11 aug 13 mid 3

11 aug 13 mid 4

 உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் கூட்டம்

தமிழகத்தின் உழவர்களை ஒன்றுபடுத்தி ஆங்காங்கே அமைப்புகள் உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்துவருகிறது. இதன் முக்கிய அமைப்பான உழவர் உற்பத்தியாளர் அமைப்பு (Farmers Producers Organisation - FPO) வின் சார்பில் தொடங்கப்பட்ட வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் குழுக்கூட்டம் ஈஷா யோகா மையத்தில் ஆகஸ்ட் 7ம் தேதி நடந்தது. இதில் 115 விவசாய உறுப்பினர்கள் கலந்துகொண்டு வருங்கால திட்டங்களைப் பற்றி விவாதித்தனர்.

11 aug 13 mid 1

ஈஷாவில் டொரொன்டோ மாணவர்கள்

டொரொன்டோ நகரில் உள்ள கிரீன்வுட் காலேஜ் ஸ்கூலிலிருந்து 11 மாணவர்களும் 2 ஆசிரியர்களும், கோவையில் கிராமப்புற பள்ளியில் தன்னார்வத் தொண்டு செய்ய வந்தவர்கள் அப்படியே ஜூலை 24ம் தேதி ஈஷா யோகா மையத்தை சுற்றிப் பார்க்க வந்தனர். வந்தவர்கள், லிங்கபைரவி, தீர்த்தக்குண்டம், தியானலிங்கம், நாத ஆராதனா அனைத்திலும் மூழ்கி எழுந்து ஈஷா கிரியாவும் கற்றுக் கொண்டனர். வரும்பொழுது சற்றே சந்தேகத்துடன் அனைத்தையும் பார்த்த மாணவர்கள், கிளம்புவதற்கு முன், ஈஷா, சத்குரு, யோகா பற்றி மேன்மேலும் கேள்வி கேட்டு, நிறைய தெரிந்து கொள்ள விரும்பினர். ஆசிரியர்களும் மிக சந்தோஷமாக அடுத்தமுறை இன்னும் பல நாட்கள் ஆசிரமத்தில் தங்க விரும்புவதாக தெரிவித்தனர்.

11 aug 13 mid 2


கைலாஷ் மானஸரோவர் புனிதப் பயணம்

ஆகஸ்ட் 6 ஆம் தேதி இந்த வருடத்திற்கான முதல் குழு இப்புனிதப் பயணத்தில் புறப்பட்டது. 500 க்கும் மேற்பட்டோர் இப்பயணத்தில் செல்வதால், இது வரை இப்புனிதப் பயணத்தை மேற்கொண்ட குழுக்களிலே மிகப் பெரிய குழு என்ற பெயரும் ஈஷா பெறுகிறது. இது மட்டுமில்லாது சத்குருவுடன் மிகக் கடினமான மலை ஏற்றத்தில் 15 பேர் செல்கின்றனர். மிகப் பயங்கரமான மலைப் பாதையில், எவ்வித வாகன உதவியும் இல்லாமல், தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே சுமந்து கொண்டு, இந்தக் குழு துணிந்து சத்குருவுடன் சென்றிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.