தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே!

திருமூலரின் இந்தப் பாடல் வரிகள், குருவின் மடியில் 3 நாட்கள் நிகழ்ச்சி முடித்து ஊருக்குத் திரும்பும் தியான அன்பர்களின் முகங்களைக் காணும்போது நினைவுக்கு வந்தது. அந்த ஆயிரக்கணக்கான முகங்களில் தெளிவும் ஆனந்தமும் ஒருசேர நிறைந்திருந்தன.

ஈஷா யோக மையத்தில் ஜூலை 27 முதல் 29 வரை நிகழ்ந்த மூன்று நாட்கள் ‘குருவின் மடியில்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தியான அன்பர்கள் குருவின் மேனியைக் கண்டு, அவரின் ஆழமிக்க கருத்துக்களைக் கேட்டு, அவரின் நாமத்தை உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் குருவின் மடியிலேயே அமர்ந்திருக்கும் பேறும் பெற்றனர் என்பதே நிதர்சனம்.

குரு பௌர்ணமி நாளான ஜூலை 27அன்று காலை முதலே தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பகுதிகளிலிருந்தும் தியான அன்பர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தரத் துவங்கினர். தமிழகத்தில் அந்தந்த உள்ளூர் மையங்களில் பேருந்துகள் மற்றும் வேன்கள், தியான அன்பர்கள் வசதிக்காக முன்பதிவு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முன்னதாக குரு பௌர்ணமியன்று காலையில், ‘நன்மை உருவம்' வழங்கும் நிகழ்ச்சி ஆதியோகி ஆலயத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 3000 பேர் சத்குருவிடமிருந்து நல்வாழ்விற்கான அந்த அற்புதக் கருவியை பெற்றுச் சென்றனர்.

nanmai-uruvam-2018-tamilblogimg

குரு பௌர்ணமியன்று மதியம் 1:30 மணியளவில் துவங்கிய குருவின் மடியில் (தமிழ்) நிகழ்ச்சியில், சுமார் 9,000க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்துகொண்டனர். சம்ஸ்கிருதி மாணவர்களின் தெய்வீக கீர்த்தனைகளோடு துவங்கிய நிகழ்ச்சி, சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி பயிட்டு மற்றும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைமுழக்கம் என உற்சாகத்திற்கு குறைவில்லாமல் அமைந்தது.

அனைவரும் எதிர்பார்த்திருந்த சத்குருவின் வருகை ஆதியோகி ஆலய அரங்கில் நிறைந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களை அருள்வெள்ளத்தில் ஆழ்த்தியது.

எண் கணிதத்தில் முடிவிலி (Infinity) எனும் குறியீடு குறித்து பேசிய சத்குரு, அந்த குறியீட்டின் வடிவியலை அடிப்படையாக வைத்து செய்யப்படுகின்ற ஒரு தியானத்தை அன்பர்களுக்கு வழங்கினார்; இதன்மூலம் ஒருவரை பரவச நிலைக்கு இட்டுச் செல்ல முடியும் என்பதையும் விரிவாக பேசினார்.

சத்சங்கத்தின் இறுதியில் தியான அன்பர்கள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. சங்கரன்பிள்ளை நகைச்சுவைகளோடு தனது கருத்தாழமிக்க பதில்களை சத்குரு வழங்கினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதிசங்கரர் கூடுவிட்டு கூடு பாய்ந்து நிகழ்த்திய அற்புதம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அத்தகைய நிகழ்வு நடந்ததற்கான சுவாரஸ்ய பின்புலத்தை எடுத்துரைத்து, இத்தகைய சூட்சும செயலை செய்வதற்கான சாத்தியம் குறித்தும் விளக்கிப் பேசினார் சத்குரு. கூடவே ஆதிசங்கரரின் மேன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

முன்காலத்தில் பக்தி இயக்கங்கள் தழைத்தோங்கி இருந்ததைப் போல மீண்டும் பக்தியை வளர்த்தெடுக்க முடியுமா என்ற ஒரு கேள்விக்கு, நாம் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு காரண அறிவை வளர்ப்பதன் மூலம் ஆன்மீகத்தை வளர்க்க முடியும் என்பதைத் தெரிவித்தார்.

guruvin-madiyil-tamil-afternoonsession-2018-tamilblog

குரு பௌர்ணமி கொண்டாட்டம்

இரவு ஆதியோகி முன்னிலையில் நிகழ்ந்த குருபௌர்ணமி கொண்டாட்டத்தில், தென்மேற்கு பருவக்காற்று சற்று வேகம் காட்டியதோடு, சாரல்மழையும் அனைவரையும் லேசாக நனைக்க, சத்குருவின் அருள்மழையும் கூடவே பொழிந்தது!

உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த கொண்டாட்டத்தில், சம்ஸ்கிருதி மாணவர்களின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

பல ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய முழு சந்திரகிரகணம் நிகழவிருந்ததால், ஈஷா குருபௌர்ணமி கொண்டாட்டத்தில் கிரகணமும் இணைந்துகொண்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைக்கு பங்கேற்பாளர்கள் அனைவரும் உற்சாக நடனமாடி களித்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கோவை காந்திபுரம்வரை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

gplivesession-tamilblog

இரண்டு நாட்கள் ஆங்கில குருவின் மடியில் நிகழ்ச்சி…

ஜூலை 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்கள், ஆதியோகி ஆலயத்தில் Lap of the Master எனும் குருவின் மடியில் நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நிகழ்ந்தேறியது. இதில் சுமார் 7500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

குருவின் மடியில் - 2வது நாள்

முந்தைய தினம் குருபௌர்ணமி கொண்டாட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளில், அனைவரும் குருவின் மடியில் கரைந்து உருகினர்.

சத்குரு வழிநடத்திய சக்திமிக்க தியானத்தில், புதியதோர் பரிமாணத்தை எட்டிய பரவசத்தில் பலர் அசைவின்றி அமர்ந்திருக்க, சிலர் உணர்ச்சிப்பெருக்கில் கூக்குரலிட்டனர்.

ஆன்மீகம் துவங்கி அரசியல் வரையிலான விஷயங்கள் குறித்து அவரின் சாதுர்யமான பேச்சு, முசுடாக இருப்பவரைக் கூட வாய்விட்டு சிரிக்க வைத்தது.

அளப்பரிய அருளுக்கு பாத்திரமாவதற்கு, எல்லாவற்றையும் "ஏற்றுக்கொள்ளும் தன்மை"யில் இருக்கச்சொல்லி கேட்டுக்கொண்டார்.

பஞ்சபூத விவாஹம் எனும் செயல்முறைக்கான பயிற்சிகள் வரும் டிசம்பர் மாதம்முதல் வழங்கப்படவுள்ளதை தெரிவித்த சத்குரு, இதற்கான பயிற்சியில் ஈடுபடுபவர்கள் நேர்மையுடன் இருப்பது அவசியம் என்பதையும் தெரிவித்தார்.

மூன்றாம் நாள் குருவின் மடியில்…

காலை 5:30 மணிக்கு குரு பூஜையுடன் தொடங்கிய மூன்றாம்நாள் நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ‘யோக நமஸ்காரம்’ பயிற்சியை குறிப்புகளுடன் செய்ததோடு, ஷாம்பவி மஹாமுத்ராவையும் ஒன்றாக பயிற்சி செய்தனர்.

காலை உணவிற்குப் பிறகு 11:30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியில், ஈஷாவின் அடுத்தகட்ட முன்னெடுப்புகள் குறித்து பல்வேறு வீடியோ பதிவுகள் திரையிடப்பட்டன.

மூன்றாம் நாள் மாலைநேர சத்சங்கத்தில் Youth and Truth எனும் புதியதொரு கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இளைஞர்கள் இந்நிகழ்ச்சியில் சத்குருவிடம் பல்வேறு விஷயங்கள் பற்றியும் கேள்விகளை முன் வைக்கலாம். இந்நிகழ்ச்சி இந்தியா முழுக்க கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களிலும் நிகழவுள்ளன.

இதன் முன்னோட்டமாக மூன்றாம் நாள் குருவின் மடியில் சத்சங்கத்தில், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சிலர் தங்கள் கேள்விகளை சத்குருவிடம் வீடியோ பதிவுகள் மூலம் முன்வைத்தனர். திரையிடப்பட்ட அந்த வீடியோ பதிவில், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு தன் பதில்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களும் தங்கள் கேள்விகேட்கும் ஆர்வத்தை வெளிப்படுத்த, அவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

lapofmasterday1-2018-tamilblog

முன்னதாக, குருவின் மடியில் ஒருவர் தினமும் இருப்பதற்கு தான் வழங்கியுள்ள ஒரு அற்புத வாய்ப்பு குறித்து சத்குரு பேசினார். தினமும் காலை மற்றும் மாலை 6:20 மணி முதல் 6:30 மணிவரை எவ்விடத்தில் இருந்தாலும் கண்களை மூடி, திறந்த நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்காக தான் அதிக அளவில் சக்தி செலவிட்டிருப்பதாகவும், ஈஷா தியான அன்பர்களுக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள அனைவருக்குமே இது வேலைசெய்யும் என்பதையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்பாளர்கள் மத்தியில் ஆனந்தக்கண்ணீர் மல்க நடந்துசென்று ஆசி வழங்கிய சத்குரு, மல்லிகை மலர்களை தன் கரங்களால் சக்தியூட்டி அன்பர்கள் அனைவருக்கும் வழங்கி விடைபெற்றார்.

சத்குரு உடனான சிறப்பு குரு பௌர்ணமி சத்சங்கத்தின் வீடியோ பதிவு https://www.youtube.com/watch?v=y7d1i08mC5k&t=4s

சத்குரு App. மூலம் சத்குருவுடன் தொடர்பில் இருங்கள். எங்கேயும் எப்போதும்! இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்... இலவசமாக