ஈஷாவில் நடந்தவை...
ஒரு புறம் குருவின் மடியில் - சத்குருவுடனான ஆங்கில சத்சங்கம் மையத்தில் நடந்துகொண்டிருக்க, இன்னொரு புறம் சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகாவிற்கான செயல்கள் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்க, ஈஷாவில் நடந்த பிற நிகழ்வுகளையும் உங்களுக்காக இங்கே பதிகின்றோம்...
 
 

AnandaAlai-HyderabadMarathon-8thSep2013-4

AnandaAlai-HyderabadMarathon-8thSep2013-3

AnandaAlai-HyderabadMarathon-8thSep2013-2

ஹைதராபாத் மராத்தான்

ஈஷா வித்யா பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, அதன் நலன்விரும்பிகள் பலர் இந்தியப் பெருநகரங்களில் மராத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு நிதி திரட்டுவது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அவ்விதத்தில் ஆகஸ்ட் 25ம் தேதியன்று ஹைதராபாத்தில் நடந்த 21கி.மீ "ஏர்டெல் ஹைதிராபாத் மராத்தான்" ஓட்டத்தில், ஈஷா வித்யாவிற்காக 170 பேர் கலந்துகொண்டு ஓடினர். இரு 10 வயது குழந்தைகள் 5 கி.மீட்டரும், இரு 12 வயது குழந்தைகள் 21 கி.மீட்டரும் ஓடிக்கடந்தனர். திருமதி.மாலதி அவர்கள், தான் அணிந்திருந்த புடவையுடன் 21 கி.மீட்டரில் 16 கி.மீட்டர் தூரத்தை ஓடிக்கடந்து தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். தில்லி மற்றும் சென்னை ஆதரவாளர்கள் ஆங்காங்கே மாராத்தான் ஓட்டத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான உங்கள் ஆதரவையும் தெரிவிக்க, del.marathon@ishavidhya.org and chn.marathon@ishavidhya.org எழுதவும்.

AnandaAlai-greenschoolmvmt-8thSep2013-4

AnandaAlai-greenschoolmvmt-8thSep2013-5

AnandaAlai-greenschoolmvmt-8thSep2013-6

பசுமை பள்ளி இயக்கம் - திட்டவிளக்க நிகழ்ச்சி

செப்டம்பர் 4ம் தேதியன்று, திருச்சியில் ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்திற்கான திட்டவிளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முக்கிய விருந்தினர்களாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திரு. செல்வகுமார் அவர்களும், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தலைமை ஆய்வாளர் திருமதி.வசந்தா அவர்களும் கலந்துகொண்டனர். சுமார் 400 பள்ளிகளிலிருந்து வந்திருந்த பள்ளி முதல்வர்களுக்கும், சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கும் இத்திட்டத்தைப் பற்றி விளக்கப்பட்டது. வரும் அக்டோபரில், திருச்சி பசுமைப் பள்ளி இயக்கம் தொடங்கப்படவுள்ளது.

AnandaAlai-SholingarNursery-8thSep2013-1

AnandaAlai-SholingarNursery-8thSep2013-2

AnandaAlai-SholingarNursery-8thSep2013-3

ஈஷா கிரியா

ஈஷா பசுமைக் கரங்களின் சோழிங்கர் நர்சரியில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மரம் நடுதல் பற்றின விழிப்புணர்வும், ஈஷா கிரியா தியானமும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் 40 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1