ஈஷாவில் நடந்தவை…
கடந்த 7 நாட்களில் ஈஷாவில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை அறிவதென்பது கட்டாயம் ஆவல் நிறைந்ததுதான். அந்தவகையில் இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் கடந்த வார ஈஷா நிகழ்வுகள் உங்கள் ஆவலை நிச்சயம் பூர்த்தி செய்யும். தொடர்ந்து படித்து நிகழ்வுகளை அறியுங்கள்!
 
 

கடந்த 7 நாட்களில் ஈஷாவில் என்னென்ன நிகழ்ந்தன என்பதை அறிவதென்பது கட்டாயம் ஆவல் நிறைந்ததுதான். அந்தவகையில் இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் கடந்த வார ஈஷா நிகழ்வுகள் உங்கள் ஆவலை நிச்சயம் பூர்த்தி செய்யும். தொடர்ந்து படித்து நிகழ்வுகளை அறியுங்கள்!

உலக பூமிதினத்தில் வானொலி பத்திரிக்கையாளருடன் சத்குரு

உலக பூமி தினத்தையொட்டி, அமெரிக்காவின் பிரபல வானொலி பத்திரிக்கையாளர் திரு. பில் ஜெக்மன் அவர்களுடன் சத்குரு மேற்கொண்ட கலந்துரையாடலின் தொகுப்பு முத்தாய்ப்பாய் அமைந்தது. இயற்கை குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் பில் ஜெக்மனின் கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை வழங்கியது. இந்த கலந்துரையாடலின் பதிவை இந்த வார சத்குரு ஸ்பாட்டில் காணலாம்!

1

ஈஷா வித்யாவுடன் Cisco நிறுவன ஊழியர்கள்!

பெங்களூரில் உள்ள Cisco India நிறுவன ஊழியர்கள் ஏப்ரல் 25ம் தேதியன்று ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் கணிதம் மற்றும் ஆங்கில அறிவை வளர்ப்பதற்கான உபகரணங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த உபகரணங்களைப் பயன்படுத்தி விளையாட்டு மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படும். 9 ஈஷா வித்யா பள்ளிகளைச் சேர்ந்த 5200 குழந்தைகள் இதனால் பயன் பெறுவர்.

ஈஷா வித்யா நிர்வாகப் பணியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

கோவை ஈஷா வித்யா பள்ளியில் ஏப்ரல் 27 முதல் 29 வரை, 3 நாட்கள் நடைபெற்ற பயிற்சி பட்டறையில், 9 ஈஷா வித்யா பள்ளிகளைச் சேர்ந்த 26 நிர்வாகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த மூன்று நாட்களும் தங்களின் நிர்வாகத் திறனையும் செயல்திறனையும் மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் தங்களுக்குள் கலந்துரையாடினர். இந்தப் பயிற்சி வகுப்பு வெறும் பயிற்சி பெறும் நோக்கில் மட்டும் இல்லாமல், பணியாளர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாவதற்கும் வழிவகுத்தது. பயிற்சியின் இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளும், ஆழியாறு அணைக்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றுலாவும் பங்கேற்பாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாய் அமைந்தன.

ஈஷா வித்யா ஆசிரியருக்கு 'கரடி பாதை' கற்பித்தல் விருது

கற்பித்தல் வழிமுறையில் எளிமையாக, அதே சமயம் ஆர்வத்தை தூண்டும் வகையில் புரிய வைப்பது கரடிபாதை கற்பித்தல் வழிமுறையாகும். இது மாணவர்களின் கற்றல், எழுதுதல் மற்றும் வாசித்தல் செயல்முறையை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த 'கரடி பாதை' ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடலூர் ஈஷா வித்யாவைச் சேர்ந்த திரு.கனகராஜ் அவர்கள் கரடி பாதை ஆசிரியருக்கான மூன்றாம் பரிசை பெற்றுள்ளார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈஷா வித்யா ஆசிரியருக்கு 'கரடி பாதை' கற்பித்தல் விருது, Isha Vidhya asiriyarukku karadi pathai karpithal viruthu

செம்மேடு முத்துமாரியம்மன் பூச்சாட்டலில் ஈஷா

செம்மேடு கிராமத்தின் பெண் தெய்வமான முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சாட்டல் திருவிழா மே 2ஆம் தேதியன்று சிறப்பாக துவங்கப்பட்டது. ஊர்ப் பெரியவர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஈஷா சார்பில் 'சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா' இசை நிகழ்ச்சியும் ஈஷா கலைக் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றன. விழாவைச் சிறப்பித்து தந்த ஈஷாவிற்கு ஊர் மக்கள் அனைவரும் நெகிழ்ச்சியோடு தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.

10

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1