நர்மதா நதிக்கு மஹாஆரத்தி, அதன்பின் மஹேஷ்வர் ஊரில் சத்சங்கம் முடித்து நேற்று இரவு அங்கேயே தங்கினோம். இன்று காலை நர்மதா நதிக்கரையில் குருபூஜை செய்துவிட்டு, ஆகில்யா கோட்டையின் “ஜரோகா” எனப்படும் மிக நுணுக்கமாய் செதுக்கப்பட்ட மேல்மாடங்களைப் பார்வையிட்டோம். அங்கிருந்து நர்மதா நதி ஓடுவதைப் பார்த்தால்… என்ன ஒரு காட்சி! பின் ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரு சிவன் கோவிலுக்கு படகிலே சென்றோம். மேகமூட்டம், மழைத்தூறல், மெல்லிய காற்று, ஆறு, படகு… இது எதுவும் கனவல்ல, நிஜம்! திரும்பிய போது அருமையான குஜராத்தி விருந்து. அதையும் முடித்துக் கொண்டு, இதோ கிளம்பிவிட்டோம் இந்தூருக்கு. இன்று மாலை அங்கே பேரணி.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

இந்தூரில் 3-நாள் “நதிகளை மீட்போம்” திருவிழா

indore-5   indore-4

செப் 18-21 வரை இந்தூரில் நதிகள் திருவிழா நடந்தது. இதில் இசை, நாட்டியம், நாடகம், புகைப்படக் கண்காட்சி, ஓவியம் வரைதல் என நதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. செப்.20 அன்று “வாக்கத்தான்” என்று நடை பேரணியும் நடந்தது. இதில் இந்தூரின் வட்டாட்சியர் திரு. நிஷாந்த் வார்வாடே ஐ.ஏ.எஸ் அவர்களும் பங்கேற்றார்.

“நதிகளை மீட்போம்” இந்தூர் வரலாற்றில் பதிக்கப்படுகிறது

நம் நதிகளைக் காக்க இப்படி ஒரு மாபெரும் வேள்வி நடந்தது என்பது நினைவில் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்தூர் நிர்வாகம் ஒரு வித்தியாசமான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ஓவியர், சிற்பி, கண்டுபிடிப்பாளர், பல காப்புரிமைகள் (patent) கொண்ட திரு.வஜீத் கான் அவர்கள் நம் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் உலோகங்கள் கொண்டு வித்தியாசமான முறையில் கல்வெட்டுபோல் இதை உருவாக்கியுள்ளார். இன்று காலை சத்குரு அவர்கள் அதைத் திறந்துவைத்தார். உடன் இருப்பது இந்தூர் மாநகர மேயர், திருமதி. மாலினி லக்ஷ்மன்சிங் கௌர் அவர்கள்.

indore-3

indore-4

indore-6

பேரணி துவங்க அனைத்தும் தயார் நிலையில்…

பேரணி நடைபெறவிருக்கும் டேலி கல்லூரியில் எல்லாம் தயார்நிலையில் உள்ளது.

indore-7

indore-8

indore-9

indore-10

சத்குருவிற்கு வரவேற்பு

indore-11

indore-12

indore-13

indore-14

டேலி காலேஜ் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சி

டேலி காலேஜ் மாணவர்கள் வண்ணமயமான ஒரு கலை நிகழ்ச்சியை வழங்கினார்கள். அவர்களுடைய “பாண்ட்” வாத்தியமும், ஒடிசி, பரதநாட்டியம், தற்கால நடனம் ஆகியவற்றை இணைத்து அவர்கள் வழங்கிய நாட்டிய நாடகமும் மிக நன்றாக அமைந்தது. பஞ்சபூதம், சிருஷ்டி, இயற்கை ஆகியவை எப்படி செயல்படுகின்றன, அவற்றை முறையாகக் கையாண்டால், இயற்கை எப்படி வளமாக இருக்கும் என்பதை நமக்குக் காண்பித்தனர்.

daly-college

daly-college-2

daly-college-4

indore-32

மாட்டி பானியின் நிராளி கார்த்திக், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவுடன்

indore-19

Maati-baani

“மண்ணின் மொழி” என்று பொருள்படும் மாட்டிபானி இசைக்குழுவின் நிராளி கார்த்திக், புகழ்பெற்ற “ஜோடிய பாவா” வாத்தியக் கலைஞர் நூர் முகமது சோதா இருவரும் நம் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவுடன் சேர்ந்து அற்புதமான இசையை வழங்கினார்கள்.

