ஈஷா ருசி

சாலையோர கையேந்தி பவன்களில் கிடைக்கும் வடையையும், போண்டாவையும் பிரியப்பட்டு சுவைப்போர் எண்ணிலடங்கா... இவைகளை நீங்களே வீட்டிலேயே சுவையாக தயாரித்து உண்ணலாம். உங்களுக்காக புளிப்பும் காரமும் சேர்ந்த போண்டா ரெசிபி இங்கே...

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - ½ கப்
துவரம்பருப்பு - ½ கப்
உளுத்தம்பருப்பு - ¼ கப்
பச்சரிசி - ¼ கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிதளவு
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
தேங்காய் துருவல் - ¼ கப்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - பொறித்தெடுக்க

செய்முறை:

  • பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக ஊறப் போடுங்கள்.
  • அதனுடன் மிளகாயையும் சேர்த்து ஊறவிடுங்கள்.
  • ஒரு மணி நேரம் ஊறியதும் புளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து கடுகை பொரித்து கொட்டி கலந்து கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொரித்து எடுங்கள்.
  • புளிப்பும் காரமும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த போண்டா.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.