புடலங்காய் பஜ்ஜி செய்வது ஈஸி!
நீர் சத்துமிக்க காய்கறிகளில் ஒன்றான புடலங்காயில் கூட்டுசெய்து செய்து அலுத்துவிட்டதா... இதோ புடலங்காயில் பஜ்ஜி, ஒரு புது ரெசிபி!
ArticleJul 18, 2018
புடலங்காய் பஜ்ஜி தேவையான பொருட்கள்:
புடலை பிஞ்சு - 2
பஜ்ஜி மாவு - 1/4 கிலோ
எண்ணெய் - 1/4 லிட்டர்
உப்பு சுவைக்கேற்ப
செய்முறை:
புடலங்காயை லேசாக தோல் சீவி உள்ளே இருக்கும் விதையையும் நீக்கி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
பஜ்ஜி மாவை கரைத்து வெட்டிய புடலையை பஜ்ஜிமாவில் புரட்டி வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன்அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவிது.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.