சப்போட்டா பலூடா
உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் "பலூடா சூப்பர்" என்று சொல்லி உங்களைப் பாராட்ட வேண்டுமா? இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள சப்போட்டா பலூடாவை செய்து கொடுத்து பாருங்கள்...
 
ஈஷா ருசி

உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் "பலூடா சூப்பர்" என்று சொல்லி உங்களைப் பாராட்ட வேண்டுமா? இதோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள சப்போட்டா பலூடாவை செய்து கொடுத்து பாருங்கள்...

தேவையான பொருட்கள்:

சப்போட்டா பழம் - 250 கிராம்
பால் - 250 மி.லி
சர்க்கரை - சிறிதளவு
சாக்லெட் - 10
இளநீர் வழுக்கை, செர்ரி பழம், உலர் திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

  • சப்போட்டாவை உரித்து விதை நீக்கி சதைப் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் பால் விட்டு சர்க்கரை கலந்து, சாக்லேட்டுக்களை நசுக்கி தூளாக்கி போட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அதை ஒரு கண்ணாடிக் கோப்பையில் விட்டு, இளநீர் வழுக்கை, செர்ரி, முந்திரி, உலர்திராட்சையை சிறுதுண்டுகளாக நறுக்கிப் போட்டு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து பருகினால் சுவையாக இருக்கும்.
  • சப்போர்ட்டா பலூடா மிகவும் சத்தானதும் கூட.
 
  0 Comments
 
Login / to join the conversation1