ஜனவரி 4, 2015 சேலத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள்! சத்குரு பிரதிஷ்டை செய்ய, அங்கே பிறக்கிறாள் மீண்டும் ஒரு லிங்கபைரவி! பிராணப் பிரதிஷ்டைகள் நடைபெறும் இடத்தில் பொதுவாக பொதுமக்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் சத்குரு செய்யும் இந்தப் பிரதிஷ்டையிலும், பொதுமக்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் விபரங்களுக்கு மேலே படிக்க...

மற்ற கலாச்சாரங்கள் 'கடவுள் நம்மை படைத்தார்' என சொல்லிக் கொண்டிருக்க, நம் பாரதம் மட்டும் 'கடவுளை உருவாக்கும்' கலாச்சாரமாக இருந்து வந்துள்ளது. இங்கே பல யோகிகளும் ஞானிகளும் பல சக்திவாய்ந்த வடிவங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்த வகையில், நிகழ்காலத்தில் சத்குரு பிரதிஷ்டை செய்துள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, ஆதியோகி ஆலயம், தீர்த்த குண்டம் போன்ற சக்தி வடிவங்களும் அடங்கும்.
தோன்றிய நாளிலிருந்தே தேவி லிங்கபைரவி பல்லாயிரம் பக்தர்களை தன்பால் ஈர்த்துக் கொண்டுவிட்டாள். அவள் மீண்டும் பிறப்பெடுப்பதை அருகில் இருந்து காண பல்லாயிரம் பேர் சேலம் நோக்கி ஜனவரி 4 அன்று பயணிக்கிறார்கள். பலரையும் பரவசத்தில் ஆழ்த்தும் கருணைக்கடல் தேவியின் அன்பையும், அருளையும், கருணையையும், அவளைக் காணும் யாருமே உணராமல் இருக்கமுடியாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

லிங்கபைரவி பிரதிஷ்டை பற்றி சத்குரு பேசும்போது...

"உலகில் நம் புரிதலுக்கு உதவும் வகையில் எல்லாவற்றையும் ஆண்-பெண் (அ) சிவன்-சக்தி என்று பிரித்திருக்கிறோம். அவ்வகையில், லிங்கபைரவியை பெண் சக்தி என்று சொல்லலாம். இந்த 'பெண் சக்தி'க்கு ஏற்றவாறு முக்கோண வடிவிலான உரைவிடத்தை இங்கே நாம் அமைத்திருக்கிறோம். இந்தக் கோவிலின் வடிவமைப்பு பல கணக்குகளை உள்ளடக்கியது. முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் 33 அடி நீளம் கொண்டது. கோவிலின் மற்ற ஒவ்வொரு அங்கமும் 11ன் பெருக்குத் தொகையாக உள்ளது. இந்த எண்கணிதத்திற்குப் பின்னால் ஒரு பெரும் விஞ்ஞானமே அடங்கியிருக்கிறது.

நமது வாழ்வில் இன்று பொருளாதாரமும், பிழைப்பும் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த குணங்கள் ஆண்தன்மை. எப்போது நம் வாழ்வில் அன்பு, கலை, இசை, நேர்த்தி ஆகியவை முக்கியத்துவம் பெறுகிறதோ, அப்போது பெண்தன்மை உயிரோட்டத்துடன் மிளிரும். இன்று நம் பெண்களை எல்லாம் மெதுவாக ஆண்களாக மாற்றி வருகிறோம். அவர்களையும் பணம் சம்பாதிப்பதில் ஈடுபடுத்துகிறோம். இதனால் அவர்கள் தங்களின் தன்னிகரில்லா பெண்தன்மையின் குணங்களை இழந்து, நடமாடும் பொம்மைகளாக ஆகி வருகிறார்கள்.

ஆனால் லிங்கபைரவியின் உரைவிடத்திற்கு வரும் ஒவ்வொருவரும் பெண்மையின் மகத்தான சக்தியை இங்கு உணர முடியும். இங்கு நாம் உருவாக்கும் பெண், தேவி லிங்கபைரவி, தன்னுள் அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிற, சக்திமிக்க தெய்வீகப் பெண் தன்மையின் பிரம்மாண்ட அம்சம். தீவிரமும் உக்கிரமும் நிறைந்து, அதே நேரத்தில் தாய்மையின் பாசமும் நேசமும் கருணையும் கலந்து அனைவரையும் பரவச நிலையில் திளைக்கச் செய்யும் பெண்மையின் சாரம்.

லிங்கபைரவி பிரதிஷ்டைக்கான சாதனா...

சேலத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை சத்குரு இந்தப் பிரதிஷ்டையை செய்ய உள்ளார். இந்த பிரதிஷ்டையில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு தேவி சாதனா வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தினமும் இருவேளை குளித்து, ஒரு வேளை உணவைத் தவிர்த்து விரதமிருந்து, தேவி தண்டத்துடன் தேவி ஸ்துதி சொல்லி தங்களை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதிஷ்டை தினத்தன்று அவர்கள் வெண்ணிற ஆடை அணிந்து இதில் பங்குபெறுவார்கள்.

ஜனவரி 4, 2015 நிகழவிருக்கும் இந்த அற்புதத்திற்காக பலரும் பேராவலுடன் காத்திருக்கின்றனர்!!!