மண மணக்கும் கேரட் மசால் வடை ரெசிபி!
சத்துக்கள் நிறைந்த ‘கேரட்’ நம்மில் பலருக்கும் பிடித்தமான காய்கறிதான்! அதைக்கொண்டு மசால் வடை செய்தாலோ அதை சொல்லவும் வேண்டுமா?! நீங்களே செய்து சுவைத்துப்பாருங்கள்... ரெசிபி இதோ!
 
ஈஷா ருசி

சத்துக்கள் நிறைந்த ‘கேரட்’ நம்மில் பலருக்கும் பிடித்தமான காய்கறிதான்! அதைக்கொண்டு மசால் வடை செய்தாலோ அதை சொல்லவும் வேண்டுமா?! நீங்களே செய்து சுவைத்துப்பாருங்கள்... ரெசிபி இதோ!

கேரட் மசால் வடை

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 250 கிராம்
கேரட், முட்டை கோஸ், குடைமிளகாய் - 1 கப் (துருவியது)
சிவப்பு மிளகாய் - 5
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா - தலா 1 கைப்பிடி
கரம் மசாலா பவுடர் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

கடலைப்பருப்பை நன்கு ஊறவைத்து, அதில் சோம்பு, மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அதில் துருவிய கேரட், முட்டை கோஸ், குடைமிளகாய், இஞ்சி விழுது, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, கரம் மசாலா பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், வடையாக தட்டி போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

  0 Comments
 
Login / to join the conversation1