ஈஷாவில் நடந்தவை...

திருப்பூரில் ஒரு சொட்டு ஆன்மீகம், ஈஷாவிற்கு வழங்கப்பட்ட சிறப்பு விருது என ஈஷாவில் நடந்த நிகழ்வுகள் இங்கே உங்களுக்காக...
ishavil-nadanthavai-28072013
 

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு சிறப்பு விருது

ஜூலை 13ம் தேதி, ஹைதராபாத்தில், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் சமூக நல செயல்பாட்டை பாராட்டி, LASSIB என்ற அமைப்பு LASSIB சங்கத்தின் இந்திய சிறப்பு விருது அளித்து கௌரவப்படுத்தியுள்ளது.

திருப்பூரில் ஈஷா க்ரியா

கோவை, ஈரோட்டைத் தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் இலவச ஈஷா க்ரியா பயிற்சி நடைபெற்றது. ஜூலை 27ம் தேதி காலை 9 மணிக்குத் துவங்கிய இந்த யோகா முகாமை, மாண்புமிகு தமிழக வனத்துறை அமைச்சர்.M.S.M.ஆனந்தன் அவர்கள் துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் 150 பேர் கலந்துகொண்டனர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1