ஈஷா வித்யா பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காக, பலர் மாரத்தான் ஓடி நிதி திரட்டுவதும், சிலர் ஊக்கத்தொகை வழங்குவதும் நாம் அறிந்ததே. ஆனால் இங்கே காக்னிஸன்ட் நிறுவன ஊழியர்கள் செய்தது ஒரு வித்தியாசமான முயற்சி என்றே சொல்ல வேண்டும். அதை அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

நவம்பர் 1, 2014 - 40 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்த விழையும் ஒரு முயற்சியில் சென்னை தாம்பரத்திலுள்ள காக்னிஸன்ட் நிறுவனம் களமிறங்கியது. ஈஷா வித்யா தத்தெடுத்துள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் அபார முயற்சி இது.

கடலூர் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் மாணவர்களுடனான கேள்வி-பதில் நேரத்துடன் இந்த நாள் துவங்கியது. கற்றலுக்கான உபகரணங்கள் எத்தனை பயனுள்ளவையாக உள்ளன என்று ஊழியர்களுக்கு விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டதும், முன்வந்து ஈடுபட்ட காக்னிஸன்ட் ஊழியர்களை மனமாற பாராட்டாமல் இருக்க இயலவில்லை. மூலப்பொருட்களிலிருந்து, அதை உருவாக்கிக் கொடுத்தது வரை காக்னிஸன்ட் நிறுவனம் பொருளுதவி செய்து தன் ஊழியர்களின் மூலம் உருவாக்கியும் கொடுத்தது. ஈஷா வித்யா குழந்தைகள் சார்பிலும், ஈஷா அறக்கட்டளை சார்பிலும் நம் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.