சிறப்பு விருந்தினர்கள்

indore-20

indore-31

indore-33

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
 • மக்களவை சபாநாயகர் ஸ்ரீமதி.சுமித்ரா மஹாஜன் அவர்கள்
 • இந்தூர் மாநகராட்சி மேயர் ஸ்ரீமதி.மாலினி லக்ஷ்மன்சிங் கௌர் அவர்கள்
 • ராஜமாதா காயத்ரி ராஜே புவார் அவர்கள், டேலி காலேஜ் நிர்வாகத் தலைவர்
 • டேலி காலேஜ் நிர்வாக துணைத் தலைவர் திரு.தேவராஜ் பட்காரா அவர்கள்

இவர்கள் தவிர்த்து, இந்தூர் மாநகர வட்டாட்சியர் திரு.நிஷாந்த் வார்வாடே அவர்கள், காவல்துறை ஏ.டி.ஜி, டி.ஐ.ஜி, டேலி காலேஜின் மற்ற நிர்வாக இயக்குநர்கள், டேலி காலேஜ் முதல்வர் என பலரும் வந்திருந்தனர்.

இன்றைய நிகழ்ச்சித் தொகுப்பாளர்… பகவான் கிருஷ்ணர் :-)

கிருஷ்ணர் வேடத்தில் நம் மனதில் இடம்பிடித்த திரு.நிதிஷ் பரத்வாஜ் அவர்கள்

indore-35

திரண்டிருக்கும் மக்கள்

crowd-3

4000-2

4000-1

indore-39

indore-38

indore-28

“நதிகளை மீட்போம்” போட்டியில் மாநில அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள்

3200 குழந்தைகள் பங்குபெற்ற இக்கட்டுரைப் போட்டியில் மாநில அளவில் 5ம் வகுப்பில் முதலிடம், 6ம் வகுப்பில் முதலிடம், 7ம் வகுப்பில் முதலிடம் பெற்ற 3 குழந்தைகளும் பரிசு பெறுகிறார்கள். டேலி காலேஜ் முதல்வர் திரு. நீரஜ் குமார் பெதோடியா அவர்கள் மற்றும் கேம்லின் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் திரு.சௌமித்ர பிரசாத் அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்கள்.

indore-34

indore-37

indore-29

ராஜமாதா காயத்ரி ராஜே புவார் அவர்கள் பேச்சு

indore-36

சத்குரு, நீங்கள் இங்கு வந்திருப்பதை எங்களின் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். “நதிகளைக் காப்போம்” என்பது மாபெரும் முயற்சி. ஏற்கெனவே உங்கள் தலைமையில் “நர்மதா சேவா யாத்திரை” சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதன்பிறகு எங்கள் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்கள் நர்மதா நதிக்கரை ஓரமாக மரம் நடுதல் பணியில் ஈடுபட்டிருக்கிறார். உங்கள் வழிகாட்டுதலில் நம் நாட்டின் நதிகள் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என வேண்டுகிறேன்.

திரு.தேவராஜ் பட்காரா அவர்கள் பேச்சு

indore-30

டேலி காலேஜ் நிர்வாக துணைத் தலைவர் திரு.தேவராஜ் பட்காரா அவர்கள், 40 பேர் கொண்ட அணியை வழிநடுத்தி, இந்தோரில் நதிகளை மீட்போம் பேரணிக்கு பெருமளவு ஆதரவு திரட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது:

இதுவரை டேலி காலேஜ் மற்றும் எங்கள் மாணவர்கள் ஈடுபட்டதிலேயே இதுதான் மிகமிக முக்கியமானதொரு பணி. இதற்கு வாய்ப்பளித்த சத்குரு அவர்களுக்கு நாங்கள் பெருமளவு கடமைப் பட்டிருக்கிறோம். உங்கள் வழிகாட்டுதலில் இயற்கையின் வரமான நதிகளும், பசுமையான காடுகளும் மீண்டும் நம் நாட்டில் செழித்து வளரவேண்டும். இது நிறைவேறும் என்றுதானோ, செப் 3 அன்று நீங்கள் இந்தப் பேரணியைத் துவக்கியதில் இருந்து இந்தூரில் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது!

