ஈஷா யோக மையத்தின் யக்ஷா கொண்டாட்டத்தில் சித்திரவீணை N ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி
யக்ஷா கொண்டாட்டங்களின் மூன்றாம் நாளான இன்று பிரபல வாத்தியக் கலைஞர் சித்திரவீணை என். ரவிகிரண் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தனது மெட்டுகளால் அரங்கிலிருந்தவர்களை பிரமிக்க வைத்ததை குறித்து இப்பதிவில் காண்போம்.
 
 

சித்திரவீணை என் ரவிகிரண் அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த வாத்தியக் கலைஞர்களில் ஒருவர். இரண்டு வயதில், சென்னை மியூசிக் அகாடமி மேடையில் தனது நிகழச்சியை அரங்கேற்றி, உலகையே தன்னை திரும்பிப் பார்க்கச் செய்தவர். அப்போதே 325 ராகங்களையும் 125 தாளங்களையும் அடையாளம் கண்டு, அதனை பாடக்கூடிய திறன் பெற்றிருந்தவர்.

"மெல்ஹார்மனி" எனும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பினை படைத்து, உலகிற்கு வழங்கிய பெரும்புகழ் இவரையே சேரும். சென்னை மியூசிக் அகாடமியிடமிருந்து "சங்கீத கலாநிதி" விருதினை வென்ற பெருமைக்குரிய கலைஞர் இவர்.

சத்குரு முன்னிலையில் மாலை 6:30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சிகளில் திரு ரவிகிரண் அவர்களுடன் குமாரி அக்கரை சுப்புலட்சுமி அவர்கள் வயலினிலும் மிருதங்கத்தில் பத்ரி ஸ்ரீ சதீஷ்குமார் அவர்களும் கடத்திற்கு திரு. கடம் கார்த்திக் அவர்களும் இணைந்திருந்தனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற நிகழ்சியில் தனது இசையால் அனைவரையும் கவர்ந்தார் திரு ரவிகிரண். நிஷப்தமாக இருந்து அனைவரும் அவரின் இசையை கேட்டு ரசித்தனர். பல நுட்பமான ராகங்களை தனக்கே உரிய பாணியில் அனைவரும் ரசிக்கும் வகையில் இசைத்து அனைவருக்கும் அருமையான இசையனுபவத்தை வழங்கினார். "பாபநாசம் சிவன்" குறித்த கீர்த்தனைகளையும் பாடினார்.

ஒருபுறம் குமாரி அக்கரை சுப்புலட்சுமி அவர்களின் வயலினும் மறுபுறம் மிருதங்கத்தில் திரு. சதீஷ்குமார் அவர்களும் திரு. கடம் கார்த்திக் அவர்களும் சிறிதும் இளைக்காமல் அவருக்கு ஈடுகொடுத்து நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக எடுத்துச் சென்றனர். இறுதியாக தில்லானா மற்றும் மங்களம் பாடி தனது இசை நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சித்ரவீணை என். ரவிகிரண். பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷங்கள் எழுப்பி அவரது இசைக் குழுவினரின் இசை ஆனந்ததை உணர்ந்து சென்றனர்.

நிகழ்ச்சி குறித்து சத்குரு கூறுகையில், "உணர்வுபூர்வமான நிறைவு இந்த யக்ஷா 2018 நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது. ரவிகிரண் அவர்களின் குழு அற்புதமான வகையில் தங்களின் முழு திறனுடன் இசையை வெளிப்படுத்தியது. இப்பொழுது நம்மிடமும் ஒரு "ஜிம்மி ஹன்ட்ரிக்ஸ்" இருக்கிறார், கார்த்திக் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு மஹாசிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று வாசித்தார், பின்னர் இன்னொரு முறையும் பங்கேற்றார் இப்போது மீண்டும் 2018 யக்ஷாவில் பங்கேற்றுள்ளார், அவர் இங்கு வாசிப்பதை பார்க்க மிகவும் சந்தோஷமாகவுள்ளது. அவரின் இசை மேம்பட்டுள்ளது அவரும் பெருத்துக் கொண்டே செல்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக என்ன ஒரு அற்புதமான ரசிகர்கள் நீங்கள் எல்லோரும்" மிக்க நன்றி! இதனுடன் யக்ஷா 2018 கொண்டாடங்கள் நிறைவடைந்தன.

குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1