேபிள் ஸ்பூன் 
பாலக் கீரை - 1 கைப்பிடி 
வெந்தய கீரை - 1 கைப்பிடி 
தேங்காய் துருவல் - சிறிதளவு 
இஞ்சி விழுது - சிறிதளவு 
ஓமம் - 1 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
கொத்தமல்லி தூள் - 1 
ஸ்பூன் உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தாளிக்க

செய்முறை:

பாலக் கீரை, வெந்தய கீரை இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கோதுமை மாவு, கோதுமை ரவா, நறுக்கிய கீரை ஆகியவற்றை கலந்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய், ஓமம், இஞ்சி விழுது, உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும், அதில் இந்த மாவினை சிறு உருண்டையாக எடுத்து போட்டு வேகவிடவும். அதில் வேகவைத்த பீன்ஸை சேர்க்கவும். கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி, துருவிய தேங்காய் சேர்க்கவும். காரம் அதிகம் தேவைப்பட்டால் மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்க்கலாம். இல்லையென்றால் மாவில் சேர்த்ததே போதுமானது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1