சத்குரு - ஞானத்தின் பிரம்மாண்டம் - சில துளிகள்
"சத்குரு - ஞானத்தின் பிரம்மாண்டம்" புத்தகமாக வெளிவந்த ஒரு பொக்கிஷம், இப்போது ஒலிப்பேழை வடிவில், உங்கள் இல்லங்களில் ஒலிக்க... வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும், தர்க்க ரீதியான கேள்விகளுக்குமான விடைகளை இந்த ஒலிப்பேழையின் மூலம், ஒரு ஞானியிடமிருந்து அறிந்துகொள்ளுங்கள்!
 
 

"சத்குரு - ஞானத்தின் பிரம்மாண்டம்" புத்தகமாக வெளிவந்த ஒரு பொக்கிஷம், இப்போது ஒலிப்பேழை வடிவில், உங்கள் இல்லங்களில் ஒலிக்க... வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும், தர்க்க ரீதியான கேள்விகளுக்குமான விடைகளை இந்த ஒலிப்பேழையின் மூலம், ஒரு ஞானியிடமிருந்து அறிந்துகொள்ளுங்கள்!

இது 3 மணி நேரம் கேட்கக்கூடிய ஒரு MP3.

'சத்குரு - ஞானத்தின் பிரம்மாண்டம்' என்பது மொத்தம் 582 பக்கங்கள் கொண்ட ஈஷாவின் நூல். ஈஷா, சத்குரு இவற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் படிக்க முற்படும் முதல் நூல்இதுதான். ஈஷாவின் மிகவும் ஆரம்பகால தியான அன்பர்கள், தங்களின் அன்றாட பிரச்சனைகளிலிருந்து முக்தி என்பது வரை, பல விஷயங்களை சத்குரு அவர்களிடம் மிகமிக விளக்கமாக கேட்டுப் பெற்ற பதில்கள் இந்த நூலில் அடங்கியுள்ளன.

பல புத்தகங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதை இந்த ஒரு புத்தகம் படித்தே தெரிந்து கொள்ள முடியும். இந்த நூலிலிருந்து முக்கியமான பல பகுதிகளை எடுத்து, தனது அனுபவங்களையும் சேர்த்து, கலைமாமணி மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் பல இடங்களிலும் சொற்பொழிவாற்றி வருகிறார்கள்.

நூலை முழுவதும் படித்து முடித்தவர்கள் கூட வியந்து பாராட்டுவதாக அந்த சொற்பொழிவுகள் அமைந்துள்ளன. ஏற்கனவே இந்த நூல் வாங்கியும் அதிகப்பக்கங்கள் காரணமாகவோ, வேலைப்பளு காரணமாகவோ படிக்க முடியாதவர்களும் அல்லது வாசிக்கும் பழக்கம் அதிகம் இல்லாதவர்களும்கூட இந்த MP3யை கேட்டுப் பயன்பெறலாம்.

உங்கள் பிரியமானவர்களுக்கு நல்ல, உபயோகமான ஒரு பரிசு வழங்க விரும்புபவர்கள், சத்குருவின் ஆன்மீக நோக்கங்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த MP3யை வாங்கி பரிசளிக்கலாம். உங்கள் வசதிக்காக மொத்த பகுதியும் சிறு தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 24 ட்ராக்குகள் இந்த MP3ல் உள்ளது.

இந்த MP3ல் உள்ள தலைப்புகளும் அதன் நேரமும்

1. அறிமுக உரை - 2.29 நிமிடம்
2. விமானம் புறப்படுகிறது ... தயாராகுங்கள் - 2.08 நிமிடம்
3. சத்குரு என்றால் என்ன? -9.25 நிமிடம்
4. குரு சிஷ்ய உறவு - 8.50 நிமிடம்
5. குருவும் உங்களை தேடுவார் ... - 11.47 நிமிடம்
6. தீர்ப்புகளை திருத்துவார் குரு - 6.33 நிமிடம்
7. குருவுடன் இருக்க பழகுங்கள் - 8.12 நிமிடம்
8. உச்ச இலக்கை நோக்கி - 6.45 நிமிடம்
9. ஒரு தலை காதலா பக்தி? - 7.53 நிமிடம்
10. பூக்கள் நிறைந்த பாதை - 10.11 நிமிடம்
11. ருத்ராக்ஷம் அணிவது ஏன்? - 9.43 நிமிடம்
12. நீங்கள் பார்வையாளரா? பங்கேற்பாளரா? - 7.54 நிமிடம்
13. வசதிகளை உடைக்கும் வசதி - 12.37 நிமிடம்
14. ஆளுமை அவசியமா? - 9.29 நிமிடம்
15. "மாதவிலக்கில்" மாதர் நிலை - 3.45 நிமிடம்
16. பிறப்பின் ரகசியம் - 6.44 நிமிடம்
17. உயிர் பிரியும் தருணம் - 9.04 நிமிடம்
18. மரணத்திலும் வரும் துணை - 05.06 நிமிடம்
19. கர்ம காரியங்கள் - சில விளக்கங்கள் - 5.51 நிமிடம்
20. மீண்டும் உண்டா மிருகபிறவி? - 9.15 நிமிடம்
21. உடல் இல்லா உயிர்கள் - 4.40 நிமிடம்
22. தியானலிங்கம் - ஒரு சக்தி சூழல் - 00.39 நிமிடம்
23. தியானலிங்கம் - மெய்ஞானத்தின் விஞ்ஞானம் - 13.16 நிமிடம்

விலை: ரூ. 60/-
இந்த ஆடியோ சிடி'யை ஆன்லைனில் பெற

டவுன்லோடு


ஈஷா வெளியீடுகளை ஆன்லைனில் பெற: ishadownloads.com
ஈஷா வெளியீடுகளை கூரியர் மூலம் பெற: 0422-2515415

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1