முள்ளங்கி பரோட்டா
புதுமையான ஒரு உணவு வகையாக முள்ளங்கி பரோட்டா மற்றும் பாரம்பரிய உணவு வகையாக மாங்காய் வெல்லப் பச்சடி ஆகிய இரண்டு ரெசிபிகளை செய்யும் வழிமுறைகளை இங்கே அறியுங்கள்! ஆரோக்கியமான இந்த உணவுகளை சமைத்து-ருசித்து மகிழுங்கள்!
 
முள்ளங்கி பரோட்டா, Mullangi parotta
 

ஈஷா ருசி

புதுமையான ஒரு உணவு வகையாக முள்ளங்கி பரோட்டா மற்றும் பாரம்பரிய உணவு வகையாக மாங்காய் வெல்லப் பச்சடி ஆகிய இரண்டு ரெசிபிகளை செய்யும் வழிமுறைகளை இங்கே அறியுங்கள்! ஆரோக்கியமான இந்த உணவுகளை சமைத்து-ருசித்து மகிழுங்கள்!

முள்ளங்கி பரோட்டா

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி தோல் சீவி துருவியது - 1 கப்
கோதுமை மாவு - 250 கிராம்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

கோதுமை மாவு, சிறிது தண்ணீர்விட்டு, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, சோம்பு தாளித்து பின்னர் துருவிய முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கவும். (முள்ளங்கியைப் பிழிந்து சாறு தனியே வடித்துக்கொள்ளவும்). அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய முள்ளங்கியை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். கோதுமை மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கோதுமை மாவு ஒரு உருண்டை எடுத்து சப்பாத்தி இட்டுக்கொள்ளவும். நடுவில் முள்ளங்கி உருண்டையை வைத்து நான்கு பக்கமும் போர்த்தி, பின்னர் சப்பாத்தி தேய்ப்பது போன்று தேய்த்து தோசைக் கல்லில் இட்டு, சிறிது சூடானவுடன் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டுச் சுட்டு எடுக்கவும்!

மாங்காய் வெல்லப் பச்சடி

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 4 (பெரியது)
வெல்லம் (பொடித்தது) - 2 கப்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு ஈர்க்கு

செய்முறை:

மாங்காயை நன்கு கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைத்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வெல்லம் உருகி பாகானவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு வெந்தயம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொட்டவும். இது சப்பாத்தி, சாதம், பூரி அனைத்துக்கும் சுவையான சைடு டிஷ்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1