புதிதாக உதயமாகியுள்ள ஈஷா மையத்தைப் பற்றியும், பசுமைக் கரங்களின் மற்றுமோர் இனிய செயலும், இந்த வார ஈஷாவில் நடந்தவையில்...

கோவையில் ஈஷா மையம் உதயம்
ஈஷா யோகா மையம் சார்பாக கோவை சாய்பாபா காலனியில் புதிதாக ஒரு தியான மண்டபம் திறக்கப்பட்டது. டிசம்பர் 1ம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட தியான அன்பர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி, குரு பூஜையுடன் ஆரம்பித்து, தொடர்ந்து ஈஷா கிரியா தியானமும் நடைபெற்றது.வரும் நாட்களில், இந்த தியான மண்டபம் ஈஷாவின் செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. மாதாந்திர தியான சத்சங்கமும், ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 முதல் 8 மணிவரை, பொதுமக்களுக்காக இலவச ஈஷா கிரியா தியானமும் இங்கு கற்றுத்தரப்படும். மேலும் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஈஷா யோகா வகுப்புகளும் நடைபெறவுள்ளது. இந்த தியான மண்டபம், தினமும் மாலை 6 முதல் 9 மணி வரை ஈஷா தியான அன்பர்களுக்காக திறந்திருக்கும். மேலும் ஒவ்வொரு ஞாயிறன்றும், தியான அன்பர்கள் இங்கே ஒன்றுகூடி யோகப் பயிற்சிகள் செய்வர்.முகவரி: ஈஷா யோக மையம், வி.கே.கே மேனன் ரோடு, பி.என்.டி பஸ் நிலையம் அருகில், சாய்பாபா காலனி, கோயம்புத்தூர்தொலைபேசி: திரு. ரவி 99446 22111

8 dec 13 mid 1

இலவச மரக்கன்றுகள் பிரபல ஹனிவெல் கம்பெனியின் சார்பாக, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1200 மாணவர்களுக்கு சுமார் 1400 மரக்கன்றுகள் பசுமைக் கரங்கள் திட்டம் இலவசமாக விநியோகித்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.