மேயர் ஸ்ரீமதி.மாலினி லக்ஷ்மன்சிங் கௌர் அவர்கள் பேச்சு

indore-24

எத்தனை நலத்திட்டங்கள் தீட்டினாலும், மக்களின் விழிப்புணர்வு இல்லாமல், அது நடக்க வாய்ப்பில்லை. இன்று நதிகளின் நிலை குறித்து சத்குரு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது வெற்றிபெற நான் வேண்டுகிறேன். இந்தோரின் கான் நதி, சரஸ்வதி நதிகளை சுத்தப்படுத்தும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதற்கும் சத்குருவின் வழிகாட்டுதல் இருந்தால் வெகுவிரைவில் இதை செய்து முடிப்போம்.

பி.ஜே.பி பொது செயலாளர் திரு.கைலாஷ் விஜய்வர்கியா அவர்கள் பேச்சு

vijayvargiya

 • சத்குரு இப்படி ஊர் ஊராக சென்று கொண்டிருப்பது யாருக்காக? பாரதத்தின் நல்வாழ்வுக்காக. பாரதம் என்பது நான், நீங்கள், நாம் எல்லோருமே. நம் நல்வாழ்விற்காக இவ்வளவு பெரிய வேலையை சத்குரு எடுத்ததற்கு, எழுந்து நின்று நம் நன்றியை அவருக்குத் தெரியப்படுத்துவோம்.
 • இந்தோரின் வருங்கால சந்ததியினரின் சார்பாகவும் உங்களுக்கு எங்கள் நன்றிகள்.
 • ஒரு வருடத்திற்கு முன்பு, கும்பமேளாவிற்கு ஷிப்ரா நதியைப் பார்க்கச் சென்றேன். அங்கிருந்தது நதியல்ல. சின்னஞ்சிறிய ஓடை. கவலை கொண்டேன். என்ன செய்வதென்று புரியவில்லை.
 • சம்பல் நதி தண்ணீரை எடுத்துச் சென்று மக்கள் குளிப்பதற்காக ஷிப்ரா நதியில் இடம் அமைத்தோம். பின், நர்மதா நதியின் தண்ணீரை ஷிப்ரா நதி வழியாக சிறிது நாட்களுக்குச் செலுத்தினோம். எப்படியெப்படியோ நிலையை சரிசெய்ய முயற்சித்தோம்.
 • இது நிலைக்காது. ஷிப்ரா நதி மீண்டும் உயிர் பெற வேண்டும். ஆனால் எப்படி? அப்போதுதான் அப்பகுதியில் மரங்கள் இருந்தால் மட்டுமே நதியை மீட்க முடியும் என்று நீங்கள் வழி காட்டினீர்கள்.
 • மரக்காடுகள் இருக்கும் இடத்தில் மழை பெய்யும். மழை பெய்யும் இடத்தில் மரங்கள் இருந்தால் தண்ணீர் நிலைக்கும்.
 • இப்போது ஷிப்ரா நதியை மீட்க அப்பகுதியில் மரம் நட உத்தேசித்துள்ளோம். எங்கள் பணி உங்கள் வழிகாட்டுதலில் நிறைவேறி, எங்கள் நதிகள் முன்போல் கம்பீரமாக ஓடவேண்டும்.
 • இன்று உங்கள் முன் உறுதி கூறுகிறோம். நாங்கள் மரம் வளர்த்து, நதிகளைக் காத்து, சுத்தமான, வளமானதொரு சுற்றுச்சூழலை பராமரிப்போம்

