கோரப்பிடியிலிருந்து ஆனந்தத்தின் மடியில்...
நோயினால் அவதிப்படுபவர்களின் முன் கடவுளே வந்து நின்றாலும், அவர்கள் நோய் போக வேண்டும் என்று கேட்பார்களே தவிர, ஆனந்தத்தையோ ஆன்மீகத்தையோ கேட்க மாட்டார்கள். ஆம்! அப்படி நோயால் வாடிய ஒருவர் அதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தின் மடியில் இப்போது இருக்கிறார். ஷாம்பவி மஹாமுத்ரா எனும் ஒரு பயிற்சி இவர் வாழ்க்கையில் செய்த மாயம் என்ன? இதோ அவரது அனுபவம்!
 
 

நோயினால் அவதிப்படுபவர்களின் முன் கடவுளே வந்து நின்றாலும், அவர்கள் நோய் போக வேண்டும் என்று கேட்பார்களே தவிர, ஆனந்தத்தையோ ஆன்மீகத்தையோ கேட்க மாட்டார்கள். ஆம்! அப்படி நோயால் வாடிய ஒருவர் அதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தின் மடியில் இப்போது இருக்கிறார். ஷாம்பவி மஹாமுத்ரா எனும் ஒரு பயிற்சி இவர் வாழ்க்கையில் செய்த மாயம் என்ன? இதோ அவரது அனுபவம்!

ஆனந்தி:

என் பெயர் ஆனந்தி. 2007 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் நாள் ஷாம்பவி மஹாமுத்ரா எனக்கு அறிமுகமான நாள். அதற்கு 4 மாதங்களுக்கு முன்பு உடலளவிலும், மனதளவிலும் நான் அனுபவித்தவற்றை இங்கே சொல்லியாக வேண்டும். நலமாகவே இருந்த எனக்குத் திடீரென சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. சிறுநீர் கழிக்கும்போது தாங்க முடியாத வலி இருக்கும். மாதவிடாய் சமயத்தில் ரத்தப்போக்கு மிகவும் அதிகமாக இருக்கும். வயிற்று வலியோ தாங்கமுடியாது.

கோரப்பிடியிலிருந்து ஆனந்தத்தின் மடியில்...

விழுப்புரத்தில் பிரபலமான மருத்துவரிடம் சிகிச்சைக்காகச் சென்றேன். அவர் மருந்து கொடுத்து சிறிது நாட்களுக்கு பிறகு வரும்படிக் கூறினார். அதற்குள் என் நிலைமை இன்னும் மோசமானது. மறுபடியும் அவரிடம் சென்றபோது, ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்று கூறினார். ஸ்கேன் எடுத்துக் கொண்டு சென்றேன். அதைப் பார்த்துவிட்டு உனக்கு வலது சிறுநீரகத்தில் கல் இருக்கிறது; கர்ப்பப்பையில் கட்டி இருக்கிறது என்று சொன்னார். எனக்கு இதயமே நின்றுவிடும் போல் ஆகிவிட்டது.

மருந்துகள் அனைத்தையும் விட்டுவிட்டேன். கர்ப்பப் பையில் கட்டி, புண், கிட்னி கல் இவையெல்லாம் என்ன ஆனது...?! எங்கே போனது...?! தெரியவில்லை.

பின் கிட்னி ஸ்பெஷலிஸ்ட் ஒருவரிடம் சென்றேன். சில காலங்களுக்கு மருந்து சாப்பிட்டு வரச் சொன்னார். நான் தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். ஆனாலும் அதனால் எந்த பயனும் இல்லை. நான் மருத்துவர்களிடம் 15 நாட்களுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என்று திரும்ப திரும்ப சென்றேன். அவர்கள் மீண்டும் மீண்டும் மருந்து மாத்திரைகளைக் கொடுத்தார்கள். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இருப்பதைவிட இறப்பதே மேல் என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டேன். அப்படியே சிறிது காலம் சென்றது. நான் மறுபடியும் மருத்துவரிடம் சென்றபோது, எனக்கு இன்னொரு அதிர்ச்சியான தகவல் காத்திருந்தது. உங்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள புண் ஆறாததால், அது கேன்சராக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அடுத்த முறை வரும்பொழுது கொஞ்சம் சதையைக் கட்பண்ணி பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

எனக்கு உலகமே இருண்டுவிட்டது. நரகம் என்றால் என்ன என்பதை அப்போது உணர்ந்தேன். அந்த சமயத்தில் என் அக்காவின் மகன் சரவணன் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்து கொண்டிருந்தான். அவன் என்னிடம் நீங்களும் இந்த ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்தால், எல்லாம் குணமாகிவிடும் என்று கூறினான்.

என்ன இவன் உளறுகிறான்; இவ்வளவு படித்த மருத்துவர்களாலேயே முடியவில்லை; இவன் என்ன இப்படி சொல்கிறான் என்று முதலில் யோசித்தேன். ஆனால் அவன் வார்த்தைகளில் இருந்த உறுதி என்னை வகுப்பில் சேரத் தூண்டியது. வகுப்பிற்கு சென்ற 2 நாட்களில் எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. இது வரை வாழ்ந்த வாழ்க்கை உண்மை இல்லை. இதையும் தாண்டி ஏதோ ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தேன். அந்த 7 நாட்களும் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாயின. எனக்கு புதியதாக ஒரு வாழ்க்கை கிடைத்தது போல் ஆனந்தமாக இருந்தது. நான் ஷாம்பவி பயிற்சியை தினமும் இரண்டு வேளை தொடர்ந்து செய்தேன்.

