ஈஷா ருசி

கொள்ளு கட்லெட்

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
அவல் - 1 கப்
உருளைகிழங்கு - 1 
கேரட் - 1
ஸ்வீட் கார்ன் - 1
குடைமிளகாய் - பாதி
முட்டைகோஸ் - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 2 டீபூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொள்ளை நன்கு ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். கொள்ளு, உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை வேகவைத்து, கையால் மசித்துக்கொள்ளவும். கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை நைசாக நறுக்கிக்கொள்ளவும். அவலை 15 நிமிடம் ஊறவைக்கவும். அனைத்தையும் கலந்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா, இஞ்சி விழுது, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்துப் பிசைந்து, தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு கட்லெட்டாக சுட்டு எடுக்கவும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.