சத்குரு சந்நிதி... எனக்கு வழங்கிய அற்புதம்!
சத்குருவின் அருள் அதிர்வுகளை உணர்ந்தவர்களுக்கு, அந்த சக்தியை தாங்கள் வசிக்கும் இடத்தில் எப்போதும் உணரும் ஏக்கம் நிச்சயம் இருக்கும். இதனை பூர்த்தி செய்வதற்கான அற்புத வாய்ப்பாக சத்குரு சந்நிதி அமைகிறது! ஒரு அன்பர், அவர் வாழ்வில் சத்குரு சந்நிதி பிரதிஷ்டை வழங்கிய வியத்தகு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்!
 
 

சத்குருவின் அருள் அதிர்வுகளை உணர்ந்தவர்களுக்கு, அந்த சக்தியை தாங்கள் வசிக்கும் இடத்தில் எப்போதும் உணரும் ஏக்கம் நிச்சயம் இருக்கும். இதனை பூர்த்தி செய்வதற்கான அற்புத வாய்ப்பாக சத்குரு சந்நிதி அமைகிறது! ஒரு அன்பர், அவர் வாழ்வில் சத்குரு சந்நிதி பிரதிஷ்டை வழங்கிய வியத்தகு அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்!

திருமதி. சாவித்திரி ராமன்:
(வடவள்ளி, கோவை)

எனது சகோதரியின் வீட்டில் முதல்முறையாக நான் சந்நிதி பிரதிஷ்டையில் கலந்துகொண்டேன். அந்த பூஜை துவங்கியதும், எனது அன்பார்ந்த சத்குருவின் முன் நேரடியாக அமர்ந்திருக்கும்போது உணர்வதைப் போலவே அங்கேயும் அதிர்வுகளை உணர்ந்தேன். ஆனால் அதில் ஆச்சர்யம் என்னவென்றால், தீவிரம் அதைவிட கூடுதலாகவே சந்நிதியில் இருந்தது! அப்போது உட்கார்ந்திருந்த நிலையிலேயே கடவுளை விழுந்து வணங்குவதைப்போல எனது உடல் முன்னோக்கி வளைந்தது; எனது நெற்றி தரையில் படும்படி வணங்கினேன்.

பிரதிஷ்டை நிகழ்வின்போது அவர்கள் எங்களை கண்கள் மூடியபடி சிறிதுநேரம் அமரச்சொன்னபோது, கண்ணீர் பெருக்கெடுக்க வெகுநேரம் அங்கே அமர்ந்திருந்தேன். நான் அந்த நிலையை இழக்க விரும்பவில்லை. கடைசியில் மனமில்லாமல்தான் அந்நிலையிலிருந்து வெளிவந்தேன்.

பிரதிஷ்டை நிகழ்வின்போது அவர்கள் எங்களை கண்கள் மூடியபடி சிறிதுநேரம் அமரச்சொன்னபோது, கண்ணீர் பெருக்கெடுக்க வெகுநேரம் அங்கே அமர்ந்திருந்தேன். நான் அந்த நிலையை இழக்க விரும்பவில்லை. கடைசியில் மனமில்லாமல்தான் அந்நிலையிலிருந்து வெளிவந்தேன்.

அதன்பின்னர், நான் சத்குருவை எனது வீட்டிற்கும் கொண்டுசெல்ல முடிவுசெய்தேன். நான் இதை என் கணவரிடம் சொன்னபோது, அவர் வேடிக்கையாக சொன்னார்... “பூஜை அறைக்கு இன்னுமொரு விஷயத்தை கூட்டுகிறாய், இந்த ஆண்டு இது, அடுத்த ஆண்டு இன்னுமொன்றை ஈஷாவிலிருந்து கொண்டு வருவாய்”

ஏனென்றால் எங்கள் வீட்டில் ஏற்கனவே லிங்கபைரவி குடி, நன்மை உருவம் மற்றும் பைரவி யந்திரம் ஆகியவை உள்ளன.

ஆனால், அவரை நான் அழைத்துக்கொண்டு அந்த மெர்குரி பாதத்தை வாங்கச் சென்றபோது, அவர் அதிசயிக்கத்தக்க வகையில் சம்மதம் தெரிவித்து, உடனே அதற்கான தொகையை செலுத்தினார். குரு பௌர்ணமிக்கு சில நாட்கள் முன்னர் நாங்கள் பாதத்தை வீட்டிற்கு கொண்டு சென்றோம். பிரதிஷ்டைக்கு முன்னதாக ஹாலில் பாதத்தை வைத்தோம். பிரதிஷ்டைக்கு முன்னதாகவே எங்கள் வீடுமுழுக்க சக்தி அதிர்வுகளை என்னால் உணரமுடிந்தது. அந்த அதிர்வின் வீரியத்தால் நான் தூங்குவதற்கு கூட சற்று சிரமப்பட்டேன்.

