ஒரு நாள், ஒரு காட்சி - ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!
ஐநாக்ஸ் திரையரங்கு மற்றும் ஈஷா இணைந்து வழங்கும் திரைப்படம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு, உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் முயற்சி குறித்த செய்திகளும் இந்த வார நிகழ்வில் இடம்பெறுகின்றன.
 
ஒரு நாள், ஒரு காட்சி - ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!, Oru nal oru katchi isha vazhangum sirappu thiraippadam
 

ஐநாக்ஸ் திரையரங்கு மற்றும் ஈஷா இணைந்து வழங்கும் திரைப்படம், ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு, உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுவரும் முயற்சி குறித்த செய்திகளும் இந்த வார நிகழ்வில் இடம்பெறுகின்றன.

ஒரு நாள், ஒரு காட்சி - ஈஷா வழங்கும் சிறப்பு திரைப்படம்!

“Life 70MM – The Only Way Out Is In,” எனும் திரைப்படத்தை உலக யோகா தினத்தை முன்னிட்டு ஈஷா யோக மையம் தயாரித்து, INOX நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகிறது.

4 மனிதர்களுடைய வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாய் பேசும் இத்திரைப்படம், தன் வாழ்க்கையில் அவர்களுக்கு இருக்கும் கேள்விக்கான விடையினை அடைவது வரை விரிகிறது. இத்திரைப்படத்தில், யோகா கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. யோகா கற்றுக்கொள்ள இதைவிட சுலபமான வழியும் உண்டா!

ஐநாக்ஸ் திரையரங்கங்கள் உள்ள 57 நகரங்களில், 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வரும் ஜுன் 21ம் தேதி மாலை 6 மணியிலிருந்து 7 மணி வரை திரையிடப்படும். ஒரு நாள், ஒரு காட்சி மட்டும். தவறவிட்டுவிடாதீர்கள்!

உங்கள் டிக்கெட்டினை முன்பதிவு செய்துகொள்ள... Inoxmovies.com

உகாண்டாவில் முதல் இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு

சத்குருவின் ஒரு வார ஆப்பிரிக்க பயணம், Sadhguruvin oru vara africa payanam

சத்குருவின் ஒரு வார ஆப்பிரிக்க பயணம், Sadhguruvin oru vara africa payanam

ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் சென்றுள்ள சத்குரு அவர்கள், உகாண்டாவில் முதன்முதலில் நேரடியாக இன்னர் இஞ்சினியரிங் வகுப்பை வழங்குகினார். ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியில் 333 பேர் பங்கேற்று, ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியைக் கற்றுக்கொண்டனர்.

ஆப்பிரிக்காவில் ஞானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்!

இருபுறமிருந்தும் எரிக்கிறேன் - என் மெழுகுவர்த்தியை!, Irupuramirunthum erikkiren en mezhuguvarthiyai

சத்குருவின் ஒரு வார ஆப்பிரிக்க பயணம், Sadhguruvin oru vara africa payanam

ஜூன் 14ஆம் தேதி கென்யாவிலுள்ள நய்ரோபியில் ஜூலி கிச்சுரு (Julie Gichuru) அவர்கள் மற்றும் ஜூன் 15ஆம் தேதி ஜோஹன்ஸ்பெர்க்கில் ப்ரவீன் கோதன் (Pravin Gordhan) அவர்கள் ஆகியோர் ‘ஞானியுடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சியில் சத்குருவுடன் கலந்துரையாடினர். தென் ஆப்பிரிக்க அரசியல் தளத்தில் முக்கிய பிரமுகரும் நிதி அமைச்சருமான திரு.ப்ரவீன் கோதன் அவர்கள் இளைஞர்களின் சக்தியை சரியான விதத்தில் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமாக மாற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து சத்குருவுடன் கலந்துரையாடினார்.

வளரும் தொழிலதிபரும், ஊடகவியலாளருமான ஜூலி கிச்சுரு அவர்கள் வாழ்வில் பெண்தன்மை மலர வேண்டிய அவசியம் குறித்த கலந்துரையாடலை முன்வைத்தார். இந்நிகழ்ச்சிகளை பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் கண்டுகளித்தனர்.

கற்றலை மேம்படுத்தும் பயிற்சிக்கு உதவிய HSBC வங்கி ஊழியர்கள்!

கடந்த ஜூன் 11ஆம் தேதி மும்பையில், வாசித்தல், எழுதுதல், கணிதம் கற்றல் போன்ற பாடங்களில் மெதுவாகக் கற்கும் திறனுடைய மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கென, கற்றல் திறனை மேம்படுத்தும் உபகரணங்களை உருவாக்குவதற்கான பயிற்சிப் பட்டறையை ஈஷா வித்யா ஏற்பாடு செய்திருந்தது. HSBC வங்கியைச் சேர்ந்த ஊழியர்கள் 55 பேர் ஒரு குழுவாக இப்பயிற்சிப் பட்டறையில் கற்றல் உபகரணங்களை தயாரிப்பதில் தன்னார்வத்தொண்டு புரிந்தனர். இதன்மூலம் கற்றல் உபகரணம் தயாரிக்கும் செலவில் பெருவாரியான செலவினம் குறைந்ததோடு, ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனும் மேம்பட உள்ளது.

திருப்பூர் பள்ளிகளில் உபயோகா வகுப்புகள்!

உலக யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஈஷா உபயோகா வகுப்பு முழுவீச்சில் கற்றுத்தரப்படுகிறது. ஜூன் 17ல், திருப்பூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உபயோகா ஆசிரியர் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 526 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உபயோகா DVD வழங்கப்பட்டது.

ஈஷா வித்யா பள்ளி நிகழ்வுகள்

  • கடலூர் ஈஷா வித்யா பள்ளியின் பள்ளி வாகன ஓட்டுநர்கள் தங்கள் வேலை நேரம் போக மீதி நேரங்களில், தாங்களாகவே முன்வந்து பள்ளியில் இயற்கை வேளாண்முறையில் பராமரிக்கப்பட்டு வரும் தோட்டங்களில் தன்னார்வத் தொண்டுபுரிகின்றனர். குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகக் கூட்டிச் செல்லும் பணியை சிரமேற்கொண்டுள்ள இவர்கள், மரங்களுக்கு இலைச் சருகுகளை சேகரித்து மூடாக்கு போடுதல் போன்ற பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவது மனநிறைவைத் தருவதாகக் கூறுகிறார்கள்.
  • கடலூர் ஈஷா வித்யா பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் திரு.அருள் மற்றும் திரு.தியாகு ஆகியோர் பாண்டிச்சேரியில் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில் Pondicherry Union Territory குழுவில் கலந்துகொண்டு முதற்பரிசைப் பெற்றுத் தந்தனர். ஆசிரியர் திரு.அருள் கேப்டன் பொறுப்பையும், ஆசிரியர் திரு.தியாகு துணைக் கேப்டன் பொறுப்பையும் ஏற்று சிறப்பாக விளையாடினர்.
    இவர்கள் இருவரும் பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டு அளவில் திமுக இளைஞர் அமைப்பு சார்பாக நடைபெற்ற போட்டியில் கோப்பையை வென்றுள்ளனர்.
  • பெங்களூரூவைச் சேர்ந்த ஆவணப் பட இயக்குநரான சுதன்வா ஆர்த்தி அவர்கள் 'Honesty Shop' எனும் மையக்கரு கொண்ட பள்ளி நிர்வாக பயிற்சியை கற்றுக்கொண்ட பின்னர், ஈரோடு ஈஷா வித்யா பள்ளியை பார்வையிட வருகை தந்தார்.
  • வனவாசி ஈஷா வித்யா பள்ளியில் முதல்முறையாக பள்ளிக்கு வரும் ‘கிண்டர்கார்டன்’ குட்டிக் குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குருபூஜையுடன் துவங்கிய விழாவில், மூத்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
  • உலக யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக உபயோகா வகுப்புகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் சிறுபாடு துவக்கப்பள்ளியில் 25 மாணவர்களுக்கும் முடிவைத்தநேந்தல் மேல்நிலைப்பள்ளியில் 350 மாணவர்களுக்கும் உபயோகா கற்றுக்கொடுத்தனர். மேலும் ஜூன் 11 மற்றும் 12ஆம் தேதியில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை, ராக் பூங்கா, வேலவன் கைப்பர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நடனம் மற்றும் பாடல்கள் மூலமாகவும் யோகா நிலைகளை செய்துகாட்டியும் யோகா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1