மக்களவை சபாநாயகர் ஸ்ரீமதி.சுமித்ரா மஹாஜன் அவர்கள் பேச்சு

s.-Mahajan

 • உங்கள் அழைப்பிற்கு இணங்கி வந்த கூட்டம் இது. இன்னும் பலர் இருக்கிறார்கள். இங்கு இடமில்லை என்று வெளியே இருந்து உங்கள் குரலைக் கேட்க காத்திருக்கிறார்கள்.
 • நதிகளைச் சுற்றி கிராமங்கள், நகரங்கள் உருவாவது மட்டுமல்ல. அதன் கரைகளிலே மகான்கள் பலர் தவம் செய்வர். இப்போது சத்குரு அப்படிப்பட்ட தவம்தான் செய்கிறார், நம்மை ஒன்றிணைத்து அந்நதிகளை ஓடச்செய்ய.
 • ஒவ்வொரு நதிக்கும் ஒரு தனிப்பட்ட குணம் உண்டு. ஒவ்வொரு நதியும் வெவ்வேறு விதமான தன்மையை வெளிப்படுத்துகிறது. கங்கையை பவித்ரம் என்கிறோம். யமுனைக் கரையிலே கிருஷ்ணரின் மதுரா நகரம் வளர்ந்தது. கோதாவரி என்றால் பக்தி என்கிறோம். இப்படி ஒவ்வொரு நதியும் வெவ்வேறு விதம்.
 • அவற்றை நம் பிள்ளைகள் உணரவேண்டுமெனில், நதிகளில் தண்ணீரும் ஓடவேண்டும், அதை நாம் சுத்தமாகவும் பராமரிக்க வேண்டும்.
 • மக்களும் பொறுப்பேற்க வேண்டும். இதில் பங்கேற்க வேண்டும். இது நடப்பதற்கு என்னென்ன தேவையோ, அதை முழுமனதுடன் செயல்படுத்த அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.

சத்குரு அவர்கள் பேச்சு

sadhguru

indore-37-1

 • நதிகள், மலைகள், இயற்கை எல்லாம் வெறும் வளங்கள் அல்ல. அவற்றை மாபெரும் சக்தியாக, மிகப் பெரிய உயிராக, பல்லாயிரம் உயிர்களுக்கு அடிப்படையாக இருக்கும் ஒன்றாகத்தான் நான் உணர்ந்திருக்கிறேன்.
 • பல்லாயிரம் ஆண்டுகளாக செயல்பட்டுவரும் இந்த மகத்தான சக்தியை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்துவிட்டோம். பல ஜீவநதிகள் பருவகால நதிகளாக ஆகிவிட்டன.
 • 25 வருடங்களாக நீரோட்டம் குறைந்து கொண்டே வந்திருந்தாலும், கடந்த 7-8 வருடங்களில் மிக வேகமாகக் குறைந்திருக்கிறது.
 • நம் நாட்டின் 25% நிலப்பரப்பை வடிநிலமாகக் கொண்டு, 33% விவசாயத்திற்கு அடிப்படையான கங்கை நதி 44% சுருங்கியுள்ளது – இதைச் சுற்றி 79% பசுமைப்பரப்பு குறைந்துள்ளது கடந்த 50 வருடங்களில்.
 • நர்மதாவின் நிலை இன்னும் மோசம். அதைச் சுற்றி 94% பசுமைப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது.
 • காவிரியில் இவ்வருடம் 3.5 மாதங்களுக்கு 170 கி.மீ காய்ந்து காணப்பட்டது.
 • இந்த நாட்டிற்கான நமது திட்டம் என்ன? சுய-அழிவா?
 • நாம் வாழ்வதற்கே போராட வேண்டும் என்ற நிலை உருவாகிவருகிறது.


விவசாயத்தின் கவலைக்கிடமான நிலை:

 • நம் நாட்டில் 12,000 ஆண்டுகால விவசாய அறிவு உள்ளது.
  இது படித்துவிட்டு செய்யும் ஒன்றல்ல.
 • அப்படிப்பட்ட வளமான பூமி 70 ஆண்டுகளில் வளமிழந்து மணலாகி வருகிறது.
 • இந்த சூழ்நிலையில் 15% விவசாயிகள் கூட தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்வதை விரும்பவில்லை
 • தண்ணீர் இல்லை, நிலத்தில் வளமில்லை, 12,000 ஆண்டுகால விவசாய ஞானமும் இனி இல்லை என்றால் 113 கோடி மக்களுக்கு உணவிற்கு என்ன செய்வது?
 • இப்போதே கடந்த 4 ஆண்டுகளாக 17% உணவை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்