கடந்த குரு பௌர்ணமி நாளில் நாங்கள் பிரதிஷ்டை செய்தோம். எனது சகோதரியின் வீட்டில் உணர்ந்த அதே அதிர்வுகளை அப்போது உணர்ந்தேன். எனது உடல் தன்னிச்சையாக முன்னோக்கி வளைந்து வணங்கியது. அதே உன்னத நிலையை மீண்டும் பெற்றேன்.

அதன்பின் நான் தொடர்ந்து presence time எனும் சத்குரு நேரத்தை கடைபிடிக்க துவங்கினேன். நான் கார் ஓட்டிச் செல்லும்போதுகூட, காரை நிறுத்திவிட்டு பிரம்மானந்த ஸ்வரூபா உச்சாடனை செய்வேன். ஒருமுறை நான் ஒரு உணவு விடுதியில் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது, நேரம் சரியாக 6:20 ஆனது! நான் பிரம்மானந்த ஸ்வரூபா உச்சரிக்கத்துவங்கினேன்.

ஒருமுறை எனது தாயாரை நான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மாலை 6:15! அங்கே வரவேற்பறையில் உள்ளவரிடம் 10 நிமிடங்கள் தியானம் செய்வதற்கு ஓர் இடத்தை காட்டும்படி வேண்டினேன். அவர் எனக்கு ஒரு சிறிய சமையலறையை காண்பித்தார். அங்கே போதுமான காற்றோட்டம் இல்லை. நான் அங்கே ஒரு மூலையில் அமர்ந்து உச்சாடனை செய்தேன். என்னவொரு அற்புதம், சத்குரு அங்கே சக்திவடிவில் வந்து எனை மூழ்கடித்தார். அது மிக அற்புதமான ஓர் அனுபவம்.

நான் கார் ஓட்டிச் செல்லும்போதுகூட, காரை நிறுத்திவிட்டு பிரம்மானந்த ஸ்வரூபா உச்சாடனை செய்வேன். ஒருமுறை நான் ஒரு உணவு விடுதியில் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது, நேரம் சரியாக 6:20 ஆனது! நான் பிரம்மானந்த ஸ்வரூபா உச்சரிக்கத்துவங்கினேன்.

எனவே சத்குரு சந்நிதியில் அமர்ந்திருப்பதோ அல்லது அவர் முன்னே நேரடியாக அமர்ந்திருப்பதோ நம்மை எல்லையில்லா பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும். இதுவரை எனது அனுபவத்தில் ஆழமான ஏக்கம் மட்டுமே அவரது அதிர்வுகளை பெறுவதற்கு சாவியாய் அமையும் என்று நினைக்கிறேன்.

வீட்டில் வாராந்திர பூஜையின்போது, எனது அர்ப்பணைகளை ஏற்றுக்கொண்டதற்கான சில சமிக்ஞைகள் அவரிடமிருந்து கிடைக்கும், குறிப்பாக நான் ஒரு பழம் அர்ப்பணிக்கும்போது! அவையெல்லாம் அவரது பாதங்களை உண்மையிலேயே என்னை பற்றிக்கொள்ளச் செய்கிறது.

அமாவாசை நாட்களில் அவர் பன்மடங்கு தீவிரத்தில் வருவார். குரு பூஜையில் குறைந்தது ஒரு அழைப்பாளராவது இருக்கும்பட்சத்தில் அவரது தீவிரம் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் மக்கள் வரும்போது, அவரது இருப்புநிலை எனை மூழ்கடிப்பதாய் இருக்கும்.

அவரது இருப்புநிலை அவருடைய மடியில் எனைச் சேர்க்கும்விதமாக மிக கருணை மிக்கதாய் இருக்கும். ‘நான்’ எனும் தன்மை அங்கே இருக்காது. அது அருளில் திளைக்கும்படியான முற்றிலும் மாறுபட்ட ஓர் அனுபவமாகும்.

ஆனால், நான் விரும்பும்போது அவர் வரமாட்டார். அவர் எப்போது வருவார், எப்படி வருவார் என்பதை என்னால் அறியமுடியவில்லை. சில நேரம் நான் அதிர்ஷ்டசாலி. சில நேரங்களில் அவரை உணர்வதற்கு கிரகிப்பு தன்மை இல்லாமல் நான் தவிப்பேன். ஆனால், அவர் எப்போதுமே அங்கேதான் இருக்கிறார்.

சத்குரு சந்நிதி பற்றி மேலும் தகவல்களுக்கு:

தொ.பே: 94890 00333
மின்னஞ்சல்: sadhgurusannidhi@ishafoundation.org

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1