களரியில் 40 பதக்கங்கள் வென்ற சமஸ்கிருதி மாணவர்கள்!
 
 

இந்த வார ஈஷாவில் நடந்தவை உங்களுக்காக...

களரியில் 40 பதக்கங்கள் வென்ற சமஸ்கிருதி மாணவர்கள்!

கோவை KPR கல்லூரி வளாகத்தில், ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்களும் LOOP (Live On Potential) மற்றும் KPR ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 25 வகையான விளையாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இதில் ஈஷா சமஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிபயட்டு போட்டியில் கலந்து கொண்டார்கள்.

தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் 21 தங்க பதக்கங்களையும், 10 வெள்ளி பதக்கங்களையும், 9 வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்கள். 13 மாணவர்களும், 10 மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டு இவ்வெற்றியைப் பெற்றனர். கலந்துகொண்ட அனைத்து போட்டிகளிலும் ஈஷா சமஸ்கிருதி மாணவர்களே முதல் நிலையை அடைந்தார்கள். ஒட்டுமொத்த சாம்பியன் விருதையும் இவர்கள் அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காமன் வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற திரு.ஓம்கார் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

மாணவர்களுக்கு கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம்

govt-school-summer-camp

சென்னை அணுமின் நிலையம் மற்றும் ஈஷாவின் அரசு பள்ளிகள் தத்தெடுப்பு திட்டம் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் சுற்றுவட்டாரத்திலுள்ள சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டிணம், வெங்கம்பாக்கம் மற்றும் மணமை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு கற்றலை இனிமையாக்கும் பயிற்சி, தனித்திறன் மேம்பாடு, விளையாட்டு ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, யோகா பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கிவருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் ஏப்ரல் 23 முதல் 26 வரை மாணவர்களிடம் உள்ள மாற்று அறிவுத்திறனை வெளிபடுத்த கலை, கைவினைப் பொருட்கள், விளையாட்டு, நாடகம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை குறித்த விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1