20 நாட்கள் சென்று இருக்கும், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்பொழுது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. வழக்கமாக அதிகம் ஏற்படும் ரத்தப்போக்கு சிறிதளவு குறைந்து இருந்தது, வயிற்று வலியால் நான் அனுபவித்த வேதனை கொஞ்சமும் இல்லை. சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலியை நினைத்தாலே பயமாக இருக்கும், அந்த வலியும் இல்லை. எப்படி இந்த மாற்றம் என்னால் நம்பவே முடியவில்லை. இன்றுவரை மருத்துவர்களிடம் செல்லவில்லை, ஆரோக்கியமாக இருக்கிறேன். மருந்துகள் அனைத்தையும் விட்டுவிட்டேன். கர்ப்பப் பையில் கட்டி, புண், கிட்னி கல் இவையெல்லாம் என்ன ஆனது...?! எங்கே போனது...?! தெரியவில்லை.

இப்போது சத்குரு என்ற வார்த்தையைக் கேட்டாலே கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஷாம்பவியின் அற்புதத்தை உணர்ந்த என்னிடம் ஆன்மீகத் தேடலும் அதிகரிக்க, மேல்நிலை வகுப்பாகிய BSPயில் கலந்து கொள்ள ஆசிரமம் சென்றேன். அப்படியே படிப்படியாக ஹடயோகா, சூன்யா, சம்யமா என எல்லா வகுப்புகளையும் செய்தேன். மாதாமாதம் சத்சங்கத்திற்கு செல்வேன். ஷாம்பவி வகுப்பிற்கு வாலண்டியரிங் செல்வேன். இப்படி இருக்கும்பொழுதுதான் ஈஷா வித்யா அறிமுகமானது.

ஒரு முறை, ஷாம்பவி வகுப்பு தன்னார்வத் தொண்டர்கள் மீட்டிங்கில் ஈஷா வித்யா பற்றிச் சொன்னார்கள். நான் உடனே கமிட்டி மெம்பர் பாலா அண்ணாவிடம் இதில் எனக்கு எந்த வேலை இருந்தாலும் கொடுங்கள், நான் செய்கிறேன் என்று கேட்டேன். அப்பொழுது பள்ளிக் கட்டிடமே கட்டவில்லை. ஆசிரியர்கள், பிள்ளைகள் என அப்போதுதான் சேர ஆரம்பித்தார்கள். ஈஷா வித்யா பள்ளியை பற்றி அறிமுகம் செய்வதற்காக, அனைத்து ஊர்களுக்கும் சென்றேன். பிறகு ஒரு வருடம் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் இருந்தேன். அவர்களை கவனமாக வேனில் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த வேலை புதுசு என்பதால் எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், சத்குரு இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும் என்ற உறுதி என்னிடம் இருந்தது. ஆயாம்மா வேலை ஒரே ஆனந்தம்தான்.

இந்த வருடம் நான் கிச்சன் சூப்பர்வைசர். “பிரம்மானந்த ஸ்வரூபா” சொல்லிக் கொண்டே சமையல்; 500 பிள்ளைகளுக்கு தாயாக இருந்து சாப்பாடு பரிமாறுவது; அவர்கள் சாப்பிடும்வரை காத்திருப்பது;

அவர்கள் நன்றாக சாப்பிட்டால், அதை பார்த்துக் கிடைக்கும் ஆனந்தம் என ஒவ்வொரு நாளும் நான் அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

பிள்ளைகளோடு எப்பொழுதும் கொண்டாட்டம்தான். நோயின் கோரப் பிடியில் இருந்த நான், இப்போது ஆனந்தத்தின் மடியில் தவழ்கிறேன். இதைக் கொடுத்த சத்குருவிற்கு நன்றி சொல்வதைவிட அவர் பாதத்தில் என் ஆனந்த கண்ணீர்த் துளிகளை மலர்களாக அர்ப்பணிக்கின்றேன்.

ஆசிரியர் குறிப்பு:

சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த ஷாம்பவி கிரியா கற்றுத் தரப்படுகிறது. ஷாம்பவி கிரியா மிக மிக எளிமையானது. ஆனால், இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும் அதைச் செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. ஆனந்தமானவை.

ஈஷா யோக மையத்தின் சூழல், தங்குமிட வசதி, சக்தியூட்டும் பயிற்சிகள் என ஆனந்தமாய் 2 நாட்கள். உள்நிலையில் பரிபூரண மாற்றத்தை உருவாக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க தயாரா?
சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள்!

டிசம்பர் 17-18, 2016
ஈஷா யோக மையம், கோவை.


மேலும் இந்த வகுப்பு நேரடி ஒளிபரப்பு மூலம் உங்கள் ஊரிலும் நடைபெறுகிறது.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் நிகழ்ச்சிக்குப் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு:
தொலைபேசி: 83000 83111
இ-மெயில்: iycprograms@ishafoundation.org

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1