“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 3

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.
 

நம் நதிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் உணர்வதற்கு “நதிகளை மீட்போம்” எனும் பேரணியை சத்குரு அவர்கள் திட்டமிட்டுள்ளார். இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், இதில் அவர்களின் முழுமையான பங்களிப்பு நிகழவும், கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை, அவரே நேரடியாக காரில் பயணம் செய்ய உள்ளார். இப்பயணம் செப்டம்பர் 3ல் ஆரம்பித்து அக்டோபர் 2 அன்று முடிவிற்கு வருகிறது.

இன்று திருவனந்தபுரத்தில் இப்பேரணி நிகழ்கிறது. அதன் பதிவுகள் கீழே. முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

திருவனந்தபுரம் களைகட்டியுள்ளது. அங்கு நடந்திருக்கும் ஏற்பாடுகளும், மக்களின் ஆரவாரமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பற்பல புகைப்படங்கள், வீடியோக்கள் உங்களுக்காக…

சத்குரு தங்கிய ஹோட்டலின் வரவேற்பறையில்

RfR-Triv-1

மாமவீயம் வீதியில் குழந்தைகளின் கலைவண்ணம்

Rfr-Triv-3

thiruvananthapuram-4

thiruvananthapuram-6

thiruvananthapuram-23

thiruvananthapuram-24

thiruvananthapuram-70

thiruvananthapuram-64

thiruvananthapuram-65

 

 

தெய்யம்

thiruvananthapuram-5

டஃப்முட்டு

thiruvananthapuram-43

 

பஞ்சவாத்தியம்

thiruvananthapuram-7

 

மிளவு

RfR-in-Triv-7

 

புலிகளி

thiruvananthapuram-17

 

மயூர விரதம்

thiruvananthapuram-62

 

மாமவீயம் வீதியில் சத்குரு

மாமவீதியில் குழந்தைகளின் ஓவியங்களை சத்குரு பார்வையிடுகிறார்

 

தெய்யம் கலைஞர்களுடன் சத்குருவும் சேர்ந்துகொள்கிறார்

 

நதிகளை மீட்போம் பேரணிக்கு மக்களின் ஆதரவு

thiruvananthapuram-9

thiruvananthapuram-14

thiruvananthapuram-42

இவர் பெயர் ஷர்மா. இன்று 30 கி.மீ இவர் இவ்வாறு சைக்கிள் ஓட்டி, விஷாகப்பட்டினத்தில் நதிகள் மீட்பு பேரணிக்கு ஆதரவு திரட்டினார். இது நடந்தது ஆந்திராவின் விஷாகப்பட்டினம் என்றாலும், இன்று நடந்தது என்பதால் இங்கே பதிவு செய்கிறோம்.

thiruvananthapuram-10

 

தாகூர் திரையரங்கத்தில் சிறப்பு விருந்தினர்கள்

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. மாத்யூ டி தாமஸ் அவர்கள், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கடகம்பள்ளி சுரேந்திரன் அவர்கள், எம்.எல்.ஏ திரு. ஓ.ராஜகோபாலன் அவர்கள், மலையாளம் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு. ஜெயகுமார் அவர்கள், திரு. என்.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள், பிரபல சினிமா இயக்குனர் திரு. அடூர் கோபாலகிருஷ்ணன் அவர்கள்

thiruvananthapuram-25

கவலம் ஸ்ரீகுமார் அவர்களின் இசையோடு நிகழ்ச்சி ஆரம்பம்

நதிகளைப் போற்றும் அருமையான பாடல்களை திரு. கவலம் ஸ்ரீகுமார் அவர்கள் பாடுகிறார்.

thiruvananthapuram-28

திரு. என்.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்களின் வரவேற்புரை

thiruvananthapuram-29

சத்குருவின் வேண்டுகோள்

thiruvananthapuram-31

  • முன்பெல்லாம் காட்டில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் என்னால் தங்க முடியும். ஆனால் இப்போது காடுகள் இருக்கும் நிலையில் என்னால் 2 வாரங்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாது. அப்போது காட்டில் வாழும் விலங்குகளின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்
  • பசுமைக் கரங்கள் திட்டம் மூலமாக இதுவரை 3.2 கோடி மரங்களை நட்டிருக்கிறோம். ஆனால் இந்த முயற்சியில் நான் கற்றுக் கொண்டது, பெரிய அளவில் மாற்றம் நடக்க இதுபோன்ற தன்னார்வத் தொண்டு முயற்சிகள் போதாது. அரசாங்கமே இதைக் கையில் எடுத்தால்தான் இது நடக்கும்
  • நதிகளை மீட்பது நிச்சயம் சாத்தியம். ஏற்கெனவே கேரளாவில் ஒரு நதியை இதுபோல் மீட்டிருப்பதாக சொல்கிறார்கள். இது ஒரு நல்ல சான்று
  • நம் நாட்டில் இருப்பது போல் நீர்-வாழ் விலங்கின வகைகள் வேறெங்கும் பார்க்கமுடியாது.
    கடந்த சில ஆண்டுகளில் இதில் 15-20% அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த புழு, பூச்சி, மீன்கள் இந்த சூழ்நிலையில் வாழமுடியாமல் அழியத் துவங்கிவிட்டால், நாம் அழிந்துபோவதும் நிச்சயம் நடக்கும்
  • நமக்கு உணவளிக்கும் விவசாயி உண்ண உணவின்றி தற்கொலை செய்துகொள்வது நமக்குப் பெரும் தலைகுனிவு. இந்நிலை நீடித்தால் விவசாயம் செய்ய யாரும் முன்வரமாட்டார்கள். நமக்கு உணவுக்கு வழியிருக்காது

வேண்டுகோள்: ஒவ்வொரு நாளும் இரவு உணவின் முன் அமரும்போதும், 20 நொடிகள் கண்மூடி, "நமக்கு உணவளித்த மனிதனுக்கு இன்று உண்ண உணவில்லை" என்பதை நினைவு கூர்ந்துவிட்டு பின் உங்கள் உணவை உண்ணுங்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள்

RfR-in-Triv-11-1

மத்திய நீர் வளத்துறை அமைச்சர் திரு. மாத்யூ டி தாமஸ் அவர்களின் பேச்சு

RfR-in-Triv-14-1

ஈஷா அறக்கட்டளையின் இந்த முன்னெடுப்பைப் பாராட்டி, இந்த இயக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது எவ்வளவு முக்கியம் என்று பேசினார். அப்போது அவர், நதிகளில் குப்பை போடுபவர்கள், நதிகளை அசுத்தம் செய்பவர்கள் மற்றும் மாசுபடுத்துபவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அப்படிப்பட்ட சட்டத்தை கேரளத்தில் செயல்படுத்த கேரளத்தின் மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கடகம்பள்ளி சுரேந்திரன் அவர்களின் பேச்சு

thiruvananthapuram-38

நம் பூமியையும், நீர் நிலைகளையும் மிகவும் பரிசுத்தமான நிலையில் நம் வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைப்பது நம் கடமை என்றும், பழங்காலம் போல் நம் நதிகள் மீண்டும் பெருகி ஓடவேண்டும் என்றும் கூறினார்.

எம்.எல்.ஏ திரு. ஓ.ராஜகோபாலன் அவர்களின் பேச்சு

Rfr-in-Triv-19-1

மலையாளம் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு. ஜெயகுமார் அவர்களின் பேச்சு

thiruvananthapuram-40

"நதிகள் நம் வாழ்வோடு மிக ஆழமான தொடர்பு கொண்டுள்ளன. இது நம் நதிகளை மீட்பது பற்றி மட்டுமல்ல, இந்த நிலத்தோடு, நீரோடு, காற்றோடு, இச்சுற்றச்சூழலோடு நாம் கொண்டிருக்கும் தொடர்பை, பஞ்சபூதங்களோடு நாம் கொண்டிருக்கும் தொடர்பை சரியான முறையில் நிகழ்த்திக் கொள்வது. இது நடந்தால்தான் நதிகளையும் நாம் மீட்க முடியும். சத்குரு முன்மொழிந்திருக்கும் இந்த நதி-மீட்புத் திட்டம் நிச்சயம் நடக்கக்கூடிய ஒன்று. இப்பூமியில் இந்த மாற்றம் நிகழட்டும். நம் நதிகள் ஜீவநதிகளாக என்றென்றும் ஓடட்டும்" என்றார்.

வெட்டிவேர் செடிக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள்

கேரளாவில் வளத்திற்கு சின்னமான வெட்டிவேர் செடிக்கு தண்ணீர் ஊற்றி, நம் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இந்த மாபெரும் வேள்வியை அனுகூலமான முறையில் துவக்கி வைக்கிறார்கள்.

thiruvananthapuram-34

thiruvananthapuram-33

நதிகளை மீட்போம் பேரணிக்கு ஆதரவு

thiruvananthapuram-36

ஓவியம் வரைந்த சிறுவர்களுடன் சத்குரு

இந்த ஓவியங்களை வரைந்த பள்ளிக்கூட சிறுவர், சிறுமியர்களுடன் சத்குரு உரையாடுகிறார்.

thiruvananthapuram-45

thiruvananthapuram-46

thiruvananthapuram-47

thiruvananthapuram-48

கேரள முதல்வரின் ஆதரவு

விழாவிற்கு வரவேண்டிய கேரள மாநிலத்தின் மாண்புமிகு முதல்வர் திரு.பினரயி விஜயன் அவர்கள் அவசர வேலையாக வேறிடம் செல்ல நேர்ந்ததால், செல்வதற்கு முன் விமான நிலையத்தில் சத்குரு அவர்களை சந்தித்து இந்தப் பேரணி அவருக்கும், கேரள மாநிலத்திற்கும் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினார். பின் “நதிகளை மீட்போம்” விளம்பர அட்டையை கையில் தூக்கிப் பிடித்து, இதற்கான தன் ஆதரவை வெளிப்படுத்தினார்.

திருச்சிக்கு செல்லும் வழியில் பசுமை!

திருவனந்தபுரத்தில் இருந்து விடைபெற்று சத்குரு திருச்சிக்குக் கிளம்பிவிட்டார். மழைத்தூரலின் நடுவே மார்த்தாண்டம் கடக்கும்போது, “ஆறு” என்று சொல்வதற்கு சிறிதளவேனும் பொருத்தமான ஒரு ஆற்றைப் பார்த்த மகிழ்ச்சியில் நம் பேரணி திளைக்கிறது. அங்கிருந்து சில பசுமையான காட்சிகள் உங்களுக்காக.

thiruvananthapuram-49

thiruvananthapuram-50

thiruvananthapuram-51

செல்லும் வழியிலும் பேரணிக்கு ஆதரவு

thiruvananthapuram-52

நாகர்கோவிலில் சத்குருவிற்கு வரவேற்பு

nagercoil-3

nagercoil-1

nagercoil-2

nagercoil-4

காய்ந்த குளமும், வறட்சியான திருநெல்வேலியும்

நாகர்கோவில் அருகே காய்ந்திருந்த குளம், திருநெல்வேலி அருகே வறட்சியான பூமி

thiruvananthapuram-68

thiruvananthapuram-69

விருதுநகரில் குவிந்த மக்கள்

virudhunagar-1

virudhunagar-6

virudhunagar-7

virudhunagar-4

virudhunagar-5

virudhunagar-8

virudhunagar-9

virudhunagar-10

  • சத்குரு வரும் வழியில் நெடுஞ்சாலையில் பல இடங்களில் மக்கள் அவருக்காகக் காத்திருந்து, தாண்டிச் செல்லும்போது கையசைத்து ஆர்ப்பரிக்கின்றனர்.
  • விருதுநகரில் பூர்ணகும்பம், நாதஸ்வரம் மற்றும் பாரம்பரிய இசையோடு சத்குருவிற்கு மரியாதை செய்து அவரை வரவேற்கின்றனர்
  • விருதுநகரில் பல வருடங்களாக ஈஷா யோகா வகுப்புகள் நடந்திருந்தாலும், இங்கு சத்குரு வருவது இதுவே முதல்முறை

கொட்டும் மழையிலும் திருச்சியில் ஏற்பாடுகள்

திருச்சியில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதிலும் அசராது, நாளை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

திருவனந்தபுரம் பேரணி - தொகுப்பு

 

திருவனந்தபுரம் பேரணி - முழு வீடியோ