சப்போட்டா பழ பொங்கல் - சாப்பிட ரெடியா?
சத்தும் சுவையும் மிகுந்த ஒரு பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி இங்கே...
 
சப்போட்டா பழ பொங்கல் - சாப்பிட ரெடியா?, Sappotta pazha pongal sappida readya?
 

ஈஷா ருசி

சத்தும் சுவையும் மிகுந்த ஒரு பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி இங்கே...

சப்போட்டா பழ பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
பால் - மூன்றரை கப்
வெல்லம் - சுவைக்கேற்ப
சப்போட்டா பாழம் - 3
நெய் - 50 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய் - 4
ஜாதிக்காய் - சிறிதளவு (மிளகு அளவு)

செய்முறை:

முதலில் பச்சரிசியை கழுவி பால் சேர்த்து குக்கரில் 5, 6 விசில் வரும்வரை வேகவைத்து இறக்க வேண்டும். சப்போட்டா பழத்தை தோல், விதை நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். விசில் அடங்கியதும் வேகவைத்த அரிசியை மசித்து, அதில் நறுக்கி வைத்துள்ள சப்போட்டா பழத்தை சேர்த்து கிளறி பின்னர் வெல்லத்தையும் சேர்த்து, மெல்லிய தீயில் வைத்து கிளற வேண்டும். அதில் ஏலக்காய், ஜாதிக்காய் பொடித்து போட வேண்டும். பிறகு நெய்யில் முந்திரியை வறுத்து போட்டு கிளறி இறக்கி பரிமாறவும். இந்த பொங்கல் மிகவும் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1