ஜவ்வரிசி போண்டா !
குளிர்காலத்தின் மாலை நேரங்களிலும், இரவு வேளைகளிலும் சூடாக ஏதோவொன்றை கொரிப்பவர்களுக்கு, ரோட்டோரங்களில், தள்ளு வண்டிகளில் கிடைக்கும் போண்டாக்களும், பஜ்ஜிகளும் ஒரு விருந்துதான். இதையே ஜவ்வரிசியையும், வாழைப்பழத்தையும் வைத்து வீட்டில் தயாரித்து பாருங்கள்... போண்டாக்கள் ரெடி!
 
 

ஈஷா ருசி

குளிர்காலத்தின் மாலை நேரங்களிலும், இரவு வேளைகளிலும் சூடாக ஏதோவொன்றை கொரிப்பவர்களுக்கு, ரோட்டோரங்களில், தள்ளு வண்டிகளில் கிடைக்கும் போண்டாக்களும், பஜ்ஜிகளும் ஒரு விருந்துதான். இதையே ஜவ்வரிசியையும், வாழைப்பழத்தையும் வைத்து வீட்டில் தயாரித்து பாருங்கள்... போண்டாக்கள் ரெடி!

ஜவ்வரிசி போண்டா

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 1 கப்
புளித்த தயிர் - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
கார்ன்பிளவர் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு
மல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 250 மிலி

செய்முறை:

ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும். பின்னர் அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, கான்பிளவர் மாவு, இஞ்சி, மிளகாய் தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா. நன்கு கொர கொரவென்று பொரிந்து வரும் என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பர்.

வாழைப்பழ போண்டா

தேவையான பொருட்கள்:

மைதா - 100 கிராம்
பால் பவுடர் - 50 கிராம்
ரவை - 50 கிராம்
வாழைப்பழம் - 2
வெள்ளை சர்க்கரை (அ) வெல்லம் - 100 கிராம்
நெய் - 50 கிராம்

செய்முறை:

மைதா மாவையும், பால் பவுடர், ரவை, வாழைப்பழம் இவை அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாகப் பிசைய வேண்டும். பின்பு வெள்ளை சர்க்கரை மற்றும் நெய் சிறிது தளர சேர்த்து பிசைந்து எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். (அதிகம் தண்ணீர் சேர்த்தால் போண்டா அதிகம் எண்ணெய் எடுக்கும்) (குறிப்பு: மைதாவிற்கு பதிலாக கோதுமையையும் பயன்படுத்தலாம்)

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1