ஈஷா ருசி

சூடான பானம் தரும் புத்துணர்விற்கு ஈடுஇணைதான் ஏது? இதோ நீங்கள் சுவைக்க, நொடியில் சமைக்க சத்தான காளான் சூப் மற்றும், நூடுல்ஸ் சூப். உங்கள் வீட்டிலும் ட்ரை பண்ணிப் பாருங்கள்!

காளான் சூப்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்:

காளான் - 100 கிராம்
தண்ணீர் - 1/2 லிட்டர்
ஆப்பிள் தக்காளி - 2 (வேக வைத்து அரைத்து வடிகட்டியது)
வெள்ளை மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
கான்பிளவர் - 25 கிராம்
பால் - 50 மில்லி

செய்முறை:

  • தண்ணீரில் காளானை வேக வைத்து வெந்தவுடன் தக்காளி பேஸ்ட்டை ஊற்ற வேண்டும்.
  • கொதித்தவுடன் வெள்ளை மிளகுத்தூள், உப்பு, சர்க்கரை வெண்ணெய், கான் பிளவர் மாவு போட்டு கொதிக்க வைக்கவும்.
  • இறுதியாக பால் ஊற்றி இறக்கவும்.

நூடுல்ஸ் சூப்

Noodles soup

தேவையான பொருட்கள்:

சைனீஸ் நூடுல்ஸ் - 50 கிராம்
கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கீரின் பீன்ஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முட்டைக்கோஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
வேக வைத்த தக்காளி - 4 பீஸ் (அரைத்து வடிகட்டவும்)
வெள்ளை சர்க்கரை - 20 கிராம்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
பால் - 1/2 டம்ளர்
கான்பிளவர் - 100 கிராம்

செய்முறை:

  • ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி கேரட், கீரின் பீன்ஸ், முட்டைக்கோஸை நன்றாக வேக வைக்கவும்.
  • வெந்தவுடன் சைனீஸ் நூடுல்ஸ் போட்டு, அரைத்து வைக்கப்பட்ட தக்காளி பேஸ்ட், கான் பிளவர் போட்டு கொதிக்க வைக்கவும்.
  • இறுதியாக மிளகுத்தூள், உப்பு, வெள்ளை சர்க்கரை, பால் ஊற்றி இறக்கிப் பருகலாம்.