ஈஷாவில் நடந்தவை

காய்கறிகள் தினத்தைக் கொண்டாடிய ஈஷா வித்யா பள்ளி, மாணவர்கள் மூலம் மரக் கன்றுகளைக் கொண்டு சேர்க்கும் பசுமைக் கரங்கள் என்று விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...
ishavil-nadanthavai-25082013
 

காய்கறிகள் தினம்
விழுப்புரம் ஈஷா வித்யா பள்ளியில், ஆகஸ்ட் 21ம் தேதியன்று "காய்கறிகள் தினம்" கொண்டாடப்பட்டது.. புவி வெப்பமடைதலைப் பற்றியும், நம் பூமியிலுள்ள இயற்கை வளங்களெல்லாம் அழிக்கப்படாமல் அடுத்த தலைமுறையினருக்கு வழங்க வேண்டும் என்பதைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த தினம் அமைந்தது. பள்ளியின் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் வீட்டிலிருந்து சில காய்கறிகளை வகுப்பிற்கு கொண்டு வந்து இந்த காய்கறிகள் தினத்திற்கு மணம், குணம் சேர்த்தனர்.

பசுமைக் கரங்கள்
தமிழ்நாட்டின் பல பகுதிகளை தன் பணியின் மூலம் தொடர்ந்து பசுமையாக்கிக் கொண்டிருக்கிறது நம் பசுமைக் கரங்கள் திட்டம்...

111

திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் பெரம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகளுக்கு, மரம் நடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 600 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

222

திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 2 ஆரம்பப் பள்ளிகள், 12 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 2 இளைஞர் மன்றங்களைச் சேர்ந்த 3800 மாணவர்களுக்கும், 200 இளைஞர்மன்ற உறுப்பினர்களுக்கும், மரம் நடுவதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 4150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

isha vidhya, education, marathon, run for isha vidhya, sadhguru, isha, project green hands, pgh, environment

பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் உள்ள சின்னாத்தா அரசு மேல்நிலைப் பள்ளி, ஃபாத்திமா மேல்நிலைப் பள்ளி, வா.ஊ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சௌசிலாபாய் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 192 மாணவ மாணவியர்கள் புதுவையின் தாவரவியல் பூங்காவில் பசுமைக் கரங்கள் சார்பில் நர்சரி உருவாக்கும் செயலில் ஈடுபட்டனர்.