நம் தன்னார்வத் தொண்டர்களின் ஆர்வத்தால் முளைத்திருக்கிறது மற்றுமொரு அற்புதத் திட்டம். இதை பல பேரிடம் கொண்டு சேர்க்கும் முன்னோடியாய் இருக்கும் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, தன் அனுபவத்தை இங்கு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். என்ன திட்டம்? மேலும் படியுங்கள்!

மரபின் மைந்தன் முத்தையா:

பசுமாடுகளின் பாஷை புரிந்த ஒருவர் மாட்டுமனை அருகே மெல்ல உலவிக் கொண்டிருந்தார். அவ்வப்போது அவர் முகத்தில் புன்னகை பூத்துப் பூத்து அடங்கியது. அருகே சென்று நமஸ்காரம் சொன்னேன். "சத்குரு அடிக்கடி புன்னகை செய்யச் சொன்னதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?" என்றேன்.

அதற்கும் ஒருமுறை அகலப் புன்னகைத்துவிட்டு அவர் சொன்னார், "மனித உணர்வுகள் எல்லாம் பசுக்களுக்கும் உண்டு என்று சத்குரு சொன்னது எவ்வளவு உண்மை தெரியுமா? பசுக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டேன். தம்மிடம் இருந்து பால் கறக்கப்படும்போதெல்லாம் தாய்மை உணர்வு பொங்கி வருகிறதாம்! கன்றின் வாய்க்கும் கறக்கும் கைகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவு தாய்மை உணர்வில் அவை திளைக்கிறதாம்!" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பசுக்களை கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு மெல்ல நகர்ந்தேன். நாம் ஈஷாவை தாய்ப்பசுவாகவும் நம்மை கன்றுக்குட்டிகளாகவும் பலநேரம் உணர்ந்திருக்கிறோம். இப்போது சத்குருவின் கருணையால் ஈஷாவை கன்றாகவும் நம்மை தாய்ப்பசுவாகவும் உணரும் அரிய பாக்கியம் அமைந்திருக்கிறது.

அதுதான் மைஷேர் திட்டம். நம் வழக்கமான மாதாந்திர செலவுகளை செய்வதன் மூலமாகவே ஈஷாவுக்கு உதவும்போது கன்றுக்குப் பாலூட்டும் தாய்ப்பசுவின் நிறைவு நமக்கு வருகிறது.

சமீபத்தில் முக்கியமான இரண்டு திருமணங்கள். வெள்ளிப் பொருட்களைப் பரிசாக வாங்கித் தரத் தோன்றியது. ஈஷா மைஷேர் திட்டத்தில் இணைந்திருக்கும் நகைக்கடை எதுவென்று தேடினேன். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள பவித்ரம் ஜுவல்லரியின் பெயர், பட்டியலில் இருந்தது. உள்ளே நுழைந்ததும் "மைஷேர் கார்ட்ஸ் அக்செப்டட்' என்னும் அறிவிப்பு வரவேற்றது. வெள்ளிப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து பணம் செலுத்தி ஈஷா மைஷேர் கார்டையும் கொடுத்து பரிசுப் பொட்டலங்களுடன் வெளியே வருவதற்குள் செல்ஃபோனில் ஒரு குறுஞ்செய்தி!! இந்தப் பொருட்களை வாங்கியதன் மூலம் ஈஷாவுக்கு என்ன தொகை சென்று சேரும் என்ற விபரம் மழையாய் மனதைக் குளிரச் செய்தது. எந்த திருமணங்களுக்காக வாங்கினேனோ அந்த ஜோடிகளுக்கும் ஈஷாவின் ஆசீர்வாதம் சென்று சேர்ந்திருக்கும் என்னும் எண்ணம் என்னை இன்னும் நெகிழச் செய்தது.

கன்றுக்குப் பாலூட்டும் தாய்ப்பசுவாய் கணநேரம் உணரச் செய்தது ஈஷாவின் மைஷேர் திட்டம். பாவஸ்பந்தனா வகுப்பின் விளைவாய் நான் எழுதிய கவிதை வரிகள் எனக்குள் மீண்டும் எதிரொலித்தன.

"பசுக்களின் பார்வையில் பூமி முழுவதும்
பாலுக்கழுகிற கன்றாய்த் தெரியும்
பசுக்களின் பார்வை மனிதனுக்கிருந்தால்
பூமி முழுவதும் பாலாய்ச் சொரியும்."

தாய்ப்பசுவுக்குப் பாலூட்ட தயாராகுங்கள் கன்றுக்குட்டிகளே!!

ஈஷா மைஷேர் திட்டத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது அதில் ஒரு பகுதி ஈஷாவிற்கு நன்கொடையாக வந்து சேரும். இந்தத் திட்டம் வழக்கத்தில் உள்ள கடைகளில் ஈஷா மைஷேர் கார்டின் மூலம் பொருட்களை வாங்கலாம். அதன் மூலம் உங்கள் பொருளுக்கு பொருள், அதே சமயம் ஈஷாவின் சமூக திட்டங்களுக்கு நிதி வழங்கிய நிறைவும் கிட்டும்.

விவரங்களுக்கு: MyShare
ஈஷா மைஷேர் திட்டத்தில் இணைய விரும்புவோர்: +91 844 844 7707

travelindiasmart.com