இந்த ஓட்டம், பல கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கையில், உயர்தரக் கல்வி கிடைத்திட ஓடும் ஓட்டம். அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஓடும் அன்பின் நாட்டம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பலர் பல காரணங்களுக்காக ஓடுகிறார்கள். உடல் இளைக்க ஒரு சிலர். ஊர் தழைக்க ஒரு சிலர். உலகறிய ஒரு சிலர். ஏதோ ஒரு நல்லது நடக்க தங்களின் நேரம் செலவழித்து, மெனக்கெட்டு, தங்களின் சுய வேலைகள், சுய விருப்புவெறுப்புகள் கடந்து ஓடும் மக்கள் என இவர்கள் பலவகை.

ஈஷா சார்பாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். 21 கிமீ, சிலர் 42 கிமீ, ஒருசிலர் 10 கிமீ என தங்களால் இயன்ற தொலைவினை ஓடிக் கடந்திருக்கிறார்கள்.

ஈஷா வித்யா - கிராம பள்ளிகளுக்காகவும் பலர் ஓடுகிறார்கள். இந்த ஓட்டம், கல்வி கற்கவே இடம்தரா பொருளாதாரச் சூழ்நிலை உடைய பல கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கையில், உயர்தரக் கல்வி கிடைத்திட ஓடும் ஓட்டம். அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கே ஓடிக்கொண்டிருக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ஓடும் அன்பின் நாட்டம், இந்த ஓட்டம். பல பெரும் நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என எல்லோருமே கை கோர்த்திருக்கும் ஒரு முயற்சி.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் பிரம்மாண்டமான மாரத்தான் போட்டிகள் நடைபெறுகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போட்டியிட்டு ஓடக்கூடிய தொழில்முறை ஓட்டக்காரர்களும், தனக்கு பிடித்தமான ஒரு சேவை நிறுவனத்திற்கு நிதி திரட்ட ஓடுபவர்களும், தன் உடலை உறுதியாய் வைத்துக்கொள்ள ஓடுபவர்களும் என இவர்களில் பல ரகம். இதில் ஈஷா யோக மையத்தை சேர்ந்த துறவிகளும் உண்டு. ஈஷா நடத்தும் கிராமப் பள்ளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக இவர்கள் ஓடுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகமெங்கும் இருக்கும் ஈஷா வித்யா பள்ளிகள் மூலம் 7154 மாணவர்களின் வாழ்வு மாறிட, மாற்றம் நிகழ, நமது தன்னார்வத் தொண்டர்களும், யோக மையத்தை சேர்ந்த முழுநேர தன்னார்வத் தொண்டர்களும், துறவிகளும் பெரும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர்.

நமது தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாட்டால் மட்டுமே இத்தகைய பெரும் முயற்சிகள், சமூக மாற்றம் தரும் நற்செயல்கள் அற்புதமாக நடந்து வருகின்றன. கிராமத்து மாணவர்களின் கல்விக்காக அனைத்து தரப்பு மக்களும் ஓடுவதென்பது மிக நெகிழ்ச்சியானது.

விப்ரோ, டிசிஎஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் இத்தகைய மாரத்தான்களில் பங்கேற்று உதவுகின்றனர். இன்று, (8 ஜனவரி, 2017) நடந்த மாரத்தான் கூட அத்தகைய ஒரு பெருமுயற்சிதான். ஈஷா சார்பாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் இந்த மாரத்தானில் பங்கேற்றனர். 21 கிமீ, சிலர் 42 கிமீ, ஒருசிலர் 10 கிமீ என தங்களால் இயன்ற தொலைவினை ஓடிக் கடந்திருக்கிறார்கள். அனைத்து தன்னார்வத் தொண்டர்களுக்கும் நமது ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் குழந்தைகளின் சார்பாக அன்பின் நன்றிகள்.

வாருங்கள்... ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம். தமிழக கிராமங்களுக்கு தரமான கல்வியை கொண்டு சேர்ப்போம்!