நம் நாட்டின் நிலை:

 • நம் நாட்டில் இருப்பது போல் மிக அதிகமான மக்கட்தொகை-நில விகிதம் வேறெங்குமே இல்லை
 • இதுபோன்ற நெருக்கடியில், நம் நிலம், தண்ணீர் இரண்டையும் அதிகளவு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்
 • கடந்த 70 ஆண்டுகளில் பிழைப்பு, முன்னேற்றம் என்று இருந்துவிட்டோம். ஆனால் இப்போது நிலைக்கக்கூடிய வழிமுறைகளை நாம் பின்பற்றியே ஆகவேண்டும்.
 • நம் நதிகள் தேசிய சொத்தாக, புதையலாக பாவிக்கப்பட வேண்டும். அவரவருக்குத் தெரிந்த வகையில் இனி யாரும் நதிகளைக் கையாளக் கூடாது
 • நதி பராமரிப்பு, உபயோகம் ஆகியவற்றிற்கு தேசிய கொள்கைகள், சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அதை மக்கள் பின்பற்ற வேண்டும்.

தீர்வு:

 • நதிகள் ஓடும் 20000 கிமீ தூரத்தில் அவற்றின் கரைகள், 25% அரசாங்கம் கையிலும் மீதம் விவசாயி கையிலும் உள்ளது
 • இந்த அரசாங்க நிலங்கள் காடுகளாக மாறவேண்டும். 6-8% டெல்டா நிலம். அதை விட்டுவிட்டு, மீதமுள்ள 68% நிலம் பழமரப் பண்ணைகளாக ஆகவேண்டும்.
 • விளையும் பழங்களுக்கு வர்த்தகத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். அப்போது விவசாயிகளுக்கு 3-8 மடங்கு லாபம் கிடைக்க வழியுண்டு
 • நம் நீராதாரங்களின் 84% நீர்ப்பாசனத்திற்கு செலவாகிறது. மற்ற நாடுகளில் இதே அளவு விளைவிக்க 10-15% நீர்தான் தேவைப்படுகிறது
 • அதனால் தொழில்நுட்பம் பயன்படுத்தி சிறந்த நீர்ப்பாசன முறைகளைப் பின்பற்ற வேண்டும்

பேரணியின் வெற்றி:

 • உங்கள் மாநிலத்தில் இதற்காக 850 கோடி பண ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நர்மதா நதிக்கரையில் மரங்கள் வளர்க்க
 • மஹாராஷ்டிராவில் 50 கோடி மரம், கர்நாடகாவில் 25 கோடி மரம், குஜராத்திலும் கூட மரம்நட உடன்படிக்கை ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளோம்
 • ஆந்திராவும் தெலுங்கானாவும், நதிகளை மீட்கும் திட்டப்பரிந்துரையை தாங்களே முதலில் செயல்படுத்துவோம் என்று போட்டியிடுகின்றன
 • தமிழ்நாட்டில் எத்தனை மரங்கள் வேண்டுமானாலும் நீங்கள் நடலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்
 • எல்லோரும் ஒன்றாய் ஒரே குரலாக இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 • மக்களும் இதேபோல் ஒன்றாக நின்றால்தான் அரசாங்கம் இதை முழுமூச்சாய் செயல்படுத்தும். அதற்கு 30 கோடி மிஸ்டு-கால் தேவைப்படுகிறது. அதனால்தான் கைகூப்பி யாசிக்கிறேன்
 • நம் நாட்டின் பிரம்மாண்டமான நதிகள் மீண்டும் அதே கம்பீரத்தோடு ஓடவேண்டும். நம் குழந்தைகளும் நதிகளில் விளையாட வேண்டும்

நீங்கள் செய்யவேண்டியது:

 • நீங்கள் மிஸ்டு-கால் கொடுக்க வேண்டும்
 • உங்களுக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் மிஸ்டு-கால் கொடுக்கச் செய்யவேண்டும்
 • உங்களுக்குத் தெரியாத ஒவ்வொருவரையும் கூட மிஸ்டு-கால் கொடுக்கச் செய்யவேண்டும்.

இந்தூர் பேரணி - தொகுப்பு

இந்தூர் பேரணி - முழு வீடியோ