லிங்கபைரவியில் நவராத்திரி கொண்டாட்டங்கள்
லிங்கபைரவி கோயிலில் நடைபெற்ற நவராத்திரிக் கொண்டாட்டங்களின் வண்ணமயமான புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு உங்களுக்காக...
 
 

ஈஷா யோகா மையத்தில் இந்த நவராத்திரித் திருவிழாவின்போது புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் பல்வேறு சாஸ்திரிய இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அக்டோபர் 24ம் தேதி விஜயதசமி அன்று சுமார் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு லிங்கபைரவி கோயிலில் வித்யாரம்பம் (எழுத்தறிவித்தல்) இனிதே நடைபெற்றது. மாலையில் அம்பிகையின் அருளால் ஆதிசங்கரர் 'சௌந்தர்ய லஹரி'யை உலகிற்கு அளித்ததை ஈஷா சம்ஸ்க்ருதி குழந்தைகள் நாட்டிய நாடகமாக சிறப்புற வழங்கினார்கள்.

ஈஷாவின் நவராத்திரிக் கொண்டாட்டங்களின் பத்து நாட்களும் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். இந்நாட்களில் ஈஷா யோகா மையம் முழுவதும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த மக்களுக்கு சிறப்பு அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

Isha is always good.What ever happen in Isha